Header Ads



நெருப்பு கோழி கறி என மனித மாமிசத்தை விற்றவன் கைது..!


தெற்கு சீனாவில் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவன் ஷங்யாங்மிங் (57). இவன் தொடர்ச்சியாக பலரை கொலை செய்தான். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான். 

அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித்தான். நெருப்பு கோழி கறி என ஏமாற்றி மார்க்கெட்டில் பகிரங்கமாக விற்றான். இதுபோன்று 11 பேரை கொலை செய்த ஷங்யாங் மிங்கை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்த தண்டனை அவனுக்கு நிறைவேற்றப்பட்டது.

No comments

Powered by Blogger.