மக்களை விழுங்கும் அரசியல்வாதிகள் - அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரின் குமுறல்
வாழ்தாரச் சுமைகள், பொருட்களின் விலையேற்றம், அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமது இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பலவாறான அறிக்கைகளை விடும் அரசியல்வாதிகள் மக்களின் கஷ்டங்களை தேர்தல் காலங்களில் கண்டு கொள்பவர்களாக மாத்திரமே இருக்கின்றனர்.
குறிப்பிட்ட பிரதேசத்திற்கான அரசியல் பிரமுகர் எனப்படுபவர் அங்கு வாழும் மக்களுக்குத் தலைவர் ஆவார். இவர் தன் கடமைகளை மறந்து விடுகிறார். கல்வி கற்பதற்கு போதிய வசதியில்லாமல் வாழும் மாணவர்கள், கணவனை இழந்து தவிக்கும் விதவைகள்,வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்கள் என எத்தனையோ பிரச்சினைகள் கண்முன்னே இருந்தும் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். ஆனால், தேர்தல் வருகின்ற போது பள்ளி உடைப்பு என்று மக்களின் இதயங்களில் துவேச உணர்வினை ஏற்படுத்தி அவர்களை சலவை செய்து பழைய சங்கதிகளையெல்லாம் மழுங்கடிக்கச் செய்து புதைத்துவிடுகிறார்கள்.
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் கதைபோலாகிறது. மக்களின் அறியாமையும், உணர்ச்சி வசப்படுதலும், நமக்காக கட்சிகளும் தலைவர்களும் என்ற எண்ணம் மாறி கட்சிக்காக நாம் என்று மாற்றப்பட்டுவிட்டோம். இதுயார் செய்த தவறு? பலவருடங்களுக்கொருமுறை வரும் வாக்கு எனும் கோடாரியைக் கொhண்டு பிழையானவைகளை தறிக்காமல் விட்டுவி;ட்டது யார் செய்த பிழை? எதற்கெடுத்தாலும் நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று ஒதுங்கி எமது குழந்தைகளின் எதிர்காலத்தை நாசம் செய்து விடுகிறோம். நமது குழந்தைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் குன்றும் குழியுமாக இருக்கிறது என எதிர்த்து எத்தனை பேர் போராடியுள்ளோம். வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு உதவ முன்வராத தலைவர்களை எத்தனை பேர் தட்டிக் கேட்டுள்ளோம்.
எம்மிடம் கேள்விகளும் இல்லை விடைகளும் இல்லை
உலகிலே எல்லா விலங்குகளைப் போல் பிறந்து மடிவதற்கு நாம் மனிதர்களாக உருவெடுத்திருக்கவே தேவையில்லை.
இனிவரும் காலங்களிலாவது எம்முள் புது உதிரம் சுரக்க வேண்டும். இரத்தம், நாடி, நரம்புகள் எல்லாம் நம்மையும் நமது மண்ணையும் எமது பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளை கலந்து விட்டுள்ள தலைவர்களை தெரிவு செய்ய அல்லது உருவாக்க ஆயத்தமாவோம்.
எஸ்.எம். சபீஸ்
மாநகர சபை உறுப்பினர்
அக்கரைப்பற்று
நல்ல பரிசாரிய போய் பாருங்க ......
ReplyDeleteஉங்களுக்கு பேய் புடிச்சிட்டு போல ....
நீங்க இப்பவும் தேசிய காங்கிரஸ் உறுப்பினரா?
என்ன ஊரில் வெள்ளம் வடிஞ்சிட்டாகும்.
என்ன சார் ரத்தம், நாடி, நரம்பு பற்றி பேசுகிறீர்கள் என்ன நீங்க நல்ல டாக்டரா? இல்ல கள்ள டாக்டரா?
சபீஸ் அவர்களே!ஆட்சி உங்களுடையது. நீங்கள் யாரை கேள்வி கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் அரசியல் விளம்பரத்திட்காக பேசுவதுதான் உண்மை.அக்கரைப்படற்றின் கௌரவத்தை தேசியரீதியில் அவமதிக்க செய்தவர்கள்.வன்முறை களங்கள் நீங்களும் இன்றைய மாகான சபை உறுப்பினரும் சேர்ந்து தலைவருக்காய் உருவாக்கி ஒழுக்கமற்ற இளைஞர் சமூகத்துக்கு வித்திட்டவர்கள்.உங்கள் அரசியல் பிரவேசத்தின் முதல் வேலையே உங்களுடைய வீதியை உங்களின் வாகனம் செல்ல சீமந்து பாதையாக மாற்றியதுதான். முடிந்தால் ஊடகவியளார்களை அழைத்து உங்கள் கருத்துக்களை துணிந்து கூறுங்கள்.
ReplyDeleteஆகாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பது போல் சொல்லாதிங்க AHAMED. சமூகம் சம்பந்தமா பேசுறதுக்கோ யோசிக்கிறதுக்கோ ஒருத்தருக்காவது துணிவு வந்து இருக்கு என்று சந்தோசப்படுங்க.
ReplyDeleteஹலோ முல்லா சரியாக சொன்னயல் சபீச போய் பொம்புள்ள எண்டு....
ReplyDeleteசபீசே பேசினது மல்லாந்து படுத்துக்கு மேல துப்பின சட,
அதில நீங்க நியாம் கேக்கிற வேற...இவனுகள் உதவி தவிசாளரா இருந்து கிழிச்சிட்டாங்க இப்ப கதைக்கிறதுக்கு.
இவர கதையை ஆதரிகிறவங்க நல்ல படிச்ச முட்டாளுகள் .......
நம்மட ஊருக்குதான் நல்ல அரசியல் கலாச்சாரம் உண்டே ....
பிஸ்மில் சொல்லுவாங்க,
பள்ளி தலைவரையும் மரைக்கார்மாரையும் மேடையில ஏத்துவாங்க
இடைக்கிடை வெடிலும் சுடுவாங்க,
(ஏன் எண்டா அவிய கஷ்ட்டப்பட்டு உழைத்தது )
அவன இவன பத்தி கழுவுவாங்க,
பின்ன பாட்டு படிப்பான்க,மியூசிக் அடிப்பாங்க,
கடைசியா சலவாத்தும் எழும்பி நிண்டு சொல்லுவாங்க.
கேக்கிறவன் காத தூக்கி கொடுத்தா குத்துறவன் ஊசிக்கு பதிலா உலக்கையால் குத்துவானாம் எண்டு சொல்லுங்கோ.
ரெலிக்கொம் கம்பத்தை நகர்த்துதல்.
ReplyDeleteT/P No: 0672277989. A/cc No: 0005234719.
மேற்படி தொலைபேசி இணைப்பிற்கான ரெலிக்கொம் கம்பமானது (Telecom Post) குறித்த வீதியின் மருங்கிலிருந்து 2.5 அடி வீதியில் காணப்படுகிறது.
தற்போது அவ்வீதி கொங்றீற் இடப்பட்டு திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. Telecom Post உள்ள இடத்தில் கொங்றீற் இடமுன்னர் அக்கம்பத்தை பிடுங்கி பாதையின் மறுங்கில் நட்டு கொங்றீற் பாதையமைப்பை சிறப்பாக மேற்கொள்வற்கு ஏற்பாடு செய்யுமாறும் அதை தொடர்ந்து மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்தி வைக்குமாறும் கடந்த 20.11.2012ம் திகதி முதல் சம்மந்தப்பட்ட எல்லா அதிகாரிகளிடமும் (குறிப்பாக பொறியியலாளர், மாநகர சபை, அக்கரைப்பற்று மற்றும் சிறிலங்கா ரெலிக்கொம் போன்றோர்களிடம்) கேட்டிருந்தும் இன்றுவரை (13.01.2013) எதுவும் நடக்கவில்லை.
Telecom Post குறித்த வீதியின் மருங்கிலிருந்து 2.5 அடி வீதியில் (யூனியன் வீதி, அக்கரைப்பற்று -01) வைத்தவாறே கொங்றீற் றோட் போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வதிகாரிகள் ??????.
சகோதரா அப்துல் கனீம் முஸ்தபா,
ReplyDeleteகண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம் பத்தி கேள்விப்பட்டதுண்டு,
ஆனால் சூரியன் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம் பத்தி கேள்விப்பட்டதுண்டா ?
இவனுகள் இதையும் சொல்லுவான்னுகள் இதுக்கு மேலேயும் சொல்லுவான்னுகள்.
ஏன் என்டா நம்மளுக்குத்தான்....
உன்ன விட்டா வெள்ளாமைகாரனுமில்ல
என்ன விட்டா போடியாரும் இல்லை.
இது அவனுகளுக்கு ரொம்ப நல்லா தெரியும்.
அதாவுல்லா, தம்பி தவம் போன்றவர்களை நமது ஊர் அரசியல் வாதிகள் எண்டு சொல்றாங்க ஜும்மா ஆ வுக்கு கூட போறல்ல.ஆனா எலசன் வந்தா பள்ளிக்கராகள் தீர்மானம் அறிவிப்பாங்க.நமுட ஊர் காசி ஆரியதாசட கடயில தண்ணியா போகுது.
ReplyDeleteதெரியாமத்தான் கேககன் யார் அந்த ஆரியதாச? mineral water கடி வெச்சிரிக்காரா ??? கொஞ்சம் தெளிவா எல்லாருக்கும் வெலேன்குரபோலே யாரு எங்கே எப்ப தண்ணி குடிச்செண்டு ???
ReplyDeleteசகோதரி ருஸ்தியா ! ஒருவகையான மினரல் வோடர்தான்.அது குடிச்சாதான் போஸ்டர் ஓட்டலாம் அரசியல் செய்யாலாம் .பொங்கல் சித்திரைய விட நம்முட பெர்னாளுக்கு தான் கூட பிசினிசாம்
ReplyDelete