திருகோணமலை பொது வைத்தியசாலை உள்ளக முரண்பாடு - பொதுமக்கள் பாதிப்பு
(அஸ்மி)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிற்றுழியர்களுக்கும், தாதியர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுவதாக தெரியவருகின்றது.பல வருடங்களாக எதுவிதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் காணப்பட்ட இவ்வைத்தியசாலையில் தற்போது ஆர்பாட்டங்களும்,பணிப்பகிஸ்கரிப்பும் ஏன் இடம்பெறுகின்றது என்ற சந்தேகமும் உருவெடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வைத்தியசாலையில் எழுந்துள்ள பிரச்சினை மிகவும் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கின்றது. ஒரு உத்தியோகத்தருக்கு தன்னை அடையாளப்படுத்த தனது உத்தியோகத்திற்கேற்பவுமே சீருடைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், தாதியர்களுக்கும் இடையிலே தற்போது உருவெடுத்துள்ள சீருடைப் பிரச்சினை பொதுமக்களை தினந்தோறும் நேரகாலம் அற்ற முறையில் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.
தாதியர்களுக்கு ஈடான முறையில் சிற்றுழியர்கள் சீருடை அணிவதாகக் கருதியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இருசாராருக்குமிடையே முறுகல் நிலை வலுப்பெற்று வருகின்றது. இவர்களுடைய விட்டுக்கொடுப்பற்ற தன்மையினாலும், ஒரு சில இனவாத சக்திகளின் தூன்டுதல்களாலும் திருகோணமலை; வைத்தியசாலையின் நிர்வாகத்தின் மாற்றத்தினை ஏற்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள சிற்றுழியர்களையும்,நிர்வாகத்தையும் குழப்ப நிலைக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள். சிற்றுழியர்களின் .இச்சீருடைப்பிரச்சனைக்கு முன்முரமாக செயற்பட்டு வரும் சில உத்தியோகத்தர்கள் அரசியல் கட்சிகளிலும்,சில அமைப்புக்களிலும் அங்கம் வகிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் ஒட்டுமொத்தமாக உடந்தையாக இருப்பது மிகவும் வேதனையாகவுள்ளது.இதே போன்று ஊழியர்களும்,தாதியர்களும் மக்களினுடைய தேவைகளுக்காக போராட்டங்களை நடத்துவார்களேயானால் வரவேற்கத்தக்கது. இவ்வாறானதொரு செயற்பாடு வெறுமனே சுயநலப் போக்கே அன்றி வேறு மக்களுக்கு நன்மைதரும் விடயமும் அல்ல. இவர்களுடைய அநாகரீகமான செயற்பாடுகளால் எமது மாவட்டத்தில் உள்ள தமிழ்பேசும் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.எனவே மும்மொழிகளிலும் (தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்) பேசத்தெரிந்த அதிகாரிகளின் சொற்களை கேட்காமல் இரண்டு மொழிகளை பேசி விளக்கமின்றி,குழப்பத்தினை ஏற்படுத்துபவர்களின்; து_ண்டுதல்களுக்கு இடமளிக்காது நோயாளர்களின் விடயத்தில் அக்கறை காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
இதுக்குத்தான் சொல்றது ஒரு போட்டி பரீட்சை மூலம் அரச சேவையில் தொழில் எடுக்க வேண்டும்.
ReplyDeleteசும்மா ரோட்டில் நின்றவன் MP ஆன மாதிரி தகுதி அற்றோருக்கும், பொருப்பில்லாதவர்கலுக்கும் தொழில் கொடுத்தால் அப்படிதான்.
என்னமோ சொல்லுவாங்களே .....
இதுட வேலையை இது செய்யணும்
அதுட வேலையை அது செய்யணும் என்று இதைத்தானோ?