பௌத்த பெண் துறவிகளது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது
(ஜே.எம்.ஹபீஸ்)
பௌத்தம் மற்றும் பெண் துறவிகளது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடிச் செல்லவேண்டிய நிலை இன்று தோன்றியுள்ளதாக ரங்கிரி தம்புள்ள ரஜமகா விகாராதிபதியும், ரங்கிரி தம்புள்ள பீடத்தின் மகா நாயக்கத் தேரருமான இனாமலுவே சுமங்கள தெரிவித்தார்.
இன்று (3.1.2013) தம்புள்ளை உயன்வத்தை மைதானத்தில் என்ற இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
பௌத்த மகளிர் தொடர்பான சில உரிமைகளையும், பெண்துறவிகள் தொடர்பான உரிமைகளையும் பௌத்த சமய விவகாரத்திணைக்கள ஆணையாளர் அல்லது பௌத்த விவகார அமைச்சு நிறைவேற்றுவதில் காட்டும் அசிரத்தை கவலை அளிப்பதாகவும் நீதிமன்றங்கள் மூலம் இவ் உரிமையைப் பெறவேண்டிய சூழ் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment