Header Ads



றிசானா நபீக்கின் மரண தண்டனை பற்றி...!


(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பழீல் எமது இணையத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பியிருந்த குறிப்புகளே இவை)

1. கொலைக்குக் கொலை என்ற இஸ்லாமிய சட்டத்தை விமர்சிப்பது ரித்தத்தாகும். அல்லாஹ்வையே விமர்சிப்பதாகும்.

2. சவூதி அரேபிய அரசும் நீதித்துறையும் ரிஸானாவை விசாரித்த முறையிலும் தண்டனை வழங்கிய விதத்திலும் தவறு நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறுங்கள்.

3. இஸ்லாத்தை விமர்சிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இனவாதிகளுக்கு வாய்க்கு அவல்| கிடைத்தது போன்று, ரன்ஜன் ராமனாயக்க  BBC க்கு 10ஆம் திகதி இரவு வழங்கிய பேட்டியில் சவுதி சிறையில் மேலும் சிலர் கொலைத் தண்டனையை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தனது அறையில் சிலையையும் மற்றொருவர் சிலுவையையும் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே, இஸ்லாத்தை மட்டம் தட்டும் யுத்தம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. தற்போது வேகமாகி வருகிறது. பெண்களது உரிமையை இஸ்லாம் பறித்துவிட்டது, இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது.  நபி(ஸல்) அவர்களது குடும்ப வாழ்வு மோசமானது, மிருகவதையை இஸ்லாம் கொடூரமாக அங்கீகரிக்கிறது என அது தொடர்கிறது. 

எமது கருத்து:

1. இஸ்லாத்தை அறிய அது சட்டங்களில் பொதிந்துள்ள சிறப்பம்சங்களை புரிய வைக்க அரிய  சந்தர்ப்பம். நழுவவிடலாகாது.

2. இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதுவராலயத்துக்கும் சவுதி அரேபியாவிலிருந்து பண உதவி பெற்று இயங்கிவரும் Ngo களுக்கும் உலமாக்களுக்கும் ஒரு பெரிய பொறுப்புள்ளது. ரிஸானாவின் விவகாரத்தை  ஆரம்பம் முதல் இறுதி வரை சவுதி அரசு கையாண்ட விதம், விசாரணைகளில் கையாளப்பட்ட ஒழுங்குவிதிகள் பற்றியெல்லாம் சுருக்கமாகவேனும் இலங்கையருக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.அதற்காக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை உடனடியாக கூட்டவேண்டும்.அல்லது பத்திரைகளுக்கு தெளிவான அறிக்கை வெளியிடப்பட வெண்டும்.

3. சவுதி அரசாங்கம் இது விடயமாக அசட்டை செய்தால், நாம் எதனையும் செய்வோம். யாரும் கேட்பதற்கு உரிமையில்லை என்று நினைத்தால் அது இஸ்லாத்தையும் இங்குள்ள முஸ்லிம்களையும் பாதிக்கும் என்பதை அது மறக்கலாகாது.

ஏற்கனவே, வீட்டுப் பணிப்பெண்கள் விடயமாக அரபு எஜமானர்கள்; பற்றி முன்வைக்கப்பட்ட பல குற்றச்சகட்டுக்களுக்கு   இன்னும் விளக்கம் வழங்கப்படவில்லை. வீட்டுப் பணிப்பெண்களது கைகளில் ஊசி ஏற்றப்பட்டமை, பல பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தப்பட்டமை, துன்புறுத்தப்படுகின்றமை பற்றியெல்லாம் உள்ளுர் மீடியாக்கள் வாய் கிழியக் கத்திய போது இந்த நாட்டில் சவுதியுடன் தொடர்புள்ளவர்கள் தெளிவான கருத்தக்களை கூறவில்லை. இந்த மௌனம் பயங்கரமான விளைவுத் தரும். 

ரிஸானா நபீக் தண்டணை அனுபவிக்க இன்னும் பலர் காரணமாக அமைந்திருக்கிறார்கள்.

* ரிஸானா விடயத்தில் சவுதி அரசு நடந்த முறை பற்றி விமர்சிப்பவர்கள் இலங்கையில் நடைபெறும் பயங்கரமான கொலைகள் பற்றி என்ன கூறுவார்கள்?

* மனைவியையும் 3 வயதுள்ள மகளையும்; கழுத்தை நெரித்து கொண்டு தீயிட்டுப் பொசுக்கியவனுக்கு மரணதண்டனை வழங்கப்படுமா? 

* புறக்கோட்டை மேம் பாலத்தில் பொலிஸ் காதலியை கத்தியால் தாறுமாறாகக் குத்திக் கொண்டவதையும் மன்னிப்பீர்களா?

* தென் மாகாணத்தில் பிரதேச சபைத் தலைவரும் அவருடன் 14  பேரும் பாலியல் வக்கிரமம் செய்யவில்லையா?

இன்னும் பல பல....

இவற்றுக்கான தண்டனைகள் மன்னிப்புத்தானா? இலங்கையில் இடம்பெறும் குற்றங்களுக்கு அரபு நாட்டுப்பாணியிலான தண்டனைகள் தான் தேவை என்று பல மதகுருக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூறவில்லையா?

 மேலும், இஸ்லாத்தில் கூறப்படும் குற்றவியல் தண்டணைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவை.அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பின்வரும் முன்நிபந்தனைகள் தேவை.

1.குடிமக்களிடம் ஈமானிய பக்குவமும் இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய நல்லபிப்பிராயமும்

2.நன்மைகளை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள்

3.தீமைகள் வளர்வதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருத்தல் 

4.அங்க சம்பூரணமபன இஸ்லாமிய அரசும் பொருத்தமான இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

 மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை சவுதி அரசு பெற்றிருந்தால் அதற்கு இஸ்லாத்திற்கு உரிமை கொண்டாட உரிமை உண்டு. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.



11 comments:

  1. நல்லதோர் கட்டுரை...!
    ஷரியா சட்டத்தை சரியில்லை என்று சொல்பவர்கள் சரியானவர்களாயின். 2007ம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனை 2013ம் ஆண்டு நிறைவேற்றப்படும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்...? இதனை வைத்து அரசியல் நாடகம் நடத்துபவர்களை இறைவன் நிச்சயமாக தண்டிப்பான்.
    இஸ்லாமிய சகோதரகளே! தயவுசெய்து நமது கொள்கை வேறுபாடுகளை நம்மொடு வைத்துக்கொண்டு, நமது சமுதாயத்தில் அல்லது நமது நாட்டில் எந்த எந்த ஒரு சகோதரிக்கும் இவ்வாறானதொரு சூழ்நிலை உருவாவதில் இருந்து பாதுகாக்க சகாத்தினைக் கூட்டாகக் கொடுப்போம்...!

    ReplyDelete
  2. அனபு சகோதரர்களே ,எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? அல்லாஹ்வுக்காக உங்கள் தாய்மார்கள் ,மனைவிமார் , சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகளை இந்த அடிமைத்தனமான வீட்டு வேலைக்காக மட்டும் அனுப்பாதீர்கள் .ஒரு வேளை அவர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.அதற்காக, அவர்கள் இங்கே சந்தோசமாக இருக்கிறார்கள் என்று மட்டும் நம்பி விட வேண்டாம்.இப்படி ஒரு பிழைப்பு நடத்துவதை விட, நம் நாட்டில் பிச்சை எடுத்து வாழ்வது மேல்.நமது பிள்ளைகளின் உயிர்களாவது மிஞ்சும்.நானும் சவூதி அரேபியாவில் வேலை செய்வதனால் தான் இந்த அன்பான வேண்டுகோளை எமது முஸ்லிம் சமுதாயத்திடம் விடுக்கிறேன்.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை நின்று நம்மை வறுமையை விட்டும் பாதுகாப்பான் ஆக.ஆமீன்.

    --

    ReplyDelete
  3. நமது உலமாக்கள் இஸ்லாம் என்றால் சவுதி என்றும் இஸ்லாமிய ஷரியத் சட்டம் என்றால் சவுதி சட்டம் என்றும் ஒரு பிரம்மையை பன் நெடுங்காலமாக எம் மக்கள் மத்தியில் உருவாக்கி இருப்பதனாலேயே இன்று ஷரியா சட்டத்தையும் சவுதியின் சட்டத்தையும் விளங்கி கொள்ளாது இரண்டையும் போட்டு குழப்பி ஏனையோரையும் குழப்பதிட்கு உள்ளாக்கும் வேலையை இன்று நம் உலமாக்களும் சவுதின் நிதி உதவிகளுடன் இயங்கும் தஃவா அமைப்புகளும் செய்துகொண்டிருக்கிறார்கள்?

    ஷரியா சட்டம் என்பது முஃமின்களால் இஸ்லாமிய கிலாபத்தின் படியான ஆட்சியில் பின் பற்றபட வேண்டியது அப்படியான ஆட்சியில் ஆட்சியாளரிடமும் மக்களிடமும் நீதியும் ,கருணையும்,விட்டுகொடுக்கும் தன்மையும்,மன்னிக்கும் மனபாங்கும் சகித்துகொள்ளும் குணங்களும் ,நேர்மை,வாக்குறிதியை நிறைவேற்றும் தன்மைகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும்

    இஸ்லாமிய ஷரியா சட்டம் வஹி இறங்க திடங்கி கிட்டதட்ட 15 வருடங்களின் பினரே அமுழுக்கு வந்ததும் அது குறிஹ்த்து வஹியும் 15 வருடங்களின் பின்னரேதான் இறங்கியதும் ஷரியா சட்டம் எத்தகைய மனபாங்கை கொண்ட சமூகதுகுறியது என்பதை விளங்க போதுமானது

    முதலில் சவுதி அரேபியாவுக்கு ஷரியா சட்டத்தை அமுல் படுத்தும் உரிமை இல்லை என்பது ஒரு தெளிவான விடையம் அதகு சவுதியின் பொருளாதாரம் வட்டியுடன் இரண்டர கழந்து இருப்பதும் மஹ்ரமின்றி பெண்களை உலகம் எங்கிருந்தும் ஷரியதுக்கு மாற்றமாக பயணிக்க தூண்டுதல் அளித்து அப்படி ஷரியதுக்கு மாற்றமான பயணதில் வரும் பெண்களை வரவேற்று அவர்களுக்கு பல்வேறு துறையிலும் வேலை வாய்பளித்து அவர்களை அந்நிய ஆண்களின் வீடுகளில் தங்கவைத்து என குஃஆனின் பலகட்டளைகள் பகிறங்கமாக மீறபடுகின்ற ஒரு நாளு குஃஆனின் சில விடயங்களை மட்டும் அமுல்படுத்த முனைவது கண்டனதுக்குறியது

    ஒரே தொழில் செய்வோறுக்கு சமமாக ஊதியம் வழங்கி இஸ்லாம் கூறும் சமத்வதை பேனாது அமெரிக்கனுக்கு ஒரு ஊதியம் அரேபியர்களுக்கு ஒரு ஊதியம் ஆசிய நாட்டவர்களுக்கு ஒரு ஊதியம் ஆபிரிக்கர்களுக்கு ஒரு ஊதியம் என இன மொழி பிரதேச வேறுபாடுகளை பாராபட்சங்களை அந்த நாட்டால் வழங்கபடும் சேவைகள் பணிகள் ஊதியங்கள் எல்லா வகையிலும் அது பகிறங்கமாக அமுல்படுத்திகொண்டு இருப்பதாலும் அந்த நாடு ஷரியத்தை அமுல்படுத்த தகுதி அற்ற நாடாகி விடுகிறது


    ஊதியம் பெற்ற நாள்களில் சவுதியர் ஓட்டும் வாகனங்களை கூலிக்கமர்த்தி தன் தூர இடத்து வேலை தளத்தில் இருந்து நகருக்கு குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதட்காக பணம் அனுப்பும் நிலையங்களை நோக்கி விரையும் பல்லாயிர கணக்கான அப்பாவி பணியாளர்களின் பணம் கூலிக்கமர்த்திய அந்த சவுதியனால் திட்டமிட்டு இடையில் தன் நண்பர்களை கொண்டு வழி மறிக்க வைத்து வண்டியின் உள்ளே இருந்தவர்களை அதட்டி மிறட்டி முழு பணங்களையும் கொளையிட்டு செல்வதும் இப்படியான சம்பவங்கள் மாதா மாதம் நடைபெறுவதும் அதனை முறை இட்டாளும் போலிஸால் தக்க நடவடிக்கை எடுக்கபடாமல் விடுவதாலும் இஸ்லாமிய ஷரியத்தை பற்றி பேச சவுதி தகுதி அற்றாகிவிடுகிறது

    மேலும் சவுதியில் பணிபுறிவோர் அங்கே என்னகொடுமையெல்லாம் ஷரியதுக்கு மாற்றமாக தங்களுக்கு இழைக்கபடுகிறது என்பதை நம் நாட்டு ஊடகங்களுக்கு எழுதி நம் நாட்டு உலமாக்களுக்கு புறியவைத்து உண்மையான இஸ்லாமிய ஷரியாவையும் இஸ்லாத்தையும் போதிக்கும் மனிதர்களாக நாம் மாறி இத்தனை நாளும் சவுதிக்கி வக்காலத்து வாங்கி கொண்டிருப்பதட்காக நாம் அல்லாஹ்விடமும் முழு மனித சமூகத்திடமும் மன்னிப்பு கோறுவோராக மாற வேண்டும் இதட்கு சவுதியில் பணி புறிபோர் தயங்காமல் சமுதாய நன்மைகாகவும் இஸ்லாத்தை காப்பதட்காகவும் உண்மைகளை வெளிச்சதிட்கு தைரியமாக கொண்டுவர வேண்டும்

    ReplyDelete
  4. அன்புள்ள சகோதருக்கு அன்பான வேண்டுக்கோல் தயவுசெய்து இங்கே ஷாரியா சட்டம் பற்றி விளக்கவோ பேச வேண்டாம்.எங்களுக்கு தெரிந்த ஷரியா இந்த சவுதி காரங்களுக்கு தெரியாது.

    ReplyDelete
  5. குற்றங்களை தடுப்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இஸ்லாமிய மண்ணில் அன்று புரையோடிப்போயிருந்த குற்றங்களை இல்லாது ஒழிக்கவே மிகக் கடுமையான ஷரியா சட்டசரத்துக்கள் கொண்டுவரப்பட்டன. இன்றுவரை அது மதத்தின் பெயரால் மதத்தால் உலக முஸ்லீம்களால் புனிதமாக நோக்கப்படுகின்றது. எந்த முஸ்லீமும் அதை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டான். அந்த வகையில்,பல நாட்டு முஸ்லீம் இன மக்களின் நடைமுறைகளையும் செயற்பாடுகளையும் நேரில் பார்த்தவன் என்ற வகையில் ஷரியா சட்டம் அவர்களுக்கு சரியானதும் தேவையானதும் ஆகும்.
    இதே போன்று மிகக்கடுமையான தண்டனைகள் மூலமே பல மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கவும் முடியும் என்பததே யதார்த்தம்.

    ReplyDelete
  6. சகோதரரே (யஹ்யா முஹம்மட்)நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறட்டுமா? நீங்கள் கூறியவைகளை தைரியமாக சவுதி அரசுக்கு அறிவியுங்கள்,அப்புறம் சவுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள் இது உங்களால் முடியுமென்றால் உங்களுக்கு முடியும் சவுதிக்கு இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முடியாது என்று பத்வா கொடுப்பதற்கு. நீங்கள் கூறுவது போல் பிரச்சினைகள் உண்டு நாம் எல்லோரும் அறிவோம்,இந்த இடத்தில் ஒரு ரிஸான இல்லாது ஒரு அந்நிய சமூகத்தவர் தண்டிக்கப்பட்டிருந்தால் இந்தக்காட்டுக்கத்தல் எம்மத்தியில் இருந்தா? இருந்திருக்குமா? சவுதியில் பல பிழைகள் இருக்கிறது இல்லை என்று சொல்ல வரவில்லை இருப்பினும் இது போன்ற தண்டனைகள் அங்கு எல்லோருக்கும் சமம் இப்படி இஸ்லாம் சொல்லும் எல்லா விடயத்திலும் சவுதி ஈடுபட எம்முடைய முயற்சியை இணையத்தளங்கள் மூலமாவது செய்வோமே!

    ReplyDelete
  7. ரிசானா நபீக்கின் விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்கின்றோம். அணைத்து விடயங்களையும் அல்லாஹ்வே அறிவான். நமது இவ்வுலக வெளிப்படையான பார்வையில் பார்ப்போமேயானால் சவுதி அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் குற்றங்களுக்கான தண்டனை ஷரீஆ அடிப்படையிலானவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இவ்வுலகம் ஒரு கிலாபத் ஆட்சியாகவும் ஷரிஆ சட்டங்களை அமுல் படுத்துவதாகவும் அமைய வேண்டும் அப்பொழுதுதான் இவ்வுலகில் அமைதியும் நீதியும் சமாதானமும் ஏற்படும். இன்று சவுதியில் நடைபெறும் ஆட்சி இஸ்லாமிய ஆட்சியா?

    ஹஜ் செல்வதுக்கு மஹ்ரமி (அனுமதிக்கப்பட்ட) ஆன் துணை இல்லாமல் நாட்டுக்குள் நுழைய முடியாது? ஆனால் வேலைவாய்ப்புக்கு செல்லும் ஒரு பெண்ணுக்கு அந்த சட்டம் கிடையது. வீட்டு பெண்ணாக செல்வதுக்கு அனுமதிகப்பட்ட ஆண் துணை தேவை இல்லையா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செல்ல முடியுமா?

    அஜ்னபிகளான ஒரு வீட்டு வேலைக்காரியும் வீட்டு டிரைவரும் தனியே கடைகளுக்கு கார் இல் செல்ல ஷரீஆவில் அனுமதி உண்டா?

    குற்றத்துக்கான தண்டனை மட்டும்தானா ஷரீஆவாக இருக்கணும்?. விசாரணை ஷரீஆவாக இருக்க தேவை இல்லையா? ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் குற்றத்துக்கான சாட்சியங்கள் ஷரீஆ அடிப்படையில் அமைய வேண்டிய தேவை இல்லையா?

    மன்னிப்பு என்பது தீர்ப்பு வழங்கப்பட்ட பின்புதான். றிசான விடயத்தில் பேசவேண்டிய விடயம் அவளிடம் இடம்பெற்ற விசாரணை சரியானவையா? ஷரீஆ அடிப்படையிலானவையா? என்பதுதான். அவளிடம் பலவந்தமாக பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்து தீர்ப்பு வழங்க முடியுமா? இவள் பக்க நியாயங்கள் விசாரிக்கப்பட்டனவா? ரிசானாவுக்கு அரபு மொழியில் தேர்ச்சி இல்லாததால் சரியான மொளிபெயர்பாலரால் மொழிபெயர்த்து நீதிபதி இவளின் கருத்தை (சாட்சியை) கேட்டார்கலமா?

    இந்த அணைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்குமா? அங்கு பொய் 2,3 வருடங்கள் வாழ்ந்து பாருங்கள். அவர்களின் நியாயமான தீர்ப்புகளை காணலாம். அந்த நாட்டுக்காரன் எடை சொல்றானோ அதுதான் சரி. நமது நாட்டைப்போன்ற நாட்டுக்கரர்களுக்கு வாய் திறக்கக்கூட முடியாது. நமது பக்க நியாயங்களை சொல்ல. இது நல்ல தகுதியான தொழில் பார்க்கும் ஆண்களுக்கே இந்த கதி என்றால்.

    அங்கு சென்று 8 வாரங்களேயான வீட்டு வேலைக்காரிக்கு என்ன நடந்திருக்கும் என்று அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு தெரியும்.

    எல்லோரும் நிதானமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வின் சட்டத்தில் பிழை கிடையாது. அதை நடைமுறைபடுத்தும் மனிதர்களில் பிழை இருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  8. அல்ஹாஸ் எதன் அடிப்படையில் அங்கே தண்டனைகள் எல்லாம் சமம் எங்குகிறீர்கள் தண்டனை வழங்கபட்டது சவுதியனாக இருந்தால் அது அனாதையாகவா அடக்கம் செய்யபடும் குடும்பத்திடம் கொடுக்கபடாதா??? நமது மந்தமான புத்தி என்னவெனில் நம்க்கு ஷரியா என்றால் சவுதியுடைய சட்டங்களே என ஆணி அடித்தாட்போல் நமது ஆலிம்சாபுகளும் மதனிகளும் ரியாதிகளும் உள்ளங்களில் பதியவைத்து விட்டார்கள் அதனால் உண்மையான ஷரியா சட்டமும் தெறியாது அதனை நானோ நீங்களோ தெளிவாக படித்ததும் கிடையாது அப்படியான புத்தகங்களை நமது உலமாக்கள் சமூக நோக்குடன் இதுவரை எழுதியதும் கிடையாது மொழி பெயர்த்ததும் கிடையாது சவுதியிலே உன்மையின் புரட்சி ஆரம்பமாகி விட்டது அது பல உயிர்தியாகங்களுடன் மக்கா வரை சென்று விட்டது இன்ஸா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் அந்த புரட்சி உண்மையான கிலாபத்தை அங்கே நிறுவும் பொறுத்திருந்து பாருங்கள்

    ReplyDelete
  9. Criticize the Way Law was Implemented not the Law

    Saudi Arabia should publish the court proceedings and judgment.

    01. Saudi Arabia claims that Rizana Nafeek was sentenced to death and then beheaded in accordance with Shari’ah Law.

    02. It is an accepted fact that law is something and application of law is something different.

    03. Shari’ah Law is divine; hence no right to question or criticize it under any circumstances.

    04. Shari’ah law shall be implemented in the way prescribed in Shari’ah.

    05. If someone has a reasonable doubt about the manner in which Shari’ah law was applied or implemented in a particular case, he / she shall be entitled to demand clarification from relevant authorities.

    06. Almost everyone casts doubt over the way retaliation was meted out to Rizana Nafeek; hence entitled to ask from relevant authorities for certified copies of the relevant court proceedings and judgment and the decree issued to carry out the punishment as per the court judgment.

    07. It is advisable at all times to get the firsthand information and then analyze the case.

    08. At the same time, Saudi Arabia now has a fundamental duty to safeguard the interests of Islam as Islam and its laws are being disparaged. Thus, Saudi Arabia must publish the court proceedings and ruling with regard to Rizana Nafeek’s case along with the high decree issued to carry out the execution.

    09. The Government of Sri Lanka has to urge the Saudi Govt. to immediately make such court proceedings and verdict and decree public.

    H. ABDUL NAZAR
    12.01.2013

    ReplyDelete
  10. i agree with yahya mohamed. shariya rule is best but saudy is not fit to that.

    ReplyDelete
  11. AZ SHEIKH SHM FALEEL!! PLEASE TRY TO UNDERSTAND WHICH IS THE PUNISHABLE OFFENCE UNDER ALLAH'S SARIYA? CURRENTLY SAUDI IS IMPLEMENTING MAN MADE SARIYA. I BELIEVING THIS. FIRST OF ALL THE SAUDI REGIME MUST ACCEPT THAT THE SOUTH ASIAN ARE HUMAN!!!

    ReplyDelete

Powered by Blogger.