மீலாத் விழாக்களில் பரிசு பெறுவதைவிட முஹம்மது நபியை பின்பற்றுவது சிறந்தது
(ஜே.எம்.ஹபீஸ்)
மீலாத் தின விழாக்களில் போட்டிகளை நடத்தி மாணவர்கள் பரிசு பெறுவதை விட முஹம்மத் நபி(ஸல்) அவர்களது வாழ்கைச் சரிதத்தின் முக்கிய அம்சங்களைப் பின்பற்றுவது மிக நலலது என்று மத்திய மாகாண சபை இங்கத்தவர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.
(19.1.2013) இன்று அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய மாகாணப் பாடசாலைகளது மீலாத் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நபி (ஸல்) அவர்கள் எமக்கு வழங்கிச் சென்றுள்ள அரிய கருத்துக்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. அவை அனைத்தையும் பின்பற்றுவது ஒரு முஸ்லிமின் கடமை. அப்படியாயின் அவற்றை இயன்றவரை கடைப்பிடிப்பது எமது கடமை. எனவே மீலாத் தின மேடைகள் வெறுமனே பரிசு பெறும் மேடைகளாக இருக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை கடைப்பிடிக்கும் ஒரு மேடையாக மாற்றி அமைக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். இங்கு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
சிறந்த கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.மிக்க நன்றி. இவ்வாறாக நபிகளாரை புகழ்கிறோம் என்ற பெயரில் வீதிகளை மின் விளக்குகளால் அலங்கரிக்கிறார்கள்.நூற்றுக்கணக்கான வாகனங்களை சேர்த்து வீதிகளில் உலா வருகின்றார்கள்.இராப்பகலாக பள்ளிவாசல்களில் இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் இசைப் பாடல்களை ஒலிக்கிறார்கள்.கொடி ஏற்றங்களை நடாத்தி அண்ணதாணம் என்று செலவளிக்கிறார்கள். இவை அத்தனைக்கும் பல இலட்சம் ருபாய்கள் வருடம்தோரும் செலவிடுகின்றார்கள். இவற்றினால் நன்மை கிடைக்கும் என்ற நன்நோக்கில்தான் பாமர மக்களும் பணத்தினை அள்ளிக் கொடுக்கின்றார்கள். இவை அத்தனையையும் உலமாக்களே முன்நின்று வழிகாட்டுகிறார்கள். ஆனால் இவைகள் நபிவழிதானா? இவற்றுக்கு மார்கத்தில் அனுமதி இருக்கின்றதா? இவற்றினால் இறைவனிடம் ஏதாவது நன்மைகள் கிட்டுமா? என்பது ஒரு புறமிருக்க இன்னுமோர் நடுநிலைத்தன்மையுடனும் திறந்த மனதுடனும் சமூக நலன் கருதி சிந்திக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்குமுள்ளது. அதாவது வருடா வருடம் நாடு பூராகவும் மீழாத் சோடனைகளுக்காகவும் மேற்சொன்ன வீன் செலவினங்களுக்குமாக செலவிடும் பணத்தொகை கணக்கிடுவோமாயின் பல கோடிக்கணக்கை தாண்டிவிடும். இக்கோடிக்கணக்காண பணத்தினைக் கொன்டு எமது நாட்டிலுள்ள எத்தனையோ ஏழைக் குமர்களின் கண்ணீரைத் துடைக்க முடியாதா? எத்தனையோ ரிசானாக்கள் வெளிநாடுகளில் வேதனைப்படுகின்றார்கள் அவர்களின் குடும்ப நிலமைகளை சீர் செய்ய முன்வர முடியாதா? எத்தனையோ ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் இடை நடுவில் விலகுகிறார்கள் இவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஏதாவது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முடியாதா? எத்தனையோ மதரசாக்கள் தொடர்ந்து கொன்டு செல்ல முடியாமல் மூடும் தருவாயில் வந்துள்ளது இவற்றுக்கு முட்டுக் கொடுக்க முடியாதா? அதற்கும் மேலாக எம் சமூகத்தின் பெயரால் ஓர் தரமான மீடியாவொன்ரை ஆரம்பித்து வைக்க முடியாதா? ........ இதுமட்டுமன்றி சமூகத்தின் அவசரத் தேவையாக ஒவ்வோர் ஊரிலும் எத்தனையோ தேவைகள் தேங்கிக் கிடக்கின்றன். இவைகள் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு நபிகளாரோ சஹாபாக்ககளா காட்டித்தராத நன்மைகள் கிடைக்குமா? என்று கூட கூற முடியாத ஓர் விடயத்துக்காக சமூகத்தின் கோடிக்கணக்கான பணத்தினை விரயமாக்குகின்றார்கள். இவை அத்தனைக்கும் இறைவன் முன் இவர்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். இவைமட்டுமல்ல நபிகளாரைக் கண்ணியப்படுத்தி புகழ்பாடுகின்றோம் என்ற பெயரால் இரவும் பகலும் ஒலி பெருக்கிகளில் பாடல்களை ஒலிபரப்பிக்கொன்டே இருகிரார்கள்.சுற்றுச் சூழலில் பரீட்சைக்காகப் படித்துக்கொன்டிருக்கும் மாணவர்களின் நிலையை யோசிக்கமாட்டார்கள்.அயலில் உள்ள சிறு குழந்தைகளை வைத்துக்கொன்டு தாய்மார்கள் படும் அவதிகளை எண்ணிக் கருனைகாட்டமாட்டார்கள். தூங்க முடியாமல் அவதிப்படும் வயோதிபர்கள் நோயாளிகளின் நிலைபற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்கள் நபிகளாரைப் புகளும் பாடல்களை ஒலித்துக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறு பள்ளிவாசல்களின் அக்கம்பக்கம் வசிக்கும் அப்பாவிகளை தொல்லைப்படுத்தியும் தொந்தரவு கொடுத்தும் வஞ்சிக்கும் புகழ்பாடுப் புகழாரத்தினை இறைவன் ஏற்றுக்கொள்வானா? நபிகளார்தான் ஏற்றுக்கொள்வார்களா? இதனால் நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? ஊரில் உள்ள சில வசதிக்காரர்களையும் அதிகாரிகளையும் ஆறுதல்படுத்திக்கொன்டு செய்தால் எல்லாம் சரிதான் என்ற உங்களின் சட்டம் எவ்வளவு கோமாளித்தனமும் கொடுமையானதுமானது என்பதனைப் புரியமாட்டடீர்களா? தயவு செய்து கண்மணி நாயகத்தின் பெயரால் நீங்கள் செய்கின்ற இவ்வாறான வண்கொடுமைகளை கைவிடுமறு இறைவனின் பெயரால் வேண்டிக் கொள்கின்றேன். இல்லையேல் அந்நபியின் கையால் தந்நீர் அருந்தும் பாக்கியம்கூட தவறிப்போகும்.ஏனெனில் நீங்கள் செய்யும் கொடுமைத்தனம் மிகவும் கொடுமையானது.நபிகளாரின அரும்மொழிகளை தயவு செய்து படியுங்கள் பின்பற்றுங்கள். இறைவன் நேர்வழி காட்டுவானாக.
ReplyDelete