இலங்கையில் வர்ண மழை - ஆராய்வதற்கு அமெரிக்காவின் நாஸா முன்வருகை
(Sfm) இலங்கையில் பல பகுதிகளில் பெய்த பல்வேறு நிறங்களிலான மழை குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆராய்வாளர் ஒருவர் சுயாதீமாக ஆராய முன்வந்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணங்களிலான மழை பல்வேறு இடங்களில் பெய்தது.
இதன் மாதிரிகள் தற்போது இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த மழை தொடர்பில் ஆராய்வதற்காக, நாசாவின் விண்வெளி ஆராய்சியாளர் ரிச்சர்ட் டி ஹவர் இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றைய தினம் காலை கண்டி உடுதும்புற பகுதியில் கறுப்பு நிறத்திலான மழை பெய்ததாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment