Header Ads



புதிய அமைச்சரவை மாற்றம் - முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி


அமைச்சரவை மாற்றத்தின் பின் அதிருப்தி அடைந்த திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்  ஆதரவாளர்கள் தொடர்பாக கிண்ணியா பிரதேச சபையின் பிரதி தவிசாளர் முஆ.நிஹார் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவரது கருத்துக்கள் பின்வருமாறு, 

   நேற்று  28-01-2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்   ஆதரவாளர்கள் மீண்டுமமொருமுறை ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். கடந்த கால அரசியல் வரலாற்றை ஆராய்ந்து பாரக்கும் பொழுது திருகோணமலை மாவட்டத்தினை ஏனைய மாவடடங்களுடன் ஓப்பிடும் பொழுது இம் மாவட்டம்முஸ்லிம் காங்கிரஸ் இனால் புறக்கனிக்கப்படடே வருகிறது.

இதற்கு உதாரணமாக கடந்த மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியும் வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களில் ஒன்றையேனும் எமது மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை.  முஸ்லிம் காங்கிரஸ்  இன் வளர்ச்சிக்கு ஏற்படுகின்ற பின் விளைவுகளை தலைமைத்துவத்திற்கு பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை எந்தப் பயனுமில்லை. இறுதியில் கிடைத்த பதில் திருகோணமலை மாவட்டத்திற்கு 'நல்லது செய்வேன' என்ற உறுதிமொழிதான் கிடைத்தது.

ஆனால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது முஸ்லிம் காங்கிரஸ்   தலைமையால் வழங்கப்பட்ட உறுதிமொழியான 'நல்லது செய்வேன்' என்ற வார்த்தை நிறைவேறுமென எதிர்பார்த்திருந்த கட்சி ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச ரீதியான உச்சபீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்களிடம் கலந்தாலோசனை செய்தபோது அனைவரும் கட்சியின் தலைமைத்துவத்தில் அதிர்ப்தி அடைந்து காணப்படுகின்றனர். இதற்கு பிரதான காரணம் இனிமேலும் கட்சியின் வளர்ச்சிக்காக அல்லது திருகோணமலை மவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் இன் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும் எனும் அச்சமேயாகும்.

எனவே, இதனை கவனத்தில் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஒரு ஒழுங்கான தீர்வினை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சிக்கு பல காரணங்கள் தடையாக அமையும் என்பதை தலைமைத்துவம் உணர்ந்து செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.  



3 comments:

  1. நல்லது செய்வேன் என்றால்: ஆண்டு ஆவணியில் ஒருமுறை தேர்தல் காலத்தில் திருகோண மலை மாவட்டத்துக்கு வந்து ஊர்வலம் போனாலே போதும். இதைவிட நல்லது எந்த தலைவனாலும் உங்களுக்கோ / எந்த ஊர் மக்களுக்கோ ஹகீமால் செய்ய முடியாது.

    தேசிய காங்கிரசாலும் திருகோணமலை புறக்கணிப்பு, காங்கிரசாலும் திருகோணமலை புறக்கணிப்பு. இருதுரும்புகளும் சேர்ந்து ஏன் புதிய இணக்கப்பாட்டுக்கு வர முடியாது? அதாவது புதிய உதயம்..... இரண்டு பெரும் நன்கு யோசித்துப்பார்கலாமே.......

    ReplyDelete
  2. Why not creat one more party for Trinco also ???

    ReplyDelete
  3. Hi Hi HI, THIRUKONAMALAI PURAKKANIPPALLA, KINNIYA PURAKKANIPPU, MUTHURILUM KINNIYAVITKU VELIYILUMILLA ROMBA AATHARAVAALARHAL ENKALUKKU IRUKKANKA,......

    ReplyDelete

Powered by Blogger.