Header Ads



மூதூரில் பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்துநிறுத்த கையெழுத்து சேகரிப்பு (படங்கள்)



(மூதூர் முறாசில்)

மூதூர் பீஸ்-ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ்-ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதை நிறுத்தக் கோரி  கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற  சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையில்  பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக் கோரி பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு   மகஜர் ஒன்றை அனுப்புவதற்காகவே பொது மக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்படுகின்றன.

பொது மக்கள் கையெழுத்திடும் முயற்சியில்   பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக மஜ்லிஸ் அஸ்-ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி தெரிவித்தார். 






8 comments:

  1. Assallamu allaikkum all brothers and sister's , pls continue to the signature.

    ReplyDelete
  2. முதல் இருக்கும் இலச்சர் களிடம் நாம் இனி சீதனம் மற்றும் சீர்வர்சை வான்க மட்டும் எதிர்பார்க மாட்டோம் என்று சத்திய பிரமானம் வான்குங்கள்.

    ReplyDelete
  3. மிகவும் நல்ல முயற்சி ஆனாலும் இந்த பெண்கள் ஏன் வெளிநாடு போகிறார்கள் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வு எடுக்கப்படவேண்டும் அப்போதுதான் இந்த முயற்சி வெற்றி என்று கருதலாம் , நன்றி

    ReplyDelete
  4. ithanai alla maavaddaggalilum kaddayam saithal oru padippinayaha irukkum welcome

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    மிகவும் பாராட்ட தக்க முயற்சி...அனால் கையெழுத்து எடுப்பவர்கள் .வெளிநாடு செல்லக் காரணமாயிருக்கும் வறுமையை இல்லாதொழிக்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள் ..அதற்காக எங்கே கைஎளுதிட்டுள்ளார்கள்...???எது காரணமாக இருக்கிறதோ அதை இல்லாமலாக்க முயற்சிகள் திட்டங்ககள் ..அமுலாக்கங்கள் ...சதகா சகாத் சேகரிக்க ஒழுங்கமைப்புகல் .அதில் மோசடிகள் இல்லாமல் சரியான முறைப்படி பங்கு வைத்தல் ... சிலர் தமது வறுமை.கடன் தொல்லையை வெளியில் சொல்ல விரும்ப மாட்டார்கள் ..அவர்களின் கவ்ரவம் பாதுகாக்கப்படுவதோடு. ..அவர்களுக்கு உதவவும் வேண்டும்...இப்படியான ஏற்பாடுகள் எமது சமூகத்தில் ..எங்கே இருக்கிறது... இதோடு ....இந்த விடயங்களையும் ..அமுல்படுத்த திட்டமிடுங்கள் ....அப்பொழுது தான் இந்த கய்யெலுத்திடும் திட்டம் பூர்த்தியாகும் ...

    ReplyDelete
  6. இன்று சமூகத்தில் உல்ல சீதனம் மற்றும் சீர்வர்சைகள் மற்றும் பெண்வீட்டில் உண்டான எதிர்பார்பு என்பன இல்லா விட்டால். பெண்கள் வெளி நாடு சோல்ல தேவையில்லை, இளைஞர் மற்றும் சமூக சிந்தனை ஆலர்கள் கண்டு கொல்லாமல் இருப்பதே காரணம்..,

    ReplyDelete
  7. நல்ல விடயம்.

    ஆனால்... இதற்குள் ஒளிந்திருக்கும் உள்விடயம் ஒன்றுள்ளது. எந்தவொரு பெண்ணும் ஆடம்பர சுகபோகங்களுக்காக கடல்கடந்து செல்வதில்லை. வறுமையும் அயலவர்களின் உதாசீனமும் காசிருப்பவர்கள் அழைத்தால் மட்டுமே மார்க்க கடமைகளுக்குக்கூட விருப்போடு கலந்து கொள்ளும் மனிதர்களும்தான் அவர்களை உந்தித்தள்ளும் மறைமுகப் புறக்காரணிகள்.

    இவற்றைத் தீர்ப்பதற்கு உருப்படியான சமூகநலத்திட்டம் எதையாவது முன்வைக்காமல் வெறும் கையெழுத்து வேட்டையினால் மட்டும் எதைச் சாதிக்கப் போகின்றீர்கள்?

    ஏழைகள் பணத்தில் மட்டும்தான் வறியவர்கள். தன்மானத்திலும் ரோசத்திலும் "செல்வந்தர்கள்". அவர்கள் நம்மிடம் யாசகம் கேட்டு வருவதில்லை. நாம்தான் அவர்களது நிலையறிந்து தன்மானத்தைக் காயப்படுத்தாமல் இரகசியமாக உதவவேண்டும்.

    ஆனால் இன்று நடப்பதென்ன? ஏழைச்சிறார்களுக்கு பாடசாலைக் கொப்பி வழங்குதல் என்று பெனர் அடித்து மேடைபோட்டு விழா நடாத்துகின்றார்கள். இது எப்படியிருக்கின்றது? ஒருவனை ஏழையென்று வெளிச்சம்போட்டுக் காட்டி மேடைக்கழைத்து... சே! கேட்கவே கூசவில்லையா?

    ஒருவனைப் பாராட்டுவதற்குத்தான் பகிரங்கம் தேவை. உதவுவதற்கு ஒலிபெருக்கி எதற்கு ஊர்கூடல் எதற்கு? முதலில் இரகசியமாக அதைச் செய்வோம்.

    ReplyDelete
  8. மேலேயுள்ள போட்டோக்களில் கையொப்பமிடும் உலமாக்கள் சீதனத்துக்கு எதிராகவும் கையொப்பமிட்டும்,சீதனத்துக்கு எதிராக மிம்பர்களை பாவித்து ஒரு தொடர் போராட்டத்தை தொடங்குவார்கள் என்றால் மூதூர் என்ன முழு இலங்கையிலும் இஸ்லாமிய திருமணங்களைப்பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.