Header Ads



முஸ்லிம்களை நாங்கள் நேசிக்கிறோம் - கண்ணீர் விட்டழுத சிங்கள சகோதரிகள் (படங்கள்)



(இக்பால் அலி)

குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தாரின் ஏற்பாட்டில் பஹகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் அனுசரணையுடன் குருநாகல் இந்துகல்கொட கந்த பிரதேசத்தில் சமீபத்தில்  நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இரவு வியாழக்கிழமை இந்துல்கொட சத்தாமோதய விஹாரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் கருத்துத் தெரிவிக்கையில்,,

ஹலால் சான்றிதழ் அத்தாட்சி தொடர்பான சர்ச்சை முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது எழுந்துள்ளன. இது சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரம். இதன் பணம் வெளிநாட்டிலுள்ள அல் கைதா அமைப்புக்கு வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இது  பெரியதொரு அபாண்டமான குற்றச் சாட்டு என்று குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்கள்  தொன்று தொட்டு மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த யுத்த காலத்திலும் கூட எந்தவிதமான பிணக்குகளுமின்றி இம்மூவின மக்களும் பரஸ்பரம் புரிந்துணர்வு நல்லெண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் யாவரும் இந்த நாட்டின் தாய் மண்ணை நேசிப்பவர்கள். இலங்கை முஸ்லிம்கள் வர்த்தக ரீதியாக வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சில ஆண்கள் இங்குள்ள சிங்களத் தாய்மார்களை திருமணம் முடித்ததால் உருவானர்கள். இதற்கான வரலாறுகள் சான்றுகள் உள்ளன. இந்த பூமி எங்களுடையது. நீங்கள் தாக்கினால் நாங்கள் பாக்கிஸ்தானுக்கோ. பங்களாதேசத்திற்கோ செல்ல முடியாது. எங்கள் உயிர் இந்த மண்ணிலேதான் போக வேண்டும். இவ்வாறான அனர்த்தங்கள் நிகழும் போது நாங்கள் இனவேறுபாடு பார்ப்பத்தில்லை. சுனாமிக்காக நாங்கள் எல்லோரும் சேர்ந்து மனிதாபிமான உதவிகளைச் செய்தோம். அதே போன்று இந்தப் பிரதேசத்திற்கு எங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தெலியாகொன்ன எஹிபஸ்ஸிகே பௌத்த விஹாரையின் கித்துல்பே அரியதம்ம ஹிமி உரையாற்றுகையில்

முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மிக அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றோம். முஸ்லிம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் விசமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து ஒரு பிளவை உண்டு பண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இது நாட்டின் நலனுக்கும் பௌத்த சமயத்தின் நற்பெயருக்கம் பொருத்தமானதல்ல தெலியாகொன்ன எஹிபஸ்ஸிகே பௌத்த விஹாரையின் கித்துல்பே அரியதம்ம ஹிமி தெரிவித்தார்.

பௌத்த சமயமும் இந்து சமயம் இஸ்லாமிய மார்க்கம் எல்லாம்  நல்ல விடயங்களையே போதிக்கின்றன. இவ்வறான நல்ல காரியங்களை நாங்கள் ஒன்று செர்ந்து செய்யும் போது எங்களுடைக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படும்.  இரு தரப்பினரிடையே நிலவும் தற்பான அபிப்பிராயங்கள். சந்தேகங்கள் தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மண் சரிவினால் வீடு  முற்றாக சேதமுற்ற குடுபத்தைச் சேர்ந்த இரு தாய்மார்கள் கருத்துத் தெரிவிக்கையில்,,

இது வரை அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. என் கணவர் பொலிஸில் கடமை செய்கின்றார். அரசாங்கத்தில் பணி புரிவதன் காரணமாக எங்களுக்கு எந்த உதவியும் கிட்டுவதில்லை. முஸ்லிம் மக்களை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம். கண்ணீர் மல்க உரை நிகழ்த்தினார்.

இன்னுமொரு பெண்மணி உரையாற்றுகையில்,

என்னுடைய கணவர் இராணுவத்தில் சேவையாற்றுகிறார். என் வீடு முற்றாக விழுந்து விட்டது. காலில் செருப்புக் கூட எடுப்பதற்கு இல்லை. குருநாகல் நகரில்  கடை ஒன்றுக்கு செருப்பு  வாங்கச் சென்றேன். அந்தக் கடை முஸ்லிம் வியாபாரியுடைய கடை. என் நிலையை அந்தக் கடை வியாபாரி வினவினார். என்னுடைய நிலையை விளக்கினேன். அந்தச் செருப்புக்கு அவர் பணம் வேண்டாம் என மறுத்தார். நான் அதற்கு இல்லை இதற்கான பணத்தை எடுங்கள் என வலியுறுத்தினேன். ஒரு பத்து ரூபா மட்டும் வாங்கினார். இந்த அந்நிகழ்வு என்னால் மறக்க முடியாது உள்ளது. அதேபோல் நீங்கள் இன்று எங்களை நாடி வந்து இவ்வுதவியை செய்யும் போது எங்களின் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறதே தவிர இதற்கு நன்றி சொல்ல வாhத்தை இல்லை என அவர் அழுது அழுது கூறினார். 

இதில் இந்துல் கொட கந்த கொப்பேகல ஆனந்த ஹிமி உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




7 comments:

  1. ewwarana nalla nihalwugal warawetkaththakkawaihal

    ReplyDelete
  2. காலத்தின் தேவை கருதி இந்த விடயத்தை அந்த சிங்கள சகோதரிகள் மூலமாகவோ அல்லது அந்த பவுத்த தேரர் மூலமாகவோ சிங்கள ஊடகம் ஒன்றில் பதிந்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  3. Publish it in sinhala and english.

    ReplyDelete
  4. Muslim sinhalese not close by money by the attitude of the life style and the muslims 5 step of islam that 1. kalima 2. Parayer 3. Sakath ( helping others) 4. Nounbu (Fasting) 5. Haj.

    Those are general in muslim as friends says for the poilitical reason to get votes few parties Like ( Sihele urumeya,JVP, /ect,.. ) just making publicity and troules in between us.

    If qur aan says Or if the Buddishm says some thing will happen in the world you can think about it but we have to understand that the people who are saying those points for what & why, they are looking for what.

    I hope my friends & brothers will understand, live peacefully.

    ReplyDelete
  5. A.R.M.Akram கூறியது போன்று ஆங்கில,சிங்கள் மீடியாக்களில் பதிவேற்றுவது காலத்தின் கட்டாயம்,மீடியாவுடன் சம்பந்தப்படடவர்களும்,வாயப்புள்ளவர்களும் முயற்சிப்பது, பர்ழு கிபாயவாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. It's very sad to hear the comments of some readers for their lacking knowledge of current affairs, In my point of view JVP is not a party based on racism or Communalism now. Please be mindful of grammatical errors when you are publishing a comments to maintain a media ethic.

    ReplyDelete
  7. meadivil pottu perithu padutha vendam allh pothumanavan inshah allah allah avarhalukku hithayath valankuvan

    ReplyDelete

Powered by Blogger.