Header Ads



நிந்தவூர் வளாகத்தில் தொழில் பயிற்சிநெறிக்கு தெரிவானோருக்கு அறிவூட்டல்


நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்தில் தொழிற்பயிற்சிகளை தொடர்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளை அறிவூட்டும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. 

அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர்  இங்கு உரையாற்றுகையில்,

'பாடசாலைக் கல்வி கட்டமைப்பின் மூலம் எதிர்பார்த்த பலனைப்பெறாத நிலையில் நீங்கள் தொழிற்பயிற்சி கற்கைகளை தெரிவுசெய்துள்ளீர்கள். தொழில்சார் மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை நோக்கியே இன்று உலகம் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் உங்கள் தெரிவு காலத்திற்கு சாலப்பொருத்தமானதும், தூரநோக்குக் கொண்டதும் என நான் எண்ணுகின்றேன். 

அரசாங்கத்தினால் தரப்பட்டுள்ள இந்த வளங்கள் மற்றும் வசதிகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களை விஸ்தரிக்க முழுமுதற் காரணகர்த்தாவாக இருந்த மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் கனவும் அதுவாகத்தான் இருந்தது' என்றார். 

வளாகத்தினால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, தொலைக்காட்சி – வானொலி மற்றும் அதனோடிணைந்த உபகரணங்கள் திருத்துதல், குளிருட்டி மற்றும் வாயுச்சீராக்கி திருத்துதல், மின்னிணைப்பாளர், தையல் ஆகிய பயிற்சிகளை இவ்வருடத்தில் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ள மாணவ பயிலுனர்கள் இதில் கலந்து கொண்டனர். 

தேசிய தொழில்சார் தகைமை (என்.வி.கியு) கட்டமைப்பு, தொழிற்பயிற்சி வளாகத்தின் விதிமுறைகள், தொழிற்சந்தையில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பில் இதன்போது பயிலுனர்களுக்கு விளக்கமளிக்கப்பட்;டது. தொழில்வழிகாட்டல் உத்தியோகத்தர், போதனாசிரியர்களினாலும்; விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன. 





No comments

Powered by Blogger.