மாலியின் வீதிகளில் ஆக்கிரமிப்பு பிரான்ஸுடன் நேருக்குநேர் மோதும் முஸ்லிம் போராளிகள்
ஆப்பிரிக்க நாடான மாலியில் முஸ்லிம் போராளிகள் அந்த நாட்டின் முக்கிய நகரமான டியாபலியை கைப்பற்றி வைத்து உள்ளது. இந்த நகரை மீட்க உதவும் படி மாலி அதிபர் பிரான்சு அரசிடம் கேட்டார்.
இதையடுத்து பிரான்சு தங்கள் நாட்டு படையை அங்கு அனுப்பி உள்ளது. பிரான்சு படை கடந்த 2 நாட்களாக முஸ்லிம் போராளிகள் மீது விமான தாக்குதல் நடத்தி வந்தது. தற்போது டியாபலி நகருக்குள் தரைப்படை நுழைந்துள்ளது. 800 வீரர்கள் நகருக்குள் நுழைந்து முஸ்லிம் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 60 டாங்கிகளும் நகருக்குள் நுழைந்து உள்ளன.
ராணுவத்தினரும், முஸ்லிம் போராளிகள் தெருக்களில் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவ பிரான்சு மேலும் 2500 வீரர்களை அவசரமாக அனுப்பி வைக்கிறது. நகருக்குள் ராணுவம் நுழைந்து விட்டதால் இன்னும் 2 நாட்களுக்குள் நகரை மீடடு விடுவோம் என்று பிரான்சு தளபதி கூறியுள்ளார்.
Post a Comment