அக்கரைப்பற்று மாநகர சபையின் கவனத்திற்கு..! (படங்கள் இணைப்பு)
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட உள் வீதிகள் அனைத்தும் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு சேதமடைந்துள்ளதனால் உடனடியாக புனரமைப்புச்செய்து பொதுமக்களின் பாவனைக்கு விடுமாறு கோரிக்கை.
அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட உள் வீதிகள் அனைத்தும் போக்குவரத்து செய்ய முடியாதவாறு குன்றும், குழியுமாக சேதடைந்திருப்பதனால்; வாகனங்களிலோ, துவிச்சக்கர வண்டிகளிலோ, கால்நடையாகவோ பிரயாணம் செய்ய முடியாதவாறு சேதமடைந்துள்ளது. அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியினால் மாத்திரமே போக்குவரத்துச்செய்யமுடியமே தவிர உள்வீதிகளில் போக்குவரத்துச்செய்ய முடியாமல் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாடசாலை மாணவர்களும் இப்பாதையினால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்து வருவதனால் தாழ்நிலப்பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதுடன் வீதிகள் குள்றும் குழியுமாகவே இருந்த வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளது. அனைத்து உள்வீதிகளும் வடிகான் அமைக்கும் நோக்கில் தோண்டப்பட்டுள்ளதுடன் ஒரு வீதியைக்கூட முற்றாக வடிகான் அமைத்து இன்னும் பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமல்லாது மழை காலம் என்பதனால் விரைவாகவும் பூர்த்தி செய்யப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்டு வீதி மற்றும் வடிகான் அபிவிருத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது இருந்தபோதிலும் வருடத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை காலம் என்பதனை திட்டமிட்டவர்கள் ஏன் திட்டமிட்டிருக்கவில்லை. அவற்றிலும் பிரதேசத்திற்குள் செல்லும் ஒரு வீதியை கூட வடிகான் அமைத்து வீதி சீர் செய்யப்படவில்லை. வடிகானுக்காக தோண்டப்பட்ட குழி வேறு ஏற்கனவே இருந்த குழி வேறு என்று பொது மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்துவருகின்றனர்.
எனவே வீதி மற்றும் வடிகான் அபிவிருத்தியை மேற்கொண்டு வருபவர்கள் ஒரு வீதியையாவது வடிகான் அமைத்து பாதையை சீர் செய்து அன்றாட பாவனைக்கு உதவுமாறு அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment