Header Ads



மூதூரில் ஓரு மீலாத் நபி விழா..! எனது கதையிது..!!



(மூதூர் முறாசில்)

'சேர்... இம்முறை மூதூரில் நடக்கப் போகும்  மீலாத் நபி விழா அபிவிருத்திக் குழுவில் உங்களது பெயரையும் சேர்த்துள்ளோம். உங்களுக்கு விருப்பமா?' இவ்வாறு ஓரு சமய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஓருவர் ஓரிரு மாதங்களுக்கு முன்பு என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவினார்.

அகிலத்திற்கு அருட்கொடையாக வந்துதித்த நபிகளாரின் ஸுன்னாவை அவரவர் வாழ்க்கை  வழிமுறையாக்கிக் கொள்வதனை விட்டு விட்டு அவர்களின் ஜனனத்தை மட்டும் 'வெறும்'  விழாவாகக் கொண்டாடுவதில்      எனக்கு உடன்பாடு இல்லாத போதும்   'அபிவிருத்தி' என்பதிலும் அதில் ஈடுபடுவதிலும் எனக்கு ஆர்வம் இருந்ததினால்  என்னிடம் வினவியவருக்கு விருப்பத்;தைச் சொன்னேன்.

இது நடந்து ஓரிரு வாரங்களின் பின்பு மக்கள் பிரதிநிதி ஓருவர் கொழும்பிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீலாத் நபி விழா மூதூரில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறிய அவர் விழாவை  கிண்ணியாவில் நடத்த வேண்டும் என்று 'சீயெம்' அடம்பிடிப்பதாக தெரிவித்தார். 

அவர் அவ்வாறு கூறியதும் 'அதிலும் ஒரு நலவிருக்கும ;' என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

வேறு சிலர் என்னோடு தொடர்பு கொண்டு மூதூரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட   மீலாத் நபி விழாவை கிண்ணியாவில் நடத்துவதானது மூதூருக்குச் செய்யும் துரோகம் என்று கூறியதுடன் 'சீயெம்'மை கடுமையாகவும் சாடினர். இது சம்பந்தமான செய்தியை ஊடகங்களுக்கு வழங்குமாறும் கூறினர்.அது அவர்களது அப்போதைய உணர்வலை!

இருந்த போதும்  மூதூரில் திட்டமிட்ட விழாவை மூதூரில் நடத்த வேண்டும்; என்பது மூதூர் மக்களது    நியாயமான  கோரிக்கைதான்  என்பதை எவரும் இலகுவில் ஏற்றுக் கொள்ளவே செய்வர்.  

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு மூதூரில் மீலாத் நபி விழாவை நடாத்த வேண்டும் அதன் மூலம் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் அப்போதிருந்த இஸ்லாமிய கலாசார பணியகத்தின் ஒரு கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்டது எனக்கு ஞாபகத்தில் உள்ளது. 

என்ஞாபகத்தின் படி மூதூர் பிரதேசத்தில்  மீலாத் நபி விழாவை நடாத்த வேண்டும் என்பது இம்மக்களது நீண்டகாலக் கோரிக்கையாகும்.

இத்தகைய நிலைமையில் மூதூரில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்ட விழாவை கிண்ணியாவில்  நடத்துவதாக  இருந்தால்  மூதூரைவிட வலுவான நியாயங்கள் கிண்ணியாவில் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு வலுவான நியாயங்கள் இருப்பதனை எவர் மறுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ளவே செய்வேண். 

இவ்வாறு நான் கூறும் போது 2000ஆம் ஆண்டிற்குப் பிந்திய காலத்தில் தோப்பூர் பிரதேசத்திற்கு தனியான ஒரு பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 'தோப்பூருக்கு ஒரு பிரதேச செயலகம் வேண்டும ;' என்று கூறியதும் அதனை பின்பு முதன் முதலாக பத்திரிகையில் எழுதியதும் அதனால் 'குறும்பார்வை'யுள்ளோர் என்னைத்திட்டியதும் ஞாபகத்திற்கு வருகின்றது.

நிலை குலைந்த நியாயங்கள் :

கிண்ணியாவில் இம்முறை மீலாத் நபி விழாவை நடாத்துவதன் மூலம் மொத்த முஸ்லிம்களது கௌரவத்தை நோக்கி கை நீட்டியுள்ள சில விடயங்களிலாவது தேவையானதை  செய்ய வேண்டிய அவசியம் மேலோங்கியிருக்கின்றது. இத்தகைய அவசியத்தை நிவர்த்திக்கும் நோக்கில்   மீலாத் நபி விழாவை கிண்ணியாவில்  நடத்துவதென்பது  மூதூரைவிட  முக்கியமானதேயாகும். அது நியாயமானதுமாகும்!

மீலாத் நபி விழாவை நடாத்துகின்றபோது கிண்ணியாவில் அதன் ஞாபகமாக வீதி வரவேற்புத்தூணையோ, வேறு இஸ்லாமிய கலாசார சின்னங்களையோ நிறுவுவதற்கு வாய்ப்பிருந்தது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி   கிண்ணியாவில் முடிவுறுத்தப்படாதிருக்கும் வரவேற்புத் தூணின் நிர்மாணப் பணியையாவது   இஸ்லாமிய கலாசராத்தைத் தழுவியதாக செய்து முடிப்பது ஒரு முக்கியமான காரியமாக காணப்பட்டது.

அதேபோல்  அண்மைக்காலமாக பலரது கவனத்தை ஈர்த்து வரும் கிண்ணியாவை அடுத்தமைந்திருக்கும்  கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரமும் கவனத்திற்கெடுக்கப்பட்டு, அப்பள்ளிவாசலை மீட்டெடுப்பதற்கு கிண்ணியாவில்  மீலாத் நபி விழாவை நடத்துவதானது ஒரு கருவியாக அமையும் என்பதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு விடயமாகும்.
அத்தோடு உப்பாறு முதலான பகுதிகளில் வெறுமையாகக் கிடக்கும் பள்ளிவாசலை தொழுகையினால் அழகுபடுத்தும் வகையில் அப்பகுதியில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கு கிண்ணியாவில்  மீலாத் நபி விழாவை நடாத்துவது ஒரு வழியாக பார்க்கப்பட்டது.

மேலும், முஸ்லிம்களது இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் வரலாற்றை  திரிபு படுத்தும் செயற்பாட்டை குறைந்தது சமநிலைப்படுத்தும் வகையிலாவது முஸ்லிம்களை அதிகமாக் கொண்ட முதன்மையான பிரதேசமான கிண்ணியாவினதும் திருகோணமலை மாவட்டத்தினதும் வரலாற்றை மும்மொழிகளில் திரட்டி ஆவணப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள மீலாத் நபி விழாவை பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருந்தது.

இன்றைய காலத்தில் முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பை காரணங் காட்டி முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பௌத்த கடும் போக்கு வாதிகளுக்கு விழாவூடாக 'நல்ல' தோர் செய்தியையும் பரப்புரையையும் கூட செய்வதற்கு முடியுமாய் இருந்தது.

இத்தகைய எத்தனையோ விடயங்கள்; கிண்ணியாவில்  மீலாத் நபி விழாவை முன்னுரிமைப்படுத்துவதற்கான காரணங்களாக இருந்த போதும் இக்காரணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு 'சூனியமான' ஒரு காரணத்திற்காக மட்டும் மீலாத் விழா கொண்டாடப் பட்டிருப்பதானது கிண்ணியா மக்களுக்கு செய்யப்பட்டுள்ள ஒரு துரோகமாகவே விளங்குகிறது.

நபிகளாரைப்  புறக்கணித்த நபி விழா :

நபிகளாரை மேன்மைப்படுத்தி நடாத்தப்பட்ட கிண்ணியா    மீலாத் நபி விழாவில் பேசப்படவேண்டிய ஆராயப்படவேண்டிய நபிகளாருக்குப் பதிலாக வேறொருவரை புகழ்ந்து பேசப்பட்டதனையே அதிகதாக அவதானிக்க முடிந்தது.

நபிகளார் பிறந்த மாதத்திலேயே நபிகளாரையும் நபிகளார் போதித்த சன்மார்க்கத்தையும் கேவலப்படுத்தும் பௌத்த கடும்போக்கு வாதிகளுக்கெதிராக எதுவும் செய்யாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தலையானவரை வணங்கும் - சந்தோஷப்படுத்தும் சிலரது பேச்சி மட்டும் விழாவில் இடம்பெற்றதானது நகைப்புக்குரியதாகவே இருந்தது.

நபிகளாரின் விழாவில்   'வெறும்'  உலமா ஒருவரைத் தவிர்ந்த வேறு உலமாக்கள் எவரும் கலந்து கொள்ளாதது இது நபிகளாரின் பெயரில் வேறு ஒருவருக்கு நடாத்தப்பட்ட விழா என்பதையே குறித்துக் காட்டுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான  உலமாக்கள் இருந்தபோதும் அவர்களது ஆலோசனைகளோ கருத்துக்களோ கேட்கப்படாது,  யாரோ கூறிய ஆலோசனைக்கேற்ப நடாத்தப்பட்ட இவ்விழாவானது நான் மேலே கூறிய கருத்தையே சான்றுப்படுத்தி நிற்கிறது. 

மனசாட்சி பேசுமா?

மூதூரில் நடத்துவதற்கு திட்டமிட்ட மீலாத் நபி விழாவை கிண்ணியாவில் நடத்துவதற்கு 'சீயெம்' எடுத்த முயற்சியை  கிண்ணியா மக்களதும் ஏனைய ஊர் மக்களதும் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் ஏன் எடுக்கவில்லை என்னும் பலமான வினாவொன்று சமூக தளத்திலிருந்து வருகின்றது.
இவ்வினாவை நோக்கி 'சீயெம்' அவர்களின் மனசாட்சி பேசுமா?














  




8 comments:

  1. வெங்காயத்தை உரித்தால் வெங்காயத்தின் கோதுகள்தான் வரும் அதனை தங்க தட்டில் வைத்து உரித்தாலும் பலா பழம் வரும் என்று எதிர்பார்பது ரொம்ப பெரிய தவறு

    ReplyDelete
  2. மேடையில் பலதரப்பட்ட மத குருமார்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனாலும் இஸ்லாமிய மார்க்க மத குருக்களை கானோமே...!

    ReplyDelete
  3. முறாசில், உங்கள் அப்பாவித்தனத்தை நினைத்தால் பாவமாக உள்ளது.

    ReplyDelete
  4. முறாசிலில் கண்ட அப்பாவித்தனம் என்னவோ? விளங்கவில்லை சற்று விளக்கமாக கூறுங்கள்.

    ReplyDelete
  5. இது அரசியல் மற்றும் பிரதேசவாதம் சம்பந்தப்பட்ட மனக்குமுறல்.அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மீலாத் விழா எடுப்பது பிழை என்றாலும் அபிவிருத்திக்காக நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பது மூடத்தனமாகும். அபிவிருத்திக்காக வட்டி நிறுவனம் நடத்தலாமோ, அபிவிருத்திக்காக மாற்று மத சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்தலாமோ, தங்களின் பல்லை குத்தி மற்றவர்களுக்கு ஏன் துர்வாடை கொடுக்க முயல்கிறீர்கள். நபிகளாரின் சுன்னஹ்வை பின் பற்றாமல் ஜனன தினத்தை மட்டும் கொண்டாடினால் தவறுதான். ஆனால் மீளாத் விழா எடுப்பவர்கள் எல்லாம் சுன்னஹ்வை பின்பற்றாதவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? பள்ளிவாயலில் செருப்பு களவு போகுது என்பதற்காக பள்ளிக்குப்போகாமல் விடுவதா? விமானங்களில் மது பரிமாறப்படுகிறது என்பதால் விமானத்தில் பயனிக்காமலா இருக்கிறார்கள்?

    ReplyDelete
  6. Intha Vila Kinniyavil Sariyana Muraiyil Vilamparap Paduththap Padavillai, 100,000 Sanaththohaiyaik KOnda Kinniya Vill 1000 per Kooda Ithi Kalanthu KollaVillai, Ithu Thanippatta Oru ArasiyL Nihalcchi Poantru Irunththathu

    ReplyDelete
  7. சமூக நலன் கருதும் தலைமைகள் முஸ்லிம்களிடத்தில் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்

    ReplyDelete
  8. Maharoof,

    நண்பர் முறாசிலுக்கே விளங்கிவிட்ட விடயத்தை என் வாயைக் கிளறுவதற்குத்தான் கேட்கின்றீர்கள் என்று நன்றாகவே தெரிந்தாலும் பதில் கூறுவதற்கு எனக்கும் பிடித்திருப்பதால் உங்களுக்கு இந்தப் பதிலை எழுதுகின்றேன்:

    தென்னிந்திய நடிகைகளுக்கும் நமது அரசியல்வாதிகளுக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை உள்ளது. அதாவது மவுசு (மார்கட்) உள்ளபோதே சம்பாதித்துக்கொள்ளுவது.

    இதிலே நமது அரசியல்வாதிகள் இன்னும் விசேஷம்! தானும் தனது வாரிசுகளும் வாழ்க்கை முழுவதும் பசையும் செல்வாக்குமாக வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்வார்கள்.

    யாரோடும் சேருவார்கள்; யாருக்கும் காலைவாருவார்கள். எதிரிகளையும் புகழ்வார்கள்; நண்பர்களையும் கழுத்தறுப்பார்கள்.

    இதையெல்லாம் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்தும் சமூகத்திற்காக ஏதாவது உருப்படியாகச் செய்வார்கள் என்ற நப்பாசையுடன் நம்பிக்கொண்டு அவர்களுக்குப் பின்னால் இழுபடும் சில அப்பாவி மனிதர்களும் உள்ளனர்.

    அவர்களிலே ஒருவராகத்தான் -இப்போதைக்கு எனது பார்வையிலே- முறாசிலும் தோற்றமளிக்கின்றார். அதைத்தான் கூறினேன்.

    உ-ம்: ரிசானா விடயத்தில் அவரது வாக்கு மூலம். மீலாதுன் நபிவிழா விடயம் இரண்டாவது ஒப்பாரி. எனது அனுமானம் சரியாக இருந்தால் எதிர்காலத்தில் இன்னும் சில ஒப்பாரிகளும் இருக்குமென்று நம்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.