அக்கரைப்பற்று பிரதேசம் முழுவதும் டெங்கு நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாரை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட 2ம் பிரிவுப் பகுதியில் 5 வயது பெண் பிள்ளை ஒருவரும்;, 2 ½ வயது பெண் பிள்ளை ஒருவரும் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளான இருவரும் தற்போது அம்பாரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்;, இவர்களுக்கு உயிராபத்து எவும் இல்லை என அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.சித்தீக் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசம் முழுவதும் தற்போது டெங்கு நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பள்ளி வாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமும், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு நடைபெற்றுவருகிறது. இருந்தபோதிலும் பாதை ஓரங்களிலும், வீடுகளிலும் டெங்கு நுளம்பு பரவுவதற்குரிய குப்பைகள், வெற்றுப்பாத்திரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. வடிகான்களில் நீர் தேங்கி நிற்கிறது.
தற்போது மழை பெய்து வருவதானால் மிகக் கூடுதலாக டெங்கு பரவக்கூடிய கூழ்நிலை உள்ளதனாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகக்கூடுதலாக தேவைப்படுவதாகவும் அவரவர் வீடுகளிலும், பாதைகளிலும் கிடக்கும் குப்பைகளை, வெற்றுப்பாத்திரங்களை அவரவர் அகற்றுவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதனை தடுக்கமுடியும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
Post a Comment