எஸ்.எப்.ஆர்.டி. வெள்ள நிவாரண பணி (படங்கள்)
நாட்டின் வெள்ள பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் அபிவிருத்தி மற்றும் நிவாரணத்திற்கான செரண்டிப் நிறுவனம் (எஸ்.எப்.ஆர்.டி) அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.
தற்காலிகமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பல்கலைக்கழங்களிலும் தங்கியிருந்த தென் மாகாண மக்களுக்கு சமைத்த உணவுகளும் இதர தேவைகளும் இனங்காணப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டன.
வட மாகாணத்தின் வவுனியா மன்னார் போன்ற மாவட்டங்களில் பல பிரதேசங்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டன. இங்குள்ள மக்களுக்கு சமைத்த உணவு, மருத்துவம், சுகாதாரப் பொதிகள், உலருணவு, அன்றாடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை எஸ்எப்ஆர்டி வழங்கியதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் போக்குவரத்து வசதிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டது.
கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மூதூர், ஏறாவூர், காத்தான்குடி போன்ற இடங்களுக்கு சமைத்த உணவு, உலருணவு, சுகாதாரப் பொதிகள் மற்றும் நடமாடும் வைத்திய முகாம்களை எஸ்எப்ஆர்டி ஏற்பாடு செய்தது.
சிலாபம், மாதம்பை, புத்தளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்;ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணறுகள், வீடுகள், பன்சல, கோவில், பாடசாலை, பள்ளிவாசல் போன்ற இடங்களை சிறந்த முறையில் சுத்தப்படுத்தும் பணிகளையும்; எஸ்எப்ஆர்டி மேற்கொண்டது.
Post a Comment