அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழகங்களின் பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும்
(எம்.ஐ.முஹம்மட் பைஷல், எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை பிரதேச அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சமூகசேவைகள் அமைப்பின் (சம்மேளனம்) வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் எதிர்வரும் 13.01.2013 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அட்டாளைச்சேனை ஆலங்குளம் றஹ்மானியா பாடசாலையில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எச்.ஹம்ஸா ஜே.பி தலைமையில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுக் கழகங்களின் குறை நிறைகளை முன்வைப்பதுடன் எதிர்காலத்தில் அனைத்து விளையாட்டுக் கழகங்களும் எவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதன் அவசியத்தையும் தெரியப்படுத்தவுள்ளனர்.
அன்றைய தினம் சம்மேளன கிரிக்கட் அணிக்கும், ஆலங்குளம் அல் அக்ஸா மற்றும் பைனா விளையாட்டுக் கழகங்களின் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டிகளும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் தெரிவித்தர்.
2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு பல்வேறு பங்களிப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா வரலாற்றில் முதற் தடவையாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமான அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது அவ்விளையாட்டு விழா சிறப்புடன் நடைபெற மைதானத்தில் தற்காளிக பார்வையாளர் கூடம் மற்றும் ஏனைய மாவட்ட வீரர்களை வரவேற்கின்ற பதாகைகளை ஏற்பாடு செய்ததும் விஷேட அம்சமாகும்.
Post a Comment