கல்வியமைச்சின் உத்தரவுக்கமைய அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் மீலாத் விழா
கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக பாடசாலைகள்தோறும் சமய விழாக்களை அனுஷ்டிக்கும் வகையில் இன்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்களது ஜனனதினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் விசேட சொற்பழிவாளராக அக்கரைப்பற்று ஏ. அஸ்ரப் மௌலவி கலந்து கொண்டார். ஆசிரிய ஆலோசர்களான யு.எம். நியாஸி, எம்.ஏ. சவுறுதீன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட் தலைமை வகித்தார். பாடசாலை மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இன்றைய மார்க்கச் சொற்பொழி மிகுந்த பயனை அளித்தது என மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்திருந்தனர். மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்துகின்ற அஸ்ரப் மௌவியையும், ஏனைய அதிதிகளையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Post a Comment