Header Ads



அதாஉல்லாவும், உதுமாலெவ்வையும் அநியாயம் செய்கிறார்கள் - சீறிப்பாய்கிறார் தவம்


(எஸ்.அன்சப் இலாஹி)

கடந்த 22ம் திகதி கிழக்கு மகாணசபை அமர்வில் இடம்பெற்ற விடயம்; தொடர்பாக ஜனவரி 25ம் திகதி அமைச்சர் உதுமாலெவ்வை www.jaffnamuslim.com  செய்தி இணையத்தளத்தின் ஊடாக அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினராகிய ஏ.௭ல்.தவம் ஆகிய நான் இதுபற்றி என்னுடைய விளக்கத்தினை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

பொத்துவில் பிரதேசத்திற்கு இடமாற்றிய எல்லா ஆசிரியர்களும் ஏற்கனவே கடமைகளை பொறுப்பேற்றதாக அமைச்சர் உதுமாலெவ்வை மேற்படி அறிக்கையில் கூறியுள்ளார். நான் சபைக்கு பிழையான தகவல்களை கொடுத்து சபையை பிழையாக வழிநடத்திவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அமைச்சர் அதாஉல்லா அவர்களுடைய உறவுமுறைக்காரரான சாஹிர் மற்றும் நியாஸ் மௌலவி, இஸ்மாயில் என்பவர்கள்; அக்கரைப்பற்று அஷ் ஷிபாயா வித்தியாலயத்தில் கடந்த 22ம் திகதிவரை கையொப்பம் இட்டிருக்கின்றார்கள். இவர்கள் மூன்று பேரும் பொத்துவில் பிரதேசத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டவர்கள். குறிப்பாக, கடந்த 15ம் திகதிக்கு முன்னர் அவர்களுடைய கடமையை பொறுப்பேற்றிருக்கவேண்டும். ஆனால் 22ம் திகதி வரைக்கும் அவர்கள் அவ்வாறு பொறுப்பேற்கவில்லை நான் சபையிலே அந்தப்பிரச்சினையை கிளப்பிய பின்புதான் அவர்கள் பொத்துவிலுக்கு போய் தங்களுடைய கடமைகளை பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் உதுமாலெவ்வை இவ் அறிக்கையில்; ஏற்கனவே அவர்கள் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டது போன்று ஒரு மாயை காட்ட முயல்கிறார். நாங்கள் அந்தப் பிரச்சினையை கிழப்பியவுடன்தான் அவர்கள் கடமையை பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பதை மூடிமறைத்து, மீண்டும் சபையில் கூறியதை போன்று பொய்க்குமேல் பொய் சொல்லி செய்கின்ற, மிக மோசமான அரசியலை அரங்கேற்றியிருக்கின்றார். இதுதான் அமைச்சரும், அமைச்சருடைய தலைவராக இருக்கின்ற அதாஉல்லா அவர்களுடைய வழியுமாகும். 

எங்களைப் பொறுத்தவரைக்கும், பொத்துவில் பிரதேசத்திற்குரிய ஆசிரியர்கள் வழங்கப்பட வேண்டும். அது நியாயமான முறையில் பாரபட்சமின்றி இங்கு இருக்கின்றவர்கள், அங்கு அனுப்பப்பட்டு கடமை செய்ய வேண்டும். அமைச்சர் அதாஉல்லா அவர்களும் உதுமாலெவ்வை அவர்களும் இங்கு பாடசாலைகளிலே அவர்களுக்கு வேண்டிய ஆசிரியர் மாத்திரம்தான் இருக்கவேண்டும் என்பதற்காக அந்த இடமாற்றங்களிலே அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பிழையான அளவு கோள்களின் அடிப்படையிலேயே, இட மாற்றங்களை செய்திருக்கின்றார்கள்.  ஆசிரியர் சித்தீக் அக்கரைப்பற்று  முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் கடந்த 6 வருடங்களாக தன்னுடைய கடமையினை செய்து கொண்டிருக்கிறார். பல அக்கரைப்பற்று பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றும் ஆசிரியர்கள் இருக்கின்ற போதும் சேவையில் குறைந்தவராக இருக்கின்ற சித்தீக், குறிப்பாக முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர் என்கின்ற காரணத்தால், அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக வழமையாக இருக்கின்ற ஆகக் கூடிய காலம் ஒரே இடத்தில் சேவையில் இருப்பவர்களை இடமாற்றம் செய்வது என்ற ஒரு நடைமுறைக்கு மாறாக் இடமாற்றப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே, பல கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றியதால் தன்னை விடுவிக்குமாறு சித்தீக் ஆசிரியர் வேண்டியதற்கிணங்க அவரை விடுவித்து, கடந்த வருடம் மாகாணப்பணிப்பாளராக இருந்த திரு.போல் அவர்கள் சிபாரிசு செய்து, திருக்கோவில் வலயத்திற்கு வலயம் மாறிச் சென்றார். அவ்வாறு வலயம் மாறிச் சென்றதற்குப் பிறகு அவரை தேடிப்பிடித்து இழுத்துவந்து மீண்டும் அவருக்கு 4 கடிதங்கள் மேலதிகமாகக்கொடுத்து மொத்தமாக 29 நாட்களுக்குள் 5 இடமாற்றக்கடிதங்கள் கொடுத்து இழுத்தடிப்புச் செய்திருக்கின்றார்கள். ஒரு ஆசிரியராக சமுகத்திற்காக பணியாற்றுகின்ற ஓர் ஆசிரியரை இவ்வாறு நடாத்துவது என்பது மிகுந்த மனவேதனையை தருகின்ற விடயமாகும். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர் என்ற காரணத்தினால் 6 வருடங்கள் பணியாற்றியிருந்தும் இடமாற்றம் வழங்கப்பட்ட விடயம், அதே போன்று வேறு வலயம் மாறிச் சென்ற பின்பும் அவரை தேடிப்பிடித்து பழிவாங்கப்பட்ட விடயம் என்பது அரசியல் அன்றி வேறு ஒன்றுமில்லை. இப்படி அநியாயங்களை எல்லாம் புரிந்துவிட்டு, பொத்துவிலின் கல்வியை பற்றி உதுமாலெவ்வை நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார். குடந்த வருடம் பொத்துவிலுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்களில் 3 அல்லது 4 மாத காலத்தினுள் எத்தனை ஆசிரியர்களை, அதிபர்களின் சம்மதம் இல்லாமல், மீண்டும் அக்கரைப்பற்றிற்கும், அட்டாளைச்சேனைக்கும் திருப்பிக் கொண்டுவந்தார்கள் என்கின்ற பட்டியல் எம்மிடம் உண்டு. அதே போன்று, தகுதியான அதிபர்கள் எத்தனையோ பேர் இருக்கின்ற போது, தமது அடிவருடிகளை சில பாடசாலைகளின் அதிபர்களாக வைத்துக்கொண்டு பொத்துவிலின் கல்வியை சீரழிப்பதை மக்கள் அறிவார்கள். இந்த அநியாயங்களை பொத்துவிலின் கல்விக்கு செய்துவிட்டு உதுமாலெவ்வை நீலிக்கண்ணீர் வடிப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.

தற்போதும் கூட, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த வஹாப் என்பவர் இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து, அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திற்கு உடற்கல்வி பிரிவுக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளராக நியமனம் பெற்று வந்தபோது, இங்கு பதில் கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற ஆசிரிய ஆலோசகர், அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர் என்பதனால், வஹாப் அவர்களை கையொப்பமிடவைக்காமல் தொலைநகல் மூலம் திருக்கோவில் வலயத்திற்கு இடமாற்றியமையும் எமக்குத் தெரியாமல் இல்லை.

ஆகவே, அமைச்சர் உதுமாலெவ்வை அவர்கள் பொய்களை கூறாமல் நீதியாக நேர்மையாக சிந்திப்பதற்கு தலைப்படவேண்டும் என நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இவ்விடயத்தில் நான் இன்னுமொரு விடயத்தையும் கூறவேண்டும். அக்கரைப்பற்றிலும், அட்டாளைச்சேனையிலும் பட்டதாரிப்பயிலுனர்களாக பிரதேச செயலகங்களிலே பணியாற்றிவந்த பட்டதாரிகளில், தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று கருதிய ஆண்கள் எல்லோரையும் இரண்டு பிரதேச செயலகங்களிலும் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். தேசிய காங்கிரஸ் அல்லாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள் என்கின்ற காரணத்திற்காக பெண்பிள்ளைகளை வெளி பிரதேசங்களுக்கும், மாவட்டத்தின் பல கஷ்டப்பிரதேச பிரதேசங்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களை வெளியில் அனுப்பி, ஆண்களை உள்ளே வைத்திருக்கும் அநியாயத்தை அதாஉல்லாவும் அதே போன்று உதுமாலெவ்வையும் செய்துவிட்டு ஆண்டவன் மீது எல்லாவற்றையுமே சாட்டி, நாங்கள் உளத்தூய்மையானவர்கள் என்று கூறுகின்ற அரசியலை நிறுத்திக்கொள்ளவேண்டும். 

6 comments:

  1. ஆட்டுக்குட்டி பிழை செய்தாலும்,
    ஆளும்கட்சி பிழை செய்தாலும்,

    தனியாய் நின்று தட்டிக்கேட்கும்

    தைரியம் இவரைப்போல் யாருக்கு வரும்?

    ReplyDelete
  2. சகோதரர் தவம் அவர்களே. இன்று அக்கரைப்பற்றின் ஒழுக்கத்தை நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது. தேர்தல் வந்தால் அக்கரைப்பற்று மீதான கவனம் தேர்தல் கண்காணிப்பு பணியாளர்களால் தீவிரமாகும் நிலைமை இருக்கிறது.ஒரு ஊரில் பிறந்து வளர்ந்து அண்டை வீட்டாராக இருக்கும் நாம் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கும் அளவுக்கு நாகரிகமற்றவர்களாக மாறிவிட்டோம்.நீங்களும் இததற்கு விதி விலக்கல்ல.அதாவுல்லவுடன் இருக்கும் போது நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது மறக்கமுடியாதது. அக்கரைப்பற்று மக்கள் என்று சிந்திப்பார்களோ?அக்கரைப்பற்றில் புதிய அரசியல் கலாசாரம் தேவை

    ReplyDelete
  3. Dear Editor,

    Please,do not let our Muslim politicians to use this media for their political purpose....This is not a big matter than the problems we face today. Our future became ???? but these idiots trying to fight themselves using a transfer as a matter fight....

    Humble request to Thawam, Athaullah and to Uthumalebbe...Please try to look into anti-islamic activities in sri lanka and take necessary steps to safe guard our community instead of fighting on transfer matter...



    ReplyDelete
  4. நீங்கள் மூவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இதில் யார் நல்ல மட்டை என்ற போட்டியோ ?

    2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஓராயிரம் வாக்குகளுக்காக தவத்தை தன்னோடு சேர்த்த அதாவுல்லாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    தவத்திற்கு தவிசாளராக இருந்து கிழிக்க முடியாததை மாகாண சபை உறுப்பினராகி கிழிக்கிறாரோ?

    ஏன் அய்யா உங்களுக்கு கல்வியில் இந்த கொலை வெறி ?

    இந்த குப்பை அரசியல் வாதிகளின் கையாலாகாத தனத்தை இடமாற்றத்திலும் காட்டிவிட்டார்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Dear Editor,
    Thawam is the person who has been a thug and involved in lots of ilegal activities including miss using government properties.
    If he is talking about truth, very small question that is about his total assets and the way he had earn those.
    If he has guts, ask him to declare it, and than talk about others lie!
    If he gets what he wants, he will even joint TNA or JVP..... Its all money and benefits.......
    These people are shame for my hometown!
    Last election he has won by scolding the government and sitting in the same side? What is this? Who is cheating public? People expected you to be in the oponon but for a house and jeep Mr.Thawam forgot what he was talking in the meetings and the promisses he made to the public!
    They must be talking about breakage of mosque in the PC meetings and come up with solutions! Simply they will wait till next election and than they SLMC will make the news as usual and cheat the people! Its like crocodile story!....

    ReplyDelete
  6. ஆமாங்க, இவர்கள இதையெல்லாம் செய்வது குடி போதையில்தான் என்பதை அவர்கள் அருகிலிருந்து அறிந்த எவரும் சாட்சி பகர்வர். விடயம் அவ்வாறிருக்க ... இவர்கள் ஒழுக்கத்தை பற்றி பேச, சிந்திக்க முடியுமா? அப்படி இவர்கள் ஒரு முஸ்லிம் சமுதாயத்தால் ஒழுக்கமாய் வளர்க்கப் பட்டவர்களாய் இருந்தால்... இச்சமுதாயத்தின் அடிமட்ட படிப்பறிவற்றவன் கூட புத்தி தடுமாறி உலவும் புத்தர்களின்

    ReplyDelete

Powered by Blogger.