யாழ்ப்பாணத்தில் மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டிகள்
எதிர்வரும் 2013 ஜனவரி 25ஆம் மற்றும் 26ஆம் தினங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள உதைப்பந்தாட்ட போட்டிகளில் முஸ்லிம் அணிகள் பங்கேற்கவுள்ளன. இத்தினங்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான யாழ்ப்பாண முஸ்லிம்களும் மற்றும் ஏனைய பிரதேச முஸ்லிம்களும் இன்ஷா அல்லாஹ் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் யாழ் முஸ்லிம் அணி, நீர்கொழும்பிலுள்ள யாழ் முஸ்லிம் கிரஸண்ட் அணி மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் அணி மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் முஸ்லிம் அணி என்பன முஸ்லிம்கள் சார்பில் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள ஞானமுருகன் அணி, சென்மேரிஸ் அணி, சென்நிக்கிலஸ் ஓவர் போர்டி அணி என்பனவற்றுடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய ஒரு அணியுடன் போட்டிகளை நடத்த முயற்சிகள் நடக்கின்றது.
யாழ் முஸ்லிம் ஓவர் போர்டி அணியில் ஆர்.முஸாதீக், எம்.எம்.முனாஸ், எம்.எஸ்.சலீம், எம்.எஸ்.எம்.ஜான்ஸின், ஜே.ஜுனைஸ், கே.எம்.சித்தீக், ஏ.எஸ்.சமீர், ஏ.ஆர்.வாஹிர், எஸ்.எச்.நியாஸ், எம்.நிம்ஸாத், எம்.நிரூஸ், ஐ. இர்ஷாத், எம்.சி. இன்ஸார், எம்.ஏ.சி.நிஹார், எம்.ஏ.சி.ஆஸாத், எம்.எம்.ஜன்ஸீர், ஏ.எம்.சரூக், ஏ.சி. நகீப், இ.நிலாம்தீன், எம்.சைனூஸ், எம்.ஜீனாஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
போட்டித் திகதிகளும் அணிகளும் நிர்ணயிக்கப்பட்டவுடன் ரசிகர்களுக்கு அறிவித்தல் இன்ஷா அல்லாஹ் தரப்படும்.
good news for jarl muslim fans
ReplyDelete