பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும்' - இது அமெரிக்காவின் அவலம் (படம்)
குழந்தை பருவத்தில் கல், மண், சாக்பீஸ் போன்றவற்றை தின்பதை கேள்விப்பட்டிருக்கலாம்.. பார்த்திருக்கலாம். ஆனால், 43 வயது பெண் தினமும் பூனை முடியை தின்கிறார். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா (43). 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வளர்த்து வந்த பூனையை கொஞ்சி கொண்டிருந்தவர், கையில் ஒட்டிய அதன் முடியை தின்றார். அவ்வளவுதான்.. அதன் பிறகு நிலைமை மோசமாகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பூனை முடியை பிய்த்து உருண்டையாக்கி சாக்லேட் போல தின்ன தொடங்கினார். இப்போது அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.
ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை வாயில் வைத்து மெதுவாக மென்று சுவைத்துள்ளார். இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். மனிதர்கள் எதற்கெல்லாம் அடிமையாகிறார்கள் என்பது தொடர்பான டிஎல்சி டிவி நிகழ்ச்சியில் இதை லிசா வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். தினமும் காலை ஸ்நாக்ஸ்சுக்கு நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி சேகரிப்பேன். ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்கும். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைப்பேன். பிறகு எடுத்து விடுவேன் என்கிறார். லிசாவை போல பலரும் பலவிதமான விஷயங்களுக்கு அடிமைகளாகி உள்ளனர்.. உருண்டை பல்பு, டியூப்லைட், கண்ணாடி துகள், பேப்பர், ரத்தம் சுவைப்பது உள்பட.
Post a Comment