முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு ஆபத்தான கட்டங்கள் உள்ளதா..?
(கழுகுப்பார்வை )
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் 24வது பேராளர் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிகழ்வில் மீண்டும் தலைமைப்பதவி அமைச்சர் றஊப் ஹக்கீமின் வசமாகியுள்ளது. நாட்டில் நாலாபுறமும் சிறுபான்மைச் சமுகமான மக்களின் ஒரு பிரிவாக வாழ்ந்துவருகின்ற முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பேரினவாதிகளின் அடங்கா அடக்குமுறைகளை தட்டிக்கேட்கும் ஒரேகட்சியாக வலம்வருகின்ற முகா கட்சி தன்னுடைய தலைமைப் பொறுப்பையும், ஆளும் அரசில் இருந்துகொண்டு அதனைச் சமாளிக்கும் தந்திரோபாயத்தையும் முன்கொண்டு செல்லும் அதன் தலைவர் றஊப் ஹக்கீமுக்கு எத்தனை தடைகள் வரினும் உடைத்தெரியும் தந்திரத்தையும் கொண்டுள்ள நிலையில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகள் அரசின் பக்கம் சாராமல் இருக்கும் வரையில்தான் அத்தனை வேகமும் என்பதை நன்றாகவே புரிந்துவைத்துள்ளார் அமைச்சர் அவர்கள்.
எதிர்காலத்தில் தமது பலம், பலவீனங்கள் எட்டு உறுப்பினர்களின் ஒற்றுமையில்தான் தங்கியுள்ளன என்பதை வெளிப்படையாகவே அமைச்சர் கூறியிருப்பதானது அரசின் எந்த நடவடிக்கைளாகட்டும் நமது உறுப்புரிமையாளர்கள் கட்சிக்கோட்பாட்டை கட்டியாள்பவர்களாக மட்டும் இருந்தால் போதும் நான் எந்தச் சவாலையும் எதிர்கொள்வேன் என்றும் கூறியிருப்பதன் மர்மம் மீண்டும் மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் யாரிலும் நம்பிக்கையற்ற நிலைமையே இதற்கான காரணமாகக்கூட இருக்கலாம். அரசினால் குட்டக்குட்ட குனிவதற்கு நாம் தயாரில்லை நமது அபிலாஷைகளுக்கு தடையாக வருகின்ற எதனையும் தட்டிக்கேட்பதற்கு நாம் தயாராகத்தான் உள்ளோம், ஆட்சியில் நீண்டு நிலைத்திருக்கவும் தயார். ஆனால் சிலவெளிப்படையான போக்குகளுக்கு எங்களை அரசு கையாளப்பாக்கின்ற ஒரு சமாச்சாரமும் எமக்குத் தெரிகின்றது என்கிற கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வரசில் நீண்டு நிலைத்திருக்க அரசின்பக்கம் வினாத்தொடுத்துள்ளதுபோலவும் தென்படுகின்றது.
அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களது உறுதியுரையான இப்பேச்சுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அண்மைக்காலமாக இலங்கையில் பேசப்பட்டு வருகின்ற ஒருவிடயம் சிறுபான்மையினர் பற்றிய தப்பான அபிப்பிராயங்களாகும். குறிப்பாக இலங்கையில் தமிழ், முஸ்;லீம்கள் என்கிற இருவகையின மக்களே சிறுபான்மையினமாக வாழ்ந்து வருகின்றனர். அதிலும் முஸ்லீம்கள் விடயத்தில் பேரினவாதிகளின் வர்ணனை மிகவும் ஆக்ரோசமாகவே தென்படுகின்றது. ஹலால், ஹறாம் எனும் சொல் முஸ்லீம்கள் மத்தியில் மதரீதியில் முக்கியத்துவம் பெற்று விளங்குவது உலகத்திற்கே தெரிந்தவிடயம். முஸ்லீம்கள் எப்போதுமே தனித்துவமான ஒரு நிலைப்பாட்டுடன் வாழ்பவர்கள். இஸ்லாம் போதிக்கின்ற மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன், நபிவழி போன்ற மூலாதாரங்களின் அடிப்படையில் தம்முடைய வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தானுன்டு, தன்தொழிலுன்டு, மார்க்கக் கடமைககளுக்காக பள்ளிவாசல் உண்டு என்கிற அடிப்படையிலும், தனித்துவமான முறையில் ஏனைய இனமக்களுடன் நல்லுறவை பேணிக்கொண்டும் வாழ்ந்து வருபவர்கள். ஏனைய இன மக்களுக்கான ஒரு இணைப்புப் பாலமாக இந்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள். இவர்களுக்கு என்று அன்றுதொடக்கம் அண்மையக் காலம்வரை குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸின் உருவாக்கம் வரை தேசிய கட்சிகளின் செல்வாக்குகளுக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.
இருப்பினும் சில கட்சிகள் தனித்துவமாக உருவாகி அச்சமூகத்தின் தேவைப்பாடுகளை மேற்கொள்கின்ற நிலைமை ஏற்படலாயின. அப்பொழுது முஸ்லீம்களுக்கான தனித்துவமான ஒரு கட்சி இல்லாமை காரணமாக முஸ்லீம்களின் முதுகில் குதிரையோட்டுபவர்களாகவே பேரினவாதிகளின் கட்சிகள் காணப்பட்டன. இதனைக் கருத்திற்கு கொண்டும், முஸ்லீம்களுக்கான உரிமைகளையும், இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லீம்களுக்கும் அனைத்தும் உண்டு என்பதை செயலில் காட்டவும், அவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு என்பதை வெளியுலகத்திற்கு கொண்டுசெல்லவும், மக்களை ஒன்றுசேர்ப்பதன் அவசியத்தையும் சரியான முறையில் உணர்ந்துகொண்ட சட்டத்தரணி முன்னாள் அமைச்சர், ஸ்ரீ.ல.மு.கா.கட்சியினை ஸ்தாபித்தவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் கிழக்குமாகாணத்தை குறிப்பாக அம்பாரை மாவட்டத்தை மையப்படுத்தியதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை உருவாக்கினார்.
இவ்வாறான கட்சி அவரின் மறைவின்பின்னர் பலதுண்டுகளாக உடைந்து போனதற்கு பலகாரணங்கள் கூறப்பட்டாலும், அதனைத் தடுத்துநிறுத்தும் உணர்வுகளை இன்றைய தலைமைத்துவத்திற்கு இப்போதாவது வந்துள்ளதே என்பதை நினைக்கும்போது சந்தோசமடைகின்றனர் அதன் வாக்காளர்கள். அதேவேளை இன்று பேரினவாதிகளின் பிடியில் சிக்குண்டு அல்லல் படுகின்ற ஒரு நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதா என எண்ணத்தோன்றும் அளவுக்கு அமைச்சுப்பதவிகளிலும், ஏனைய கொந்தராத்துக்களிலும் கவனம் செலுத்தவும், அரசியலில் இலாபம்தேடும் ஒருகட்சியாகவும் வலம் வருகின்ற ஒருபோக்கு காணப்பட்டாலும் தனித்துவமிக்க செல்வாக்குடன் தமக்கான உரிமைககள், சலுகைகள் போன்றவற்றை ஆட்சியில் இருக்கின்ற அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு தன்கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற ஒருநிலைமையும், அதிகளவான முஸ்லீம்களின் உள்ளத்தில் இருந்து கொண்டு இஸ்லாமிய வாழ்வுக்கும், சமயக் கடமைகளுக்கும், மார்க்க ரீதியான கட்டுப்பாடுகளுடன் கட்சியும் அதன் நடவடிக்கைகளும் உயிரோட்டமாகவே இருக்க வேண்டும் என்பதை பேராளர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய உரையை உரத்துத் தெரிவித்திருக்கலாம்.
ஸ்ரீ.ல.மு.கா.கட்சியின் உருவாகத்திற்குப் பிறகு இனவாத்தை கக்கிய பல பேரினவாதக் கட்சிகள் இந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தனர். அதனை முகா கட்சியும் நடாத்திக் கொண்டே இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களின் காலத்தில் தலைவர் அஷ்ரப் அவர்கள் சேகு இஸ்ஸத்தினை கட்சியிலிருந்து கழற்றிவிட்டார். அன்றிலிருந்து கட்சியின் முக்கியமானவர்கள் பலர் இன்றுவரை அதன் தலைமைப்பீடத்தினால் கழற்றப்பட்டு வருகின்றமை பேரினவாதிகளின் திக்குமுக்கான வேலைத்திட்டம் என்பதை இக்கட்சியாளர்களும், தூக்கிவீசப்படுகின்றவர்களும் முழுமையாக கண்டுகொண்டமையினால் மீண்டும் கட்சி பிளவுபடுவதற்கும், நமக்கான பாதைகளை மீண்டும் உருவாக்குவதற்குமுரிய தேவைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கஷ்டத்தை உணர்ந்திருந்தமையினால் முகா.தலைமை அமைச்சரின் பேச்சுக்கள் கடுமையாக இருந்தமை தனித்துவமான நடைமுறைகள் எங்களை விட்டுப்போகவில்லை என்கிற முத்திரைகள் குத்தப்பட்டுள்ளதையே மீண்டும் நிருபித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று நாடுமுழுவதும் முஸ்லீம்களுக்கான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான தலங்களாக இருக்கும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. தற்போது புதிதாக பள்ளிவாசல்கள் அமைக்க அல்லது கட்டமுடியாதபடி உபசட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் பிரதேசத்திலுள்ள காணிகள் சிங்கள மக்களினால் அபகரிக்கப்படுகின்;;;;;;;றன. பொத்துவில், ஒலுவில், இறக்காமம் போன்ற பிரதேசத்து காணிகள் பேரினவாதிகளின் புனிதத் தலமென்றபேரில் பறிக்கப்பட்டு வருகின்றன. மார்க்கக் கடமையை செய்யவிடாது கிறீஸ்பூதம் என்கிற மர்ம ஆசான்களை ஏவிவிட்டு அழகுபார்த்த அரசு, தற்போது வியாபாரத்தில் தொடங்கி, ஹறாம் ஹலால் விடயத்தை தூக்கிப்பிடிக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி நியமனத்தில் பாரபட்சம், கட்சியில் அபிமானர்களுக்கு எவ்வித தொழில்களும் வழங்கமுடியாத சிம்மசொப்பனமாக காட்சிதரும் அரசியல் வங்குரோத்துநிலைமை, அமைச்சராக இருந்தும் தலைமை நீதிபதிக்கு எதிராக அரசுடன் ஒட்டவேண்டிய கட்டாயம். இவ்வாறு பலதரப்பட்ட விடயங்களை அள்ளிவீசும் பேரினசக்திகள் சிங்கள பௌத்த தேரவாதத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்ட சிங்கள பௌத்தர்கள். இவற்றினைத் தட்டிக் கேட்குமளவுக்கு எந்த முஸ்;லீம் அமைச்சர்களின் வாய்களும் திறக்காமால் ஒட்டப்பட்டுள்ளன என்பதே உண்மையான யதார்த்தமாகவும் உணர்ந்துகொண்ட முகா.தலைவர் அடுத்தடைவை வாக்குக்கேட்பதற்கான முன்னேற்பாட்டை இவ்வுரையின் ஊடாக சொல்லாமலே சொல்விட்டார்.
பாருங்கள்! இன்று சிறுபான்மையினர் என்கிற காரணத்தினால் கல்வியிலும் கைவைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் அதிகளவில் சட்டக்கல்லூரிக்குள் தெரிவாகியமை நீதியமைச்சர் ஒரு முஸ்லீம் என்பதால் அவர் சலுகை வழங்கியிருக்கின்றார் எனும்கோஷம் பரப்பப்பட்டு வருகின்றது. கொழும்பில் திரும்பிய பக்கமெல்லாம் முஸ்லீம்களுக்கும், ஸ்ரீ.ல.மு.கா.கட்சிக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டில் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்து ஆண்டுகள் முப்பது ஆயுதப்போராட்டம் நடாத்தியவர்களையே தூக்கிவீசிவிட்டோம் நீங்கள் எம்மாத்திரம் என்று உரத்த தொனியில் கேள்விக்கனை தொடுக்கும் இன்றைய ஆளும் அரசியல்வாதிகளின் பார்வையில் ஒருசிறுபான்மையினத்தின் முள்ளதண்டினையே முட்டியெடுத்தாகி விட்டது. அடுத்த இனம் இந்த முஸ்லீம்கள்தான் என்பதை கண்டுகொண்டார்கள் என்பதால் இவ்வாறு அடக்கியாள நினைக்கின்ற போக்கை வெட்டியெடுத்து வீசும் நாளை றஊப் ஹக்கீம் உருவாக்கிக் கொண்டாரா என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
பொதுவாகவே முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு பணத்தை அல்லது பதவியை வழங்கி தன்பக்கம் இழுத்துவிடலாம் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை எப்போதுமே ஆட்சியாளர்களிடம் உண்டு என்பதைக் நன்கு அறிந்திருந்திருந்த பேரினவாதிகளின் தலைவர்கள் அன்று அம்பாரை நகரத்தை பேரினவாதிகளிடம் பால்வார்த்த கதையைக் கூறலாம். முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவிடம் முஸ்லீம்களின் அன்றைய தலைமைகள் தாரை வார்த்துக் கொடுத்தமையினால் இன்று அம்பாரை நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பேரினவாதிகளால் நிரம்பி வழிகின்ற ஒரு இடமாகவும் சனத் தொகையில் கிட்டத்தட்ட முஸ்லீம்களும் சிங்களவரும் சம அளவாகவே காணப்படுவதற்கும் இத்தகையை தலையாட்டி அரசியல்வாதிகள்தான் காரணமாக அமைந்திருந்தார்கள் என்பதை வரலாறு மறக்கவில்லை.
இத்தனைக்கும் காரணம் நமது தலைமைகள் ஒவ்வொரு காலமும் குட்டி பணிக்கப்பட்டுவருவதேயாகும். ஆமாப்போடும் தலையாட்டித் தலைவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்புகின்றோம். அவர்கள் பேரினவாதிகளின் கைபொம்மைகளாக மாற்றம் அடைந்து குட்டக் குட்டப் பணிபவர்களாகவே ஆக்கப்படுகின்றார்கள் என்பதுதான் இந்த முஸ்லீம் இனத்திற்கான பேராபத்தாகும். சுனாமி தாக்கம் ஏற்பட்டபோது அதிகம் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இந்த அரசு இன்னும் முழுமையாக செய்யாதவைகள் எவ்வளவோ உண்டு. ஆனால் சஊதி அரசினால் அக்கரைப்பற்று பிரதேச நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500வீட்டுத்திட்டங்களை ஏன் தருவதற்கு மறுக்கின்றார்கள். சரி நாட்டின் சிறுபான்மையினர் எதனையும் முழுமையாக அனுபவிக்கக்கூடாது நாமும் அதில் ருசிபார்க்கவும் வேண்டும் என்கிற மமதைகளை நமது அரசியல் வாதிகளின் ஆசீர்வாத்துடன் ஏப்பம்விடத் துடிக்கும் அரசியல் வாதிகளையும் சமூகம் கண்டு கொள்ளவேண்டும். அவர்களை எதிர்காலத்தில் தூக்கியெறியவும் துணிய வேண்டும்.
இனவாதிகளினால் முத்திரை குத்தப்பட்டுள்ள சில தமிழ்க் கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் பேரினவாதிகளின் எடுப்பார்கைப் பிள்ளைகளாக தனக்குள் உள்வாங்குவதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்துவருகின்றார்கள். தமிழ் தரப்பினருடைய அக்கட்சிகள் சில பேரினவாதத்தின் பிடியில் ஒருநாளும் சிக்காது என்பதை நினைத்து வருந்திக் கொண்டபோதிலும், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியை பொறிவைத்து சுக்குநூறாக்கி உடைத்தெரிந்து கல்லில் அடிபட்ட தேங்காயைப் போல சிதறுண்டுபோவதற்கு சந்தர்ப்பம் தீட்டிக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு சில மறைவான போர்க்கொடிகள் நடைபெற்றுக் கொண்டதுபோல தெரிகின்றது. இச்சந்தர்ப்பத்தை அன்று சிறப்பாக பயன்படுத்தியவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள். அவரின் மறைவின் பின்னர் இக்கட்சி நிலைதடுமாறி போதைமாத்திரை உட்கொண்டவன்போல கண்டுகொண்டதை இன்றைய அரசு நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்ற நிலைமைய மாற்றியமைக்கும் சக்தி பேராளார் மாநாட்டின் போது பேசப்பட்ட வார்த்தைகளுக்கு நிறையவே மதிப்புண்டு.
என்னதான் இருந்தாலும் முகா.தலைமைக்கு விதிக்கப்பட்டுள்ள ஆபத்தான கட்டங்கள் எதிர்வரும்காலங்களில் நிறையவே உள்ளன. தலைமைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், மாநாட்டில் எட்டப்பட்டுள்ள எட்டுத் தீர்மானங்கள் எவற்றையும் அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளாது என்பதுதான் யதார்த்தமாகும். இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு 2013ஆம் ஆண்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளுக்கு முகா.கட்சி உள்வாங்கப்படுமானால் மீண்டும் ஒரு முஸ்லீம் கட்சி உருவாகுவதற்கு தடையே இருக்காது என்பதை உணர்ந்து சிறுபான்மையினரின் உரிமைப் போராட்டத்தில் மீண்டும் களமிறங்கவும், தன்னை தயார்படுத்திற்கொள்ளவும் இப்பேராளர் மாநாடு தலைமைத்துவத்தி;ற்கு வழங்கிய அதிகாரம் போகபோகத்தான் தெரியும். அதுவரை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
Intha SLMC inal muslim samugathuku geduthan.
ReplyDeleteshmwajith: what is your meaning for that ? u mean that we muslim wanted to join that racist parties ?
ReplyDeleteமுஸ்லிம்களுக்கே ஆபத்து வரும் பொது உங்கள் தலைமைக்கு ஆபத்து வந்தால் என்ன ? வராட்டால் என்ன? முஸ்லிம்களுக்கு என்னதான் சைதிட்டீங்க? வாக்குப் போட்டுட்டு உரிமையோடு கேட்கிறேன்..
ReplyDelete