ரிஸானாவைப் பாதுகாப்பதற்கு தவறி விட்டோமா..?
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அவர்களது வரலாற்றில் என்றுமில்லாதளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி அவற்றை எவ்வாறு எதிர்கொள்வதென்ற தடுமாற்றத்தில் இருக்கும் கட்டத்தில் மூதூர் ரிஸானா நபீக் தூக்கிலடப்பட்டார் என்ற மிகத் துயரமான செய்தியும் எட்டியுள்ளது.
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இச்செய்தி ஒரு பேரிடியாகவே அமைந்திருக்கின்றது.
தனது குடும்ப வறுமையைப் போக்குவதற்காக பசுமையை நோக்கி சவூதி அரேபியா சென்ற இந்த இளம் யுவதிக்கு இப்படியொரு அனர்த்தம் நடந்துவிடும் என கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சூழலிலே அவர் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டு ஏழு வருடங்களுக்குப் பின் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதனன்று முற்பகல் 11.40 மணியளவிலே ரிஸானா துக்கிலிடப்பட்டுள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இச்செய்தி முழு நாட்டுக்கும் பரவியது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி இச்செய்தியைக் கேட்ட எல்லோரும் கதி கலங்கினர். பலர் கண்ணீர் விட்டழுதனர். அநேகர் தம் குடும்பத்தில் நடந்த ஒரு மரணம் போன்று உணர்வுகளை வெளியிட்டனர்.
இலங்கைப் பாராளுமன்றத்திலும் ஒரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரலாற்றில் முதன் முறையாக ஒரு சாதாரண பிரஜையின் மறைவுக்காக முழுப் பாராளுமன்றமும் மௌனம் செலுத்திய சந்தர்ப்பம் இதுவாகும். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் பிரேரணைப்படியே அந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தவிர, சகல கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தி உரையாற்றினர். சகல கட்சிகளதும் பிரதிநிதிகளும் ஒரு தனி நபர் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையும் இதுவாகவே இருந்தது.
ஒரு நிகழ்வு இடம்பெற்ற பின் இப்படியெல்லாம் செய்தாலும் அது வரலாறாக இருந்தாலும் கூட ரிஸானாவுக்கு இந்தக் கதி ஏற்பட அரசாங்கம், முஸ்லிம் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் முஸ்லிம் வழக்கறிஞர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களில் நியாயமில்லாமலில்லை.
30.04.2012ம் திகதி நவமணி அதன் முதற் பக்கத்தில் ரிஸானா எந்நேரத்திலும் துõக்கிலிப்படலாம் என்ற செய்தியை வெளியிட்டிருந்தது. எமக்குக் கிடைத்த தகுந்த ஆதாரங்களுடனே நாம் இதனை வெளியிட்டிருந்தோம். ரிஸானாவை மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்ற துய நோக்கத்திலே நவமணி அச்செய்திக்கு முக்கியத்துவமளித்து பிரசுரித்தது. அச் செய்தியைப் பிரசுரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திலான் பெரேரா உட்பட அரச தரப்பில் பலரது வசை பேச்சுக்கும் நவமணி உள்ளானது.
நாம் செய்தியை வெளியிட்டு ஏழு மாதமும 9 நாட்களுக்குள் ரிஸானாவுக்குரிய மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.
ரிஸானாவுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு முஸ்லிமல்லாத பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்த ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் இந்த நாடு எந்த நிலையிலிருந்திருக்கும் என்பதனை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இன்று இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக நாளுக்கு நாள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகச் செயல்களுடன் ஒப்பிடும் போது எவ்வளவு பாரதுõரமாக இருந்திருக்கும்.
ரிஸானா போன்ற வாழ வேண்டிய வயதிலும் படிக்க வேண்டிய வயதிலுமுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் யுவதிகள், பெண்கள் இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பசுமையைத் தேடித் தொழில் புரிந்து வருகின்றார்கள். வீடுகளில் தொழில் செய்யக்கூடிய ஆண்களிருக்கும்போது வயது வந்த பெண்களை தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வாழ்க்கை நடத்தும் முறை இன்று நம் சமூகத்திலே ஒரு வழக்கமாகி (பெஷனாகி) விட்டது.
ரிஸானாவுக்கு நடந்தது போன்ற நிலை எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்படக்கூடாது. ரிஸானா போன்ற ஆயிரக்கணக்கான ரிஸானாக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரிகிறார்கள். இவ்வாறு பெண்கள் வெளிநாடுகளில் சென்று தனியாக தொழில் புரிவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம். இது பற்றி அரசாங்கம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நம்மை விட வறுமையான நாடுகள் பல பெண்கள் தொழிலுக்குச் செல்வதனைத் தடை செய்துள்ளன.
ரிஸானாவைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்தது. அந்த வழிமுறைகள் சரியானதா என்பது பற்றி விமர்சனங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு முறை சவூதி அரேபிய மன்னருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தார். இந்த விவகாரத்தை கையாளுவதற்காக சவூதி அரேபியாவுடன் நெருங்கிய தொடர்புடைய அரபு மொழியில் பரச்சியமுடைய அல்ஹாஜ் காதர் மௌலானாவை நியமித்திருந்தார். அவர் தனக்குரிய பணியைச் செய்தாரா என்பதும் கேள்விக்குரியே. அமைச்சர்கள் மட்டக்குழு அங்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.
இது தவிர, உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் இலங்கை மனித உரிமை அமைப்புக்கள் ரிஸானாவுக்காக குரல் கொடுத்தார்கள்.
குறித்த பெற்றோர்கள் மன்னிப்பளிக்கத் தவறியதனாலே ரிஸானாவுக்கு இந்தக் கதி ஏற்பட்டது. மன்னிப்பளிப்பது இஸ்லாத்தின் மிக மேலான செயலாகும். இந்தப் பெண்ணுக்கு மன்னிப்பளித்திருந்தால் ஷரியத் சட்டத்தைப் பற்றி மிக மோசமாக விமர்சிப்போருக்கு சிறந்த பதிலாக அமைந்திருக்கும். முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள அறிக்கையில் குழந்தையின் பெற்றார்கள் மன்னிப்பளிக்க முன்வராதது குறித்து தமது ஆழ்ந்த அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அத்துடன் ரிஸானாவின் வழக்கு விசாரணை ஆவனங்களை சவூதி அரேபிய அரசு வெளியிடுமாறும் கேட்டுள்ளது. எதிர்காலத்தில் வெளிநாட்டுத் தொழில்களை நாடிச் செல்வோருக்கு இது போன்ற சம்பவங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு இந்த வழக்கின் ஆவனங்களை இலங்கை சட்ட நிபுணர்கள் படிப்பது மிக முக்கியமானது.
ஏழு வருடங்களின் பின் ரிஸானாவை பறி கொடுத்து விட்டோம். இந்த விடயத்தில் ஷரியத் சட்டம் பற்றி விமர்சிப்பதற்கு இடமளிக்காது ஷரியத் சட்டங்களை மீறி நடந்தவற்றை உலகுக்கு எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது. ஷரியத் சட்டத்தின் போர்வையில் ஷரியத்துக்கு மாற்றமாக பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றைப் பகிரங்கப்படுத்துவதன் மூலமே ஷரியத் சட்டத்தின் புனிதத்தைப் பாதுகாக்கலாம்.
ரிஸானா எதற்காக சென்றாரோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. ரஸானாவின் குடும்பத்தார் விடிவின்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் நெருக்கடியான நிலைக்குள்ளாகியுள்ளார்கள். இந்தக் குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்து வாழ வழி செய்வது அரசினதும் சமூகத்தினதும் கடமையாகும்.
ரிஸானாவுக்காக நவமணி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இறை நியதிப்படி அவருக்கு மரணம் நிகழ்ந்து விட்டது. ரிஸானாவின் குடும்பத்துக்கும் குறிப்பாக அவரது மறைவால் வேதனைப்படும் மூதுõர் மக்களுக்கும் நவமணி அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.
iravanin thandanaiyai pilai kanukirirkala??????? iravan muslinkalai pathu kaka vendum.
ReplyDelete@shamree, dont make idiotic comment. read the article properly and make a sensible comment.
ReplyDeleteVery good article indeed. It is true there is a huge failure from the state and president as a whole. The actual fact is the state and the government officials have no backbone to meet the Saudi official and and for the so called evidence in this case by looking in their eyes. When a Brit or American is accused the state will be on their toes to ensure the secure release of the individual concerned but our state officials are just cowards they can just hoodwink the gullible innocent Sri Lankan public.
So happened is happened. Rizana is not going to come back but at least will
1. Help Rizana's poor family financially and other means so her objective for going to this land will be fulfilled. Why dont your website start/initiate some kind of welfare project to get the help from the readers??
2. Prevent this tragedy happening in the near future. I can guarantee this can happen again in Saudi without any thought or concern for this public outcry. Because in their land most of the Saudis live just like animals without any contacts to outside world. This is not because they dont have the money or technology. They have more than their need but they simply "DONT CARE". This attitude is most common among the people in that blessed land (brother would know if you have been there). They dont give a damn about anyone (individual or government) or any human rights laws.
I am still in doubt that the parents of the diseased child are aware a tiny bit of whats going on in the entire world because of their action. However, the saddest truth is that they had a very good opportunity to proof among the non Muslims in the world how peaceful Islam is and how Sharia value the forgiveness is but unfortunately they showed their stubbornness (or perhaps arrogance) after all its their right but it paved the way for the blame and tarnished the good image of Islam and Sharia which is a practical law unlike the man made double standard ridiculous law of the western world which governs all of us today.
Nyc explaination brothr abd,can u please explain ths exactly fair or unfair? Pls reply
Delete