அழுத்தங்களுக்கு அடிபணிய ஜனாதிபதி மஹிந்த மறுப்பு - ஷிராணியின் கதி இன்று தெரியவரும்...!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நாட்டின் பிரத நீதியரசராக நியமிக்கப்பட்ட ஷிராணி பண்டாநாயக்காவின் எதிர்காலம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் அறிந்துகொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் தனக்கெதிரான நம்பிக்கையில்லா குற்றப் பிரேணையை எதிர்கொண்டுள்ள பிரதத நீதியரசர் மீதான நம்பிக்கையில்லா பிரேணை மீதான விவாதம் இன்றும் இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை ஒதுக்கிவிட்டு பாராளுமன்றம் தற்போது ஷிராணி மீதான விவாத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் இன்றைய வெள்ளிக்கிழமை தினத்தை சட்வாளர்கள் கறுப்பு வெள்ளிக்கிழமையாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
மறுபுறம் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பொதுநலவாய நாட:டு நீதிபதிகள் அமைப்பு பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை முறையற்ற விதத்தில் பதவி நீக்க வேண்டாமென வலியுறுத்தி வருகின்றன.
இருந்தபோதும் அந்த அழுத்தங்கள் எவற்றுக்கும் அடிபணிய மறுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவர் தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கமும் ஷிராஷியை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து அகற்றுவதில் உறுதியாகவுள்ளன.
அந்தவகையில் ஷிராணி பண்டாரநாயக்காவின் எதிர்காலம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் எம்மால் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்..!
Post a Comment