வவுனியாவில் வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா உதவி
(இக்பால் அலி)
பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா சாலம்பைக்குளம் மற்றும் சோவான புளியம்குளம் ஆகிய கிராமங்களில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு உலருணவு வழங்கி வைக்கும் வைபவம் சாலம்பைக்குளம் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் எ. எல். கலிலுர்ரஹ்மான தமிழ் மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை மான்னார் மாவட்டத்தில் காக்கையன்குளம் மற்றும் மதினா நகர் பகுதிகளுக்கு இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கபட்டன. இதில் வவுனியா மற்றும் மன்னார் பிராந்திய புனர்வாழ்வு திணைக்கள அதிகாரிகளான அஷ;nஷய்க் எம். எம் தௌபீக் மற்றும் என். பீ. ஜுனைத், ரபீக் பிர்தவ்ஸீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment