நிந்தவூர் கால்நடை கமக்காரர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
நிந்தவூர் கால்நடை கமக்காரர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை நிந்தவூர் 5ம் பிரிவு பல்தேவைக் கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சங்கச் செயலாளர் இத்ரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ரிபா உம்மா ஜலீல், அம்பாறை மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி டாக்டர் ஜுனைத், நிந்தவூர் விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர் ஹாலிக் மற்றும் நிந்தவூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி யு.தைபா ஆகியோர் கௌரவ அதீதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது கால் நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இவற்றில் சில பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணப்பட்டதுடன் ஏனைய சில விடயங்களுக்கு எதிர்காலத்தில் தீர்வு காண முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உறுதியளித்தார்.
அத்துடன் சங்கத்தின் வருடாந்த அறிக்கையின் பிரதி ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கால்நடை வளர்ப்பு, அதன் விருத்தி, பராமரிப்பு மற்றும் அரசின் எதிர்காலத் திட்டம் சம்மந்தமாக மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் ஜுனைத் விளக்கவுரை நிகழ்த்தினார்.
Post a Comment