அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும் - ஆசைப்படும் சம்பந்தன்
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார். அவ்வுரையில் சம்பந்தன் மேலும் தெரிவித்தாவது,
"தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து வருகின்றது. மனித உரிமை மீறல் தொடருகின்றது. அனைத்துலக சமூகம் எமது நிலை தொடர்பாக தமது முயற்சிகளை கைவிட முடியாது. தொடர்ந்து செயற்பட்டு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்.
சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும் பறிக்க விடமுடியாது. அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும். அதிகாரம் நம் கைகளில் இல்லாதபடியால் நாம் இப்போதும் சமமான மக்களாக வாழமுடியாத நிலையில் உள்ளோம்.
அமெரிக்க அரசாங்கக் குழு கொழும்பு வரவுள்ளது. நாம் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில் தற்போதைய நிலவரங்களில் மாற்றம் ஏற்படலாம்"- இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.
ஒன்று மட்டும் புரிகிறது
ReplyDeleteஇன்று வரைக்கும் இம் மூன்று சமூகமும் தங்களுக்குரிய எல்லைகளில் நின்றே பேசுகின்றன.
மாற்று சமூகத்துடனான சந்தேக உணர்வு அரசியல் தலைமைகளுடன் அரசியல் தலைவர்களுக்கு இன்னும் இருக்கும் போது எவ்வாறு மக்களை ஒன்று படுத்த முடியும்.
அதிகாரம் இருப்பவர் மற்றவரை நசுக்குவது தானே இன்றைய நாகரீக ஜனநாயகம்.
ஐயா, எல்லோரும் இழந்தது போதும் ஏதாவது ஒன்றை இச்சமூகதுக்கும், இந்நாட்டுக்கும்,பெற்று கொடுங்கள்.