அமெரிக்க முஸ்லிம்களின் சாதனைகள்..!
(வைகறை வெளிச்சம்)
உலகை உலுக்கிய நிகழ்வு 2001இல் செப்டம்பர் 11 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தரைமட்டமாக்கிய நிகழ்வு. 9/11 என இதனை அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள்.
இதற்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் பழிசுமத்தப்பட்டார்கள் உலகெங்கும். ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் சற்றும் தலை தாழ்ந்திடவில்லை.
காரணம் அவர்கள் நன்றாக அறிவார்கள். அது, யூத அமெரிக்க உளவுத்துறைகளின் உள்ளிருப்பு வேலை என்பதை.
அமெரிக்கா இதை காரணங்காட்டி உலகெங்கும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் நாடுகளின் மீதும் ஒரு பெரும் போரை தொடுத்து வருகின்றது. கடந்த பத்து பனிரெண்டு ஆண்டுகளாக.
ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட இடத்தில் ஒரு பெரும் மஸ்ஜிதை கட்டி முடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.
9/22 ( 2011 அன்று) பத்து ஆண்டுகள் பதினோரு நாட்கள் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு பள்ளிவாயிலை திறந்து அதில் தொழவும் செய்தார்கள்.
இது இன்று Ground Zero பள்ளி வாசல் என வழங்கப்படுகிறது. இந்த இடத்தில் இப்போது 13 மாடி கட்டடம் ஒன்று வரவிருக்கின்றது.
இந்த Groun Zero என்ற பெயரை 2001 செப்டம்பர் 11 ஆம் நாள் தகர்க்கப்பட்ட இரண்டு கோபுரங்களையும் அதில் இறந்தவர்களையும் நினைவு கூறுவதற்கு, அமெரிக்காதான் வைத்தது. இதை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அடையாளமாகக் காட்டிடவும் முடிவு செய்தது. பிரச்சாரங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்த இடத்தில் வருடந்தோறும் செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள் இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் மெழுகுவர்த்திகளை கொழுத்துவதையும் ஒரு வழக்கமாக கொண்டு வருகின்றது.
ஆனால் அந்த இடம் இனி முஸ்லிம்கள் தினமும் ஐந்து தொழுகையை நிறைவேற்றிடும் இடமாக ஆக்கப்பட்டுவிட்டது.
எத்தனையோ எதிர்ப்புகளையும் தடைகளையும் கொண்டுவந்து குறுக்கே நின்றார்கள் அமெரிக்கர்கள். அத்தைனையையும் தாண்டினார்கள் முஸ்லிம்கள்.
எதிர்த்தவர்களால் இயன்றதெல்லாம் செப்டம்பர் 11 அன்றே திறக்க இருந்த பள்ளிவாசலின் திறப்பை பதினோரு நாட்கள் தள்ளிப்போட்டது தான். அதற்கு மேல் ஒன்றும் இயலவில்லை. 9/11 அன்று வென்று காட்டினார்கள் முஸ்லிம்கள்.
இப்போது இந்த ரமலானில் இன்னொரு சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்கள் முஸ்லிம்கள்.
அது மூர்ஃபிர்ரிச்போரோ என்னும் இடத்தில் ஒரு பள்ளிவாசலை திறந்திருக்கின்றார்கள். பல நூறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவிலுள்ள இந்த இடத்தில் குறிப்பாக மூர்ஃபிர்ரிச்போரோ என்னும் இடத்தின் மையப்பகுதியாகிய டென்னீஸ் நகரில் ஒரு பள்ளிவாசலை திறந்திருக்கிறார்கள்.
இங்கே ஈராக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் எகிப்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் ஒரு பெரும் சமுதாயமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால் இவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப கடமையும் அடிப்படை கடமையுமான தொழுகையை ஜமாத்தாக( கூட்டாக) நிறைவேற்றிட இயலவில்லை.
அவர்கள் இஸ்லாமிய மையம் (Islamic Centre) ஒன்றை ஆடம்பித்து அதன் தலைமையகத்திலேய தொழுது வந்தார்கள்.
இந்த இஸ்லாமிய மையத்தை தங்கள் ஜமாத்தாக ஆக்கிகொண்டார்கள்.
இந்த ஜமாத்தின் கீழ் ஒரு பள்ளிவாசலை அமைத்திடவேண்டும் என முயற்ச்சிகளை மேற்கொண்டார்கள்.
ஆனால் அதற்கு அங்கே ஆயிரம் தடைகளை வெட்டிப்போட்டார்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூர்ஃபிர்ரிச்போரோ என்ற சமுதாயத்தை சார்ந்தவர்கள்.
வரும் செய்திகளை படிக்கின்ற போது இந்த மூர்ஃபிர்ரிச்போரோ சமுதாயத்தைச் சார்ந்தவர்களை யாரோ தூண்டி விட்டுருக்கின்றார்கள் என்றே படுகின்றது.
காரணம் மூர்ஃபிர்ரிச்போரோ என்ற இந்த சமுதாயத்தவர்கள் இன்றளவும் முஸ்லிம்களுக்கெதிராக எதையும் செய்ததில்லை.செய்யும் எண்ணத்திலும் இல்லை.
இன்னும்சொன்னால் அவர்கள் முஸ்லிம்களோடு சிறந்த உறவையும் உற்றத்தோழமையையும் கொண்டவர்களாக இருந்து வந்தவர்கள்.
முஸ்லிம்கள் இவர்களைப் பற்றி சொல்லிடும்போது அவர்கள் எப்போது வரவேற்கும் சமுதாயமாகவே இருந்தார்கள் என்றே குறிப்பிடுவார்கள்.
ஆனால் பள்ளிவாசலை எதிர்ப்பதில் அவர்கள் அபார வேகத்தோடு செயல்பட்டார்கள்.
இரண்டாண்டுகளாக பள்ளிவாசல் கட்டுவதை நிறுத்திட போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் என்றெல்லாம் அந்த பகுதிகளை அல்லோலகல்லோலம் படுத்தினார்கள். பள்ளிவாசலை எழுப்பும் சஃபஃ லி ஃபாத்தி நான் இங்கே முப்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றேன் எங்களுக்கும்( முஸ்லிம்களுக்கும்) இந்த மூர்ஃபிர்ரிச்போரோ சமுதாயத்திருகுமிடையே எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. இரண்டு ஆண்டுகளாகத்தான் அவர்கள் எங்களுக்கு எல்லாப் பிரச்சினைகளையும் உருவாக்கினார்கள் என்றார்.
அமைதியாக சமூகமாக உறவோடு வாழ்ந்த சமுதாயம் பள்ளிவாசலை கட்டும் பணிக்காக வந்த கட்டடப்பொருட்களை கொள்ளையடித்தார்கள். சில பல நேரங்களில் அந்த லாரிகலையே கடத்தினார்கள்.
கலவரங்களை உருவாக்கி மஸ்ஜித் கட்டினால் பெரும் கொந்தளிப்பு எழும், சட்டம் ஒழுங்கு கெடும் என எச்சரித்தார்கள்.
ஆனாலும் முஸ்லிம்கள் தளரவில்லை. தங்களது முயற்ச்சிகளை முன்னெடுத்துச் சென்றார்கள்.
நீதி மன்றங்களுக்கு சென்றார்கள் நீதி மன்றத்தில் பயங்கரமானதொரு வாதத்தை முன்வைத்தார்கள் மூர்ஃபிர்ரிச்போரோ சமுதாயத்தினர். அஃது முஸ்லிம்கள் மத சுதந்திரம் பெறுவதற்கு தகுதி அற்றவர்கள். அவர்களின் மத சுதந்த்திரைத்தை பாதுகாத்திட இயலாது. தேவையுமில்லை. காரணம் முஸ்லிம்கள் அமெரிக்காவின் அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்றிவிட்டு அந்த இடத்தில் " ஷரிஆ " சட்டத்தை கொண்டுவந்திட முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இப்படி ஒரு வாதத்தை வைத்தார்கள் அல்லாமல் அவர்களால் எந்த ஒரு சாட்சியத்தையும் நீதி மன்றத்தில் வைத்திட இயலவில்லை. இதனால் நீதி மன்றம் அவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டது. பள்ளிவாசலை கட்டிட அனுமதி அளித்துவிட்டது.
முஸ்லிம்கள் மெத்த சிரமத்தோடு பள்ளிவாசலை கட்டி முடித்துவிட்டார்கள்.
ஆனால் கட்டி முடித்துவிட்ட பள்ளிவாசலை முஸ்லிம்களால் திறந்திட இயலவில்லை. காரணம் பள்ளிவாசலை திறக்க விடக்கூடாது என கங்கணம் கட்டிச் செயல்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஒரு தடை ஆணையை வாங்கிவிட்டார்கள்.
முஸ்லிம் இப்போது அதற்கெதிராக போராட வேண்டியவர்களானார்கள்.
சிஞ்சிற்றும் தளராமல் நீதி மன்றத்தில் தங்கள் போரை தொடர்ந்தார்கள்.
பள்ளிவாசல் ரகசியமாக கட்டப்பட்டுவிட்டது போதிய அளவுக்கு பொது விவாதங்கள் நடத்தப்படவில்லை என்று கூறியே தடை விதித்தது நீதிமன்றம்.
முஸ்லிம்கள் போதிய அளவுக்கு விவாதங்களை நடத்தவே செய்தார்கள்.
ரமழான் மாதத்தில் தொழுகைக்கு இடமில்லை. ஆதாலால் நாங்கள் சாலைகளில் தொழவேண்டி வரும் அப்போது பொது விவாதங்கள் மட்டுமல்ல பொது வருத்தங்களும் வழக்குகளும் வரும் என்று ஒரு முரட்டு வாதம் ஒன்றை வைத்தார்கள் அப்போதுதான் நீதிபதிகளின் கண்கள் திறந்தன.
உடனேயே பள்ளிவாசலை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றினார்கள்
ரமழானில் பள்ளிவாசல் திறக்கப்பட்டது.
இத்தனை போரையும் முன்னே நின்று நடத்தியவர்களுள் ஒருவர் மாட்முல்லர் என்பவர். அவர் அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்.
இப்போதெல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களைக்கொண்டே அல்லாஹ் இஸ்லாத்திற்கு அதிகமான வேலைகளை வாங்குகின்றான். அதில் நிறைவையும் தருகின்றான்.
பெண்களின் பங்கு
இந்த பள்ளிவாசலை நிறுவுவதிலும் அதனை கட்டி முடிப்பதிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொள்வதிலும் பெண்கள் காட்டிய வீரமும் ஆர்வமும் அலாதியானது.
ஒரு பெட் ரூம் படுக்கை அறைக்குள் தொழுது கொண்டிருந்தோம். இப்போது 12000 சதுர அடியிலுள்ள பெரிய பள்ளியில் தொழவிருக்கின்றோம் என்கிறார் 10 கிலோமீட்டர் தனது காரை ஓட்டிக்கொண்டு வந்து குடும்பத்தோடு இரவு தொழுகைகளில் கலந்து கொள்ளும் அமீரா பாத்திமா என்ற பெண்மணி.
அல்ஹம்துலில்லாஹ் ,
ReplyDeleteஉன் வாக்கு உண்மை.
நீயே புகழுக்குரியவன்,
நீயே சதி காரர்களுக்கெல்லாம் சதி காரன்.
யா அல்லாஹ், அந்த மக்களுக்கு இன்னும் உதவி புரிவாயாக, அவர்களின் வாழ்க்கையை இலகு படுத்துவாயாக, ஆமீன் .
இலங்கையில் பள்ளியுடைப்பவர்களே பள்ளிகட்டும் நாள் வரும் இன்ஷாஅல்லாஹ்.
ReplyDeleteMassa Allah
ReplyDeleteஅல்லாஹ்தஆலா தனது இறைமறையில் இவ்வாறு கூறுகிறான்
ReplyDeleteوان تتولويستبدل قوما غيركم ثم لا يكون امثالكم
நீங்கள் இஸ்லாத்தின் எலுச்சிக்காக உழைப்பதை விட்டுவிட்டால் நான் அதற்கு பிரதியீடாக வேறு சமூகத்தை ஆக்குவேன் அவர்கள் உங்களைப் போன்றிருக்கமாட்டார்கள்
இலங்கையிலும் வேறு கமூகத்தவர்களை கொண்டு அல்லாஹ் அவனது தீனை நிலை நிறுத்த முன்பு இலங்கை முஸ்லிம்களே ஒன்று படுங்கள். குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒன்று படுங்கள்.
ReplyDelete