Header Ads



'ரிசானாவுக்கு நேர்ந்த அநீதியை கேள்வி கேட்க மறுப்பது முட்டாள் தனம்'


சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக்கின் மரணத்தை அடுத்து அவரது சொந்த ஊரான மூதூரில் பெரும் சோகம் காணப்பட்டது.

ஆனால், அங்கு நடந்த ஒரு சமூக முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் அந்த மரணத்தை கண்டிப்பதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

குறிப்பாக அந்த மரண தண்டனை முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டுள்ளதால், அதனைக் கண்டிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அப்பிரதேசத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான முஹமட் ராஜீஸ் தெரிவித்தார்.

ரிசானாவின் மரண தண்டனையை கண்டிப்பதில்லை என்று அவரது சொந்த ஊரில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகரான முகமட் ராஜிஸ்.

அந்தச் சம்பவத்தில் குழந்தை இறந்திருக்கின்ற போதிலும், அதனை ரிசானாதான் கொலை செய்தார் என்பது நிருபணமாகவில்லை என்று தாம் கருதுவதாக கூறும் அவர், அந்தச் சம்பவம் நடந்தபோது ரிசானா சட்டப்படி சிறுமி என்றும் கூறினார்.

ஆனாலும், அந்த மரண தண்டனைக்காக சவுதி அரேபியாவையோ அல்லது அந்தச் சட்டத்தையோ தாம் கண்டிக்க முடியாது என்றும், ஆனால் அந்த இறந்த குழந்தையின் தாய், ரிசானாவை மன்னித்திருக்க வேண்டும் என்றும் ராஜிஸ் கூறினார்.

'ரிசானாவுக்கு நேர்ந்த அநீதியை கேள்வி கேட்க மறுப்பது முட்டாள் தனம்'

ஷரியா சட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ரிசானாவுக்கு நேர்ந்த அநீதியை கேள்வி கேட்க மறுப்பது முட்டாள்தனம் என்று இலங்கையின் பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார்.

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

சவுதி அரேபியாவின் உள்நாட்டுச் சட்டங்களில் தாம் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, ரிசானா விவகாரத்தில் ஆரம்பம் முதலே இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தின் பங்களிப்பு போதுமானதாக இருக்கவில்லை என்று இலங்கையின் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார்.

மூதூர் மக்கள் சில முயற்சிகளை செய்தாலும் அவர்களால் உயர் மட்டம் வரை செல்ல முடியவில்லை என்றும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இந்த விடயத்தில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் எதுவும் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நடக்கவில்லை என்றும், அந்தச் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ளாமல், அந்தச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் என்றும் அவர் கூறுகிறார். bbc

2 comments:

  1. Sitthaara niyaayam ketka purappaddu innoru Thaslimaa nasreenaaha maarividaatheerkal ..

    ReplyDelete
  2. muslim arasiyal vathikalukku Rizanavai kappatruvathu ean muyachikka vendum ithanaal avanukalukku enna laapam? and ilappu? neenga ellorum sernthu panam thaaran enru solli irunthaal avnukal try panni iruppanukal..panathukku selvakkukkum naai pool alaipavanukallukku paasathai pattrium manithapimanathi pathium enna theariya pohuthu

    ReplyDelete

Powered by Blogger.