அரேபிய குதிரை பற்றி மலேசியரின் முறைப்பாடு..!
மலேசியா நாட்டில் உள்ள கம்பங் பாண்டான் பாலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரேஸ் குதிரைகளை வளர்த்து வருகிறார். இந்த குதிரைகளில் ஒன்று சமீபத்தில் இறந்து விட்டது. அந்த குதிரையின் பிரேத பரிசோதனை அறிக்கையை தனக்கு வழங்க வேண்டும் என அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குதிரைகளை பராமரித்து வரும் பண்ணையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் எனக்கு சொந்தமான பெண் குதிரைகளின் லாயத்தில், வேறொருவருக்கு சொந்தமான அரேபிய ஆண் குதிரையை அடைத்து வைத்தனர்.
மறுநாள் காலை 8 மணியளவில் சென்று பார்த்தபோது, எனது பெண் குதிரைகளில் ஒன்று தரையில் மயங்கி விழுந்துக் கிடந்தது. அதன் தலையில் காயங்கள் இருந்தன. பின்பகுதியில் கடிபட்ட தழும்பும், ரத்தப்போக்கும் காணப்பட்டது. எனது அந்த குதிரை ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
லாயத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடியும் அந்த பெண் குதிரையை காப்பாற்ற முடியவில்லை. இந்த லாயத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரேபிய ஆண் குதிரை தான் எனது பெண் குதிரை மீது மூர்க்கத்தனமாக பாய்ந்து கொன்று விட்டது.
என் குதிரை இறப்பால் எனக்கு உண்டான இழப்பீட்டை அரேபிய ஆண் குதிரையின் உரிமையாளரிடம் இருந்து பெறுவதற்காகவும், லாயத்தில் உள்ள மற்ற பெண் குதிரைகளின் உயிருக்கு, அந்த அரேபிய ஆண் குதிரையால் ஆபத்து வராமல் தடுக்கவும் போலீசில் பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டு புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment