இந்திய விமானிகளிடமிருந்து ஒருகோடி தங்க நாணயங்கள் கைப்பற்றல் - கட்டுநாயக்கவில் சம்பவம்
இன்று (10.01.2013) அதிகாலையில் கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து இந்தியாவின் திருச்சி விமான நிலையத்திற்குப் பயணமாகவிருந்த இரு இந்திய விமானிகளிடமிருந்து 1840கிராம் (ஒருகிலோ 840கிராம்) நிறைகொண்ட தங்க நாணயங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த சுங்க அத்தியட்சகரான எஸ்.நியாஸ் தெரிவித்தார்.
இந்தத் தங்கங்களின் மொத்தப் பெறுமதி ஒருகோடியே இருபது லட்சமாகும். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்த இரு விமானிகளும் ஒரு செயலமர்வுக்கு வந்ததாகவும், இவர்களிடம் இனந்தெரியான இலங்கையர் ஒருவர் இரு பொதிகளில் தங்கம் அடங்கிய பார்சலைக்கொடுத்து திருச்சியிலுள்ள ஒருவரிடம் கொடுக்கும்படி தன்னிடம் கூறியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இந்த இரு விமானிகளும் தெரிவித்துள்ளதாக சுங்க அத்தியட்சகர் எஸ். நியாஸ் தெரிவித்தார்.
தற்போது இவர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்க அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
(பறிமுதல்செய்யப்பட்ட தங்க நாணயங்களுடன் சுங்கத்திணைக்கள அதிகாரிகளைப் படத்தில் காணலாம்)
Post a Comment