முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு பணஉதவி
(தி.வா) கடந்தகால அனுபவத்தை பாடமாகக் கொண்டு நாட்டில் மீண்டும் இனமுறுகல் ஏற்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சில கடும்போக்கு சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தி உள்ளார். இதுவிடயம் குறித்து ஆராய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாகக் கூறியுள்ளார். இது சிறந்ததொரு நடவடிக்கை என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இந்தத் தெரிவுக்குழுவின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகள், மற்றும் அவர்களின் பிரசாரங்களின் பின்னணி என்பது பற்றி ஆராயப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரம் மற்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக் கைகளின் பின்னணியில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பணஉதவியும் காணப்படுகிறது. இது பற்றியும் பாராளு மன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகக் கண்டறியப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கடும்போக்காளர்களின் செயற்பா டுகளாலேயே தமிழர் பிரச்சினை உருவானது. இதனை ஒரு பாடமாகக் கொண்டு மீண்டும் ஒரு இனத்துக்கு எதிரான பிரச்சினை உருவாகாமல் தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுப்பதன்றால் எப்போது இவனுகளுக்கு எதிராக சட்டம் சொல்லப்போகிறீர்கள் .
ReplyDelete