Header Ads



கல்வி நிருவாக சேவையில் புதிய நியமனங்கள் (முஸ்லிம்களின் விபரம் இணைப்பு)


(எஸ்.அன்சப் இலாஹி)

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 123 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த 143 அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி வியாழக்கிழமை பி.ப 01.30க்கு கல்வி அமைச்சில் இடம் பெறவுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு இன விகிதாசாரம் மற்றும் மாவட்ட விகிதாசாரம் இல்லாமல் தேசிய ரீதியல் நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவை போட்டிப்பரீட்சைக்கு 25 ஆயிரம் விண்ணப்பதாரிகள் தோற்றியிருந்தனர். 180 கல்வி நிருவாக சேவை அதிகாரிகளை தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் 143 பேரே குறிப்பிட்ட புள்ளிகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 103 பேர் சிங்களவர்களும், 30பேர் தமிழர்களும், 10 பேர் முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.

இவற்றில் பொது ஆளணித்துறைக்கு 35 பேரும், கணிதத் துறைக்கு 8 பேரும், ஆங்கிலத்துறைக்கு 12 பேரும், மேலைத்தேய சங்கீதத் துறைக்கு 03 பேரும், கைவினைத் துறைக்கு 02 பேரும், சித்திரத் துறைக்கு 10 பேரும், மனைப்பொருளியல் துறைக்கு 06 பேரும், விசேட கல்வி துறைக்கு 02 பேரும், பிரிவென துறைக்கு 07 பேரும், தகவல் தொழில்நுட்ப துறைக்கு 07 பேரும், விஞ்ஞானத் துறைக்கு 08 பேரும், விவசாயத் துறைக்கு 06 பேரும், வர்த்தகத்துறைக்கு 04 பேரும், அரபிக் துறைக்கு 02 பேரும், திட்டமிடலுக்கு 05 பேரும், நடனத்துறைக்கு 07 பேரும், கீழைத்தேய சங்கீதத்துறைக்கு 06 பேரும், உடற்கல்வித் துறைக்கு 13 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொது ஆளணித்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 35 பேரில் 12 தமிழர்களும், 2 முஸ்லிம்களுமாவார்கள். தேசிய ரீதியில் தரப்படுத்தலில் 20வது இடத்தினையும், புள்ளிகளின் அடிப்படையில் 10வது இடத்தினையும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எச்.பௌஸ் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பொது ஆளணித்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு முஸ்லிமும் இவரே ஆவார். அம்பாரை மாட்டத்தில் இருந்து பொது ஆளணி துறைக்கு அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எச்.பௌஸ், உடற்கல்வி துறைக்கு பொத்துவிலிருந்து என்.அப்துல் வஹாப், இறக்காமத்திலிருந்து யூ.எல்.உவைஸ், தகவல் தொழில் நுட்பத் துறைக்கு சம்மாந்துறையிலிருந்து பீ.எம்.வை.ஏ. முகிடீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

கல்வி நிருவாக சேவை தரம் 111 க்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 10 முஸ்லிம் அதிகாரிகள் பின்வருமாறு திருமதி ஏ.டபிள்யூ.எஸ்.எம். வாஹிட், ஏ.எச்.பௌஸ், பி.எம்.வை.ஏ.முகிடீன், எம்.ஏ.எம்.உனைஸ், எம்.எச்.முகம்மட் ஜாபிர், எம்.எஸ்.எம்.றாசீக், ஏ.ஆர்.எப்.அமீன், எம்.ஐ.எம்.நௌபர்டீன், யூ.எல்.உவைஸ், என்.அப்துல் வஹாப் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமனம் வழங்கும் நிகழ்விற்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ராதா நாணயக்கார கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.