'இது சிங்கள நாடு' - தமிழில் தேசிய கீதம் தேவையில்லையென வாதம்
தேசிய கீதத்தில் சில பகுதிகள் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழிகளில் மீள அமைக்க தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இதற்கு ஜாதிக ஹெல உறுமய + பெளத்த,சிங்கள அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
இவ்வாறு மீளமைக்கப்பட்டும் தேசிய கீதம், தேசிய நிகழ்வுகளில் போது இசைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றம் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாநயகார குறிப்பிட்டுள்ளார். தேசிய நிகழ்வுகள் அல்லாதவற்றில் தமது தாய்மொழியில் தேசிய கீதத்தை இசைக்கலாம் எனவும் அமைச்சர் கடத்த தினத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஜாதி ஜல உரிமையவின மத்திய மாகாண உறுப்பினர் துஸார சுவர்ணதிலக்க இதற்கு தமது எதிர்பை தெரிவித்தார்.
கட் துஸார. இது சிங்களபௌத்த நாடு, இந்த நாடு ஆபத்தான நிலையில் இருந்த போது அதனை மீட்பதற்கு போராடியவர்கள் யார் என்பது அவருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். இவரை போன்ற மார்க்சிசவாதிகளை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.
......................................................................................
தேசிய கீதத்தில் தமிழ்மொழியும் சேர்க்கப்பட்டால், நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது பௌத்த ராமன்ன பீடம்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ராமன்ன பீடத்தின் பிரதம சங்கநாயக்கரான வண. நபன பிறேமசிறி நாயக்க தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் உள்ளடக்குவதை மகாசங்கம் சகித்துக் கொண்டிருக்காது. எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே, இந்த தேசியகீதம் 1940களில் இயற்றப்பட்டது. நாட்டில் உள்ள எல்லா இன மக்களிடையேயும் இது சகோதர உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த தேசிய கீதத்தை எல்லா இனமக்களும் மதிக்கின்றனர். இதனை மாற்றும் அரசியல்வாதிகளின் முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது. இது இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சி என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, அமைச்சர் விமல் வீரவன்சவும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தேசிய கீதத்தை மாற்றுவதை தாம் எதிர்ப்பதாக கூறியுள்ள அவர், தேசிய கீதத்தில் எத்தகைய மாற்றத்தை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெறப்பட வேண்டும் அல்லது கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த யோசனைக்கு பல பெளத்த,சிங்கள அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Racism... Racism...It is not in their blood. It is in their heart.
ReplyDelete