பாஸ்ட்புட் உணவு + நொறுக்கு தீனிகள் கண்களை பாதிக்கும் - ஆய்வில் புதிய தகவல்
பாஸ்ட்புட் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது இந்த உணவுகள் கண்களையும் பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
பாஸ்ட்புட் உணவு தொடர்பாக மருத்துவ பத்திரிகை ஒன்று சர்வதேச அளவில் ஆய்வு நடத்தியது. 50 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு கண்களில் எரிச்சல், தண்ணீர் வடிதல் போன்ற பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மேலும் பாஸ்ட் புட் உணவுகளில் உள்ள விஷ தன்மை வாய்ந்த கொழுப்பு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து உடல் நலத்தை கெடுப்பதும் தெரிந்தது. ஆனால் பழங்கள் அதிகம் சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சரி செய்து விடலாம் என்றும் ஆந்த ஆய்வு சொல்கிறது.
Post a Comment