'மோடியின் சாதனை' இந்தியா முஸ்லிம்கள் அதிக வறுமையில் வாடுவது குஜராத்தில்தான்
(Th) இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வறுமையில் வாடும் மாநிலங்களில் ஒன்று குஜராத் என்று திட்டக் கமிஷனின் அறிக்கை கூறுகிறது. தேசிய வளர்ச்சிக் குழு அங்கீகரித்த 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் ஆவணத்தில் உத்தர பிரதேசம், பீகார், மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுடன் நகர – கிராம வித்தியாசமில்லாமல் குஜராத்திலும் முஸ்லிம்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உ.பி, குஜராத், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் நகரப்பகுதிகளில் 33.9 சதவீத முஸ்லிம்களும் கடுமையான வறுமையில் வாடுகின்றனர். அஸ்ஸாம், உத்தரபிரதேசம்,மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் கிராம பகுதிகளிலும் வறுமையில் வாடுவோரின் சதவீதம்
அதிகமாகும்.
நாட்டின் மொத்த சிறுபான்மை மக்களின் 73 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட முஸ்லிம்கள் இதர சிறுபான்மை சமூகங்களை தவிர கல்வி அறிவிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்படுதல், பாரபட்சம் ஆகியவற்றிற்கு இரையாகும் முஸ்லிம்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித்திட்டங்களின் பயன்கள் சென்று அடைவதில்லை என்று திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுகிறது.
இவர்கள் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அங்கீகரித்த அல்லது கண்டுகொள்ளாத நவீன ஜனநாயகவாதிகள்.
ReplyDeleteபாரத பிரதமராகும் கனவுடன் ......மோடி?
வாழ்க பாரத ஜனநாயகம்.