தேசிய மீழாத் விழா தொடர்பில் கருத்தரங்கு...!
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
2013 க்கான தேசிய மீழாத் விழா இம்முறை திருகோணமலையில் கொண்டாடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஒழுங்குகள் செய்துள்ளது.இவ்விழா எதிர்வரும் 25ம் திகதி கிண்ணியாவில் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் சம்மந்தமான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் .முதலமைசச்ரின்; அலுவலகத்தில் புதன்கிழமை பி;.பகல் நடைபெற்றது.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 8 பிராந்திய உலமாசபையின் தலைவர் செயலாளர் உட்பட நகர சபை பிரதேச சபை தலைவரகள் பாடசாலை அதிபர்கள் திணைக்களச் செயலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு தேசிய மீழாத் விழாவைச் சிறப்பாக கொண்டாடுவது சம்மந்தமாக தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.
நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோழ்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான்.
ReplyDeleteஇந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:7)
நபியவர்கள் இஸ்லாம் என்ற எதனை நமக்குக் காட்டித் தந்தார்களோ அதனைத் தான் நாமும் மார்க்கம் என்று பின்பற்ற வேண்டுமோ தவிர நாமாக மார்க்கத்தை உருவாக்கக் கூடாது.
செய்திகளில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் மிகவும் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் கெட்டதாகும்.ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : முஸ்லிம் 1435
மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை யாராவது மார்க்கம் என்று எடுத்து நடந்தால் அது நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மிகவும் தெளிவாக உணர்த்துவதுடன்,அப்படி மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நடை முறைப் படுத்துவது மறுமையில் நரகத்தில் சேர்க்கும் என்பதையும் மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துகிறது.
பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகுமானதா?
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
இதற்காக செலவு செய்யும் பணத்தை எழைகளுக்கு வளங்கலாமே..! கண்மணி நாயகம் நபியவர்கள் சுன்னவை பேணினாலே போதும் அவரை கௌரவிக்க..!
ReplyDeleteMASA ALLAH. YAA NABI SALAAM ALAIKKUM YAA RASOOL SALAAM ALAIKKUM YAA HABEEB SALAAM ALIKKUM SALAWAATHULLAH ALAIKKUM.
ReplyDeleteஇப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதால் தான் ஏனைய சமூகத்தவர்களுக்கு இஸ்லாம் போய்ச்சேராமலிருக்கிறது.நபியவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள் அதுவே அவர்களை மதிப்பதாகவும்,அன்புகாட்டுவதாகவும் அமையும்.இப்படி விழா எடுப்பதனால் நரகத்தைத்தான் நாம் தேடிப்போகிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ReplyDelete