ரிஸானா நபீக் தொடர்பாக என்னுள் எழும் சந்தேகங்கள்..! உலமாக்கள் பதில் தருவார்களா..??
(பேகம் றஹ்மான்)
கடந்த புதன்கிழமை (09.01.2013) பல்கலைக்கழக வளாகத்தில் பலர் மத்தியில் காரசாரமான கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நான் என்னவென்று விளங்கிக் கொள்ளும் மனோநிலையில் இல்லாத காரணத்தால் விடுதியிற்கு சென்று விட்டேன். அப்போது என் கணவருடன் தொலைப்பேசியில் கதைத்தபோது, 'ரிஸானா நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.' அவருடைய வார்த்தைகள் என்னை ஏதோ ஒரு விதத்தில் பலமாகத்தாக்கியது. முஸ்லிமாகிய நாங்கள் அனைவரும் அநியாயமாக ஒரு குடும்பத்தினையே அழித்து விட்டோமோ என்று எண்ணி என் மனதிற்குள்ளே அழுதேன். தாங்க முடியாமல் என்னுடைய கணவருடன் இது தொடர்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்தபோது, இது ஷரீஆ சட்டம் என்று கூறி என்னுடைய கருத்துக்களுக்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதே விதமாக என்னுடைய கல்வி சார் நண்பர்களுடனும் கதைத்த போது அவர்களும் எனக்கு அதே பதிலினையே தந்தனர். அப்போது தான் என்னுள் பல கேள்விகள் எழுந்தன நான் இஸ்லாத்தை பிழையாகவா விளங்கி வைத்துள்ளேன். எல்லோருக்கும் விளங்கும் ஷரீஆ சட்டம் என்னுள் மாத்திரம் ஏன் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக சரியான தெளிவுகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் நான் இஸ்லாத்தை விளங்காத நிலையினிலே இருந்து விடுவேன் .இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே தயவு செய்து என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் என்று பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.
இதே விதமாக என்னுடைய கல்வி சார் நண்பர்களுடனும் கதைத்த போது அவர்களும் எனக்கு அதே பதிலினையே தந்தனர். அப்போது தான் என்னுள் பல கேள்விகள் எழுந்தன நான் இஸ்லாத்தை பிழையாகவா விளங்கி வைத்துள்ளேன். எல்லோருக்கும் விளங்கும் ஷரீஆ சட்டம் என்னுள் மாத்திரம் ஏன் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக சரியான தெளிவுகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் நான் இஸ்லாத்தை விளங்காத நிலையினிலே இருந்து விடுவேன் .இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே தயவு செய்து என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் என்று பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.
இஸ்லாமிய சட்டம் மிகவும் நுணுக்கமாக பின்பற்றப்படுகின்ற சவூதி அரேபியாவின் 2005ல் ரிஸானா நபீகிற்கு நான்கு மாதக்குழந்தையை கொலை செய்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. என்னுடைய தெளிவின்மை என்னவெனில,; திட்டமிட்டு செய்வதுதான் கொலையாக இருக்கும் பட்சத்தில், தவறுதலாக அறியாமல் செய்யப்படுவதும் கொலையாகுமா? அதுமாத்திரமன்றி புட்டிப்பால் வழங்கும் போது மூச்சுத்திணறிதான் குழந்தை இறந்து இருக்கின்றது. இருந்தும் ரிஸானா நபீக் அக்குழந்தையை உயிர் பிழைக்க வேண்டும் என்கின்ற நோக்கில் கழுத்தின் பின்புறத்தில் மெதுவாக தட்டி அக்குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்று அவளும் பிரயாசைப்பட்டுத்தான் இருக்கிறாள். அவ்வாறு இருக்கும் போது இது எந்த வகையில் கொலைக்குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது எனக்குப்புரியவில்லை.
இத்தகைய நிலையில் ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு புட்டிப்பால் வழங்கும் பட்சத்தில் அக்குழந்தை மூச்சுத்திணறி இறக்குமாக இருந்தால் அத்தாய் குழந்தையை கொலை செய்தவள் என்றாகி விடுமா..?
அதுமாத்திரமன்றி அக்குழந்தையின் தந்தை ரிஸானா நபீகிற்கு பொது மன்னிப்பு வழங்க விருப்பம் இருந்த நிலையில் அந்த தாயின் மனோநிலையில் மன்னிப்பு வழங்கும் பக்குவ நிலை காணப்படவில்லை. எனவே ரிஸானா நபீகினுடைய வீட்டு எஜமானியின் விருப்பிற்கிணங்கவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏன்னுடைய தெளிவின்மை என்னவெனில், இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின்படி( நான் அறிந்த வகையில்) பெண்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், நிதானமாக சிந்திக்க முடியாதவர்கள் என்கின்ற பல காரணங்களின் அடிப்படையில் பெண்களை தீர்மானம் எடுத்தல் மற்றும் சாட்சி சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஒரு சில வரையறைகள் காணப்படுகின்றன. இங்கு என்னுடைய தெளிவின்மை என்னவெனில் இறந்த குழந்தையின் தந்தை நிதானமாக இருக்கும் பட்சத்தில் தாயின் முடிவு மாத்திரம் எவ்விதம் காரணமாக முடியும்? அதுமாத்திரமன்றி இஸ்லாத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவனின் இறப்பிற்கு மாத்திரமே அதிகூடிய நாட்களான நான்கு மாதங்களும் பத்து நாட்களுமே துக்க அனுஷ்டிப்பு செய்ய முடியும். மாறாக ஏனைய உறவினர்களாக இருக்கும் பட்சத்தில் அது ஆகக்கூடியது மூன்று நாட்களே. இங்கு குழந்தை இறந்தது 2005 ஆம் ஆண்டு ஆனால் குற்றவாளியாக கருதப்பட்ட ர்pஸானா நபீகிற்கு தண்டனை வழங்கியது 2013 ஆம் ஆண்டு.
அதுமாத்திரமன்றி எந்த ஒரு இஸ்லாமிய மனைவியும் தன்னுடைய கணவனுக்கு கட்டுப்பட்டு, அவர்களுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில் ஒவ்வொரு மனைவிமாரும் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய நிலையிலிருந்து நோக்கும் போதும் இங்கும் எனக்கு மங்கலான ஒரு நிலைப்பாடே தோன்றுகின்றது.
ரிஸானா நபீக் 2005.மே.4 ஆம் திகதி பணிப்பெண்ணாக சென்று அதே ஆண்டு அதே மாதம் 22 அம் திகதி குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சமயம் அக்குழந்தை உயிரிழந்துள்ளது. இங்கு ரிஸானா நபீக் பணிப்பெண்ணாக இணைந்து வெறுமனே பதினெட்டு நாட்கள் மாத்திரமே. ஆத்தகைய நிலையில் வீட்டு எஜமானி ரிஸானா நபீகிற்கு வேலைப்பயிற்சிகளை கற்றுக்கொடுக்காமல் விட்டது யாரின் தவறு? மாறாக அவ்வீட்டு எஜமானி மேற்பார்வை செய்யாது அப்படி என்ன முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தார்?
இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு தாயிற்கும் தன்னுடைய குழந்தையை பராமரிக்கும் பொறுப்பினை தாயிற்கே வழங்கியுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நான்கு மாதக்குழந்தையிற்கு புட்டிப்பால் வழங்கும் ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தாலும் கூட அத்தகைய சூழ்நிலையில் தாய் தன்னுடைய குழந்தையினை கவனிக்காமல் அப்படி என்ன முக்கிய வேலையில் ஈடுபட்டிருந்தார்?
அதுமாத்திரமன்றி ரிஸானா வீட்டுப்பணிப்பெண்னாகவே சென்றார்.தவிர குழந்தை வளர்க்கும் தாயாக அல்ல. மேலும் அவருக்கு அவருடைய சக்தியிற்கும் அப்பால் அதிக வேலைப்பளு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரிஸானா நபீக் எழுதியிருந்த கடிதத்தில் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் அனைவரும் இறைவனின் படைப்புக்கள்.மறுமையை ஈமான் கொண்டுள்ள நாங்கள் எவ்வாறு பலிக்குப்பலி வாங்கும் குரோத மனோநிலையில் இருப்பது? எது எப்படியான போதும் இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கின்றன. இருப்பினும் ஓர் அப்பாவி இலங்கைப்பெண்ணுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டதனை நினைக்கும்போது, நாம் படும் கவலைக்கு அளவே இல்லாது போகின்றது. மார்க்க அறிஞர்களே என்னுடைய தெளிவின்மையில் தெளிவினை ஏற்படுத்தும் படி மிகவும் பணிவுடன் உங்களிடம் வேண்டி நிற்கின்றேன்.
நடந்து முடிந்தவற்றை மாற்றும் இயலுமை இல்லாவிட்டாலும் நடந்தது நடந்து விட்டது என்று இருப்பதற்கு என் மனம் இடம் தறவில்லை. இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று உழைத்து தங்களுடைய குடும்ப வறுமையை போக்குவதில் வெற்றி கண்டும் உள்ளனர். அத்தகைய நம்பிக்கையில்தான் ரிஸானா நபீக்கும் பல எதிர்பார்ப்புக்களுடன் சென்றார். ஆனால் அவரது உயிர் அநாதரவாக்கப்பட்டது யாரின் தப்பு...? அவளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வாழ்க்கையும் மறுக்கப்பட்டு பெற்றோர் உறவினர்களை காணாமலே அம்மண்ணில் சங்கமமாகியது ஈடு செய்ய முடியாத கவலையையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றது.
allah is a grate.dont worry about this matter.insa allah riszana will get jennath
ReplyDeleteசகோதரி உங்களின் மனஉறுத்தலும் சந்தேகமும் நியாயமானது.ஏனெனில் நீங்கள் ஷரீஆ சட்டத்தினை குறைகாணவில்லை. மாறாக அது நிறைவேற்றப்படும் விதத்தில் அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட குடும்பத்தினரும் முறையாகத்தான் நடந்துள்ளார்களா? இதுதான் இஸ்லாம் கூறும் குற்றவியல் நடைமுறையா? என்பதில் சந்தேகிக்கின்றீர்கள். ஒருவனைக் கொலை செய்தவனுக்கு கொலைதான் என்பதும் கண்ணுக்குக் கண் காதுக்குக் காது மூக்குக்கு மூக்கும் பழிவாக்கமுடியும். என்பது இஸ்லாம் என்பதில் எந்தவொரு முஸ்லிமும் சந்தேகப் படக்கூடாது .சந்தேகப்பட்டால் அதை மறுத்தால் அவர் இஸ்லாத்தினை மறு்க்கின்றார். ஆனால் கொலைக் குற்றவாளியை இனங்கான்பதிலும் ஷரீஆ மிகவும் நேர்மையை எதிர்பார்க்கிறது.குற்றவாளி தப்பித்து விட்டாலும் நிரபராதி எக்காரனம் கொன்டும் தண்டிக்கப்படக் கூடாது என்று நவீன சட்டங்கள் கூறுவதை விட பல மடங்கு முன் சென்று குற்றவாளியை இனங்கான்பதில் நியாயத் தன்மையை வலியுறுத்துகின்றது.குற்றவாளியின் வயது மட்டுமன்றி குற்றமிழைத்த சூழ்நிலை மனோ நிலமை போதிய சாட்சிகள் நியாயமான கருத்துப்பரிமறல் சந்தேகமின்றி குற்றம் நிறுபிக்கப்படல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேன்டும். ஆனால் இவ்விடயங்களில் சிலவேளை தவறுகள் ஏற்றட்டிருக்கக் கூடும் . இவற்றில் நாம் சவுதி காவல் துறை சார்பாகவோ அதிகாரிகள் சார்பாகவோ அவர்களின் நேர்மையினை உத்தரவாதம் கூற முடியாது.ஏனெனில் அவர்களில் சில பல மோசமான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் கண்டவர்கள் அவற்றை ஏற்கமாட்டார்கள்.எனவே ஷரீஆ சட்டத்தினையும் சவுதி அதிகாரிகளின் பங்கினையும் சம்மந்தப்பட்டோர் பிரித்துத் தெளிவுபடுத்தவேண்டும். அதுவன்றி ஷரீஆ சட்டம். எதுவும் பேச வேன்டாம் என்று கூறுவோமாகில் இஸ்லாம் தொடர்பாக ஏனைய சகோதரர்கள் மேலும் மேலும் கேள்விகளை எழுப்புவார்கள்.
ReplyDeleteநான் சந்தேகம் கொண்டதில் ஒன்று: இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே.
ReplyDeleteAppreciated...!
ReplyDeleteசகோதரியின் ஆதங்கம் நியாயமானதுதான்...!
ReplyDeleteஆனால் அதற்கு இந்த மௌலவி மார்களிடம் பதில் இல்லை...!
நான் மேலும் சில விடயங்களை சகோதரியின் கேள்விகளுடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்
1. ஏன் Soudi அரசாங்கம் முறையான விசாரணை நடத்துவதற்கும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வில்லை
2. Soudi நிறை வேற்றியது இஸ்லாமிய தண்டனையா Soudi தண்டனையா ?
இதை இஸ்லாமிய தண்டனை என்றால்...!.
I ) ஏன் அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்த தண்டனை நிறை வேற்றுவதில்லை (எந்த குர்ரானில் கூறப்படுள்ளது இவர்களுக்கு விதிவிலக்கு )
II ) கொலை செய்வதற்கு திட்டமிட்டு கொலை செய்தாலே அது கொலை, அதகுத்தான் கொலை தண்டனை. இது ஒரு accident, இதற்கு கொலை தண்டனை எந்த இஸ்லாத்தில் உள்ளது ....?
ஓ மௌலவி மார்களே Soudi செய்வதெல்லாம் சரி என்று பத்வா கொடுக்கவராமல் சிந்தித்து அறிக்கை விடுங்கள்...!
TNTJ இன் அறிக்கை போன்று முட்டாள் தனமான அறிக்கைகளை விட வேண்டாம்...!
சகோதரியே நியாயமான கேள்விகள் ......
ReplyDeleteஎல்லோருக்கும் இறைவன் தெளிவை தரட்டும் .
Why all are comments only writing here?They should contect saudi arabia embassy and should ask more details of late Rizana nafeek incidents.Only comments writing here,saudi arabian embassy or other high positions members never read our comments here.
ReplyDeleteசகோ.பேகம். ரிஸானா விடயத்தில்,இலங்கை,இந்தியா சட்டங்களையும்,மக்களின் மனநிலையிலும் இருந்து பேச வேண்டாம்.அடுத்து என் கேள்விளை தெளிவு படுத்துமாறு வேண்டுகிறேன்.
ReplyDelete1. பணம் கொடுத்து சட்ட ஓடடைகள் நிரப்பப்பட என்ன காரணம் இருந்தது?அப்படி ஒரு நிலை இருந்திருப்பின் சஊதி அரசின் வேண்டகோள் ஏற்கப்பட்டு அந்த ஹுதைபியா குடும்பம் சலுகைகளை பெற்றிருக்க வாய்ப்பு அதிகமாகும்.
2.ரிஸானாவை கொலை செய்யும் அளவுக்கு அந்த ஹுதைபியா குடும்பம் கோபம் ஏற்பட ஏதாவது காரணங்கள் உண்டா?
3.ரிஸானவை கொலை செய்வதால் அந்த ஹுதைபியா குடும்பத்துக்கு ஏற்படும் நன்மை தான் என்ன.?
4.கிட்டத்தட்ட 5 அல்லது 7வருடங்கள் சாதாரணமாக ஒருவருடன் பகை இருப்பின் அதற்குறிய அடிப்படை என்னவாக இருக்கும்?
5.வெறும் 18 நாற்களில் ரிஸானாவுக்கும்,ரிஸானாவின் எஜமாகர்களுக்கும் ஏற்பட்ட பகை என்ன?
6,சாதாரணமாக காழ்ப்புணர்வு ஏழைகளுடன் வருவதில்லை அனுதாபம் தான் வரும் ஆக ரிஸானாவின் நிலை என்ன?பண்காரியா?ஏழையா?
7.கொல்லப்பட்ட அல்லது இறந்த குழந்தையின் தாய்-தந்தை இருவருமே கடைசிவரை மன்னிக்கவில்லை ஏன் என்ற கேள்வி பலர் இடத்திலுள்ளது.?
8.எத்தனையோ மரணதண்டனைகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்க மீடியாக்கள் ஏன் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்ற கேள்வி?.................
குறிப்பு.(வியற்நாம்,ஈராக்,போஸ்னியா,ஆப்கானிஸ்தான்,பலஸ்தீன்,காஸமீர் மற்றும் முஸ்லிம்கள் வாழுகின்ற பல நாடுகளில் ஐரோப்பாவும்,அமெரிக்காவும் நடத்துகின்ற அநீதிகள் மறைக்கப்படுகிறதே?) இவைகள் மட்டுமல்ல இன்னும் நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம்
by contact
Seyed N Deen
Turkey
ahlastrd@gmail.com
அல்ஹாஸ் நீங்கள் குறிப்பிடும் நாடுகளில்நடைபெற்றதாக சொல்லும் அநீதிகளை அநீதிகள் என்று உங்களால் ஆவனபடுத்த பட்டதா அவை உலகின் முன்வைக்கபட்டதா எதனையும் உரிய முறையில் உலகின் முன்வைதால் உலகம் ஏட்கும் அல்ஹாஸ் நீங்கள் அறபிகளுடன் பழகி இருக்கிறீர்களா அறபிகளுடன் பழகிய ஒருத்தராவது சொல்லட்டும் அறபிகள் நல்லவர்கள் என்று??? பிடிவாதமும் மூர்கதுக்கும் பெயர்தான் அறபிகள் அவர்கள் எதனை கண்டார்களோ அதில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள்
ReplyDeleteமன்னிக்கும் குணம் ஈமானின் ஒரு அம்சம் யாரிடம் மன்னிக்கும் குணம் இல்லையோ அவரிடம் ஈமானிய அம்சத்திலும் குறை இருக்கவே செய்யும் இங்கே கொலைக்கி கொலை பல்லுக்கு பல்லு என்று அல்லாஹ் கூறி இருக்கிறானே ஒழிய அல்லாஹ் அப்படித்தான் நடக்க வேண்டும் என அவாகொள்ளவும் இல்லை வலியுறுத்தவும் இல்லை அதட்கு மாற்றமாக மன்னிப்பையும் விட்டுகொடுப்பையும் பற்றியேதான் அல்லாஹ் அதிகம் குஃஆனில் பேசுகிறான்
நான்கு மனைவிகளை முடிக்க முடியும் என்பது இஸ்லாதில் உள்ள ஒரு அனுமதியே அன்றி அதட்காக எல்லோறும் அப்படிதான் செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தவில்லை அல்லவா அதுபோன்றுதான் தண்டனைகள் பற்றிய விடயங்களும் சொல்லபட்டிருக்கிறதே அன்றி அதை ஊக்குவிக்கவோ வலியுறுத்தவோ இல்லை அதட்குமாற்றமாக மன்னிப்பையும் பொறுமையையுமே அல்லாஹ் வலியுறுத்துகிறான்
நபி மார்கள் கூட தவறுதலாக கொலை செய்திருக்கிறார்கள் நபி மூஸா அலைஹிஸலாம் கொலை தவறுதலாக ஒருத்தரை கொலை செய்துவிட்டுதான் பிர் அவுனின் சாம் ராஜ்ஜியத்தை விட்டு சிரியா-பஸ்தீன் ஜோர்தான் தேசதிட்கு தப்பி வந்தார்கள் அதுபோல் வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றுள்ளன அறபிகள் அஜமிகளை வெறுக்க ஆறு ஏழு வருடங்கள் யெல்லாம் தேவை இல்லை ஒரு நொடி போதுமானது தாயிப் வீதிகளில் வாழ் நாளில் ஒருதடவையாவது போய் நடமாடி பாருங்கள் அறபிகளின் வெறுப்பு என்றால் என்ன என்பதை அனுபவித்து உணர்வீர்கள்
அறபிகள் பணதிட்கோ நன்கொடைக்கோ முன் உரிமை கொடுப்பது கிடையாது அவர்களுக்கு முக்கியம் குடும்ப கௌரவமும் குடும்பத்தின் பேரும் புகழுமே கேவலம் ஒரு குழந்தைக்காக அல் உதைபி குடும்பம் அரசிடம் கை ஏந்தி கொடுத்ததை வாங்கி கொண்டனர் என்ற பெயரை அடுத்த குடும்பத்தினரால் பேச படுவதை எந்த உதைபி குடும்ப அங்கத்தவர்களுமே சகிக்க மாட்டர் நம் நாட்டில் பண்டார நாயக்க குடும்பம் சமுர்த்தி உதவி பெருவதை விரும்புவார்களா என்ன கஷ்டம் வந்தாலும்??? அதுபோன்றுதான் அறபிகளில் செல்வாக்கும் பேரும் புகழும் உள்ள எந்த குடும்ப கோத்திரத்தவரும் கை நீட்டி அரசிடம் உதவி பெருவதை இழிவாகவும் கேவலமாகவுமே கருதுவர்
துக்கம் நாலுமாதங்களுக்குமேல் சொந்த கணவனுக்கே அனுஸ்டிக்காத போது ஏழு வருடமாக துக்கம் அனுஸ்டிக்கும் அந்த குடும்பதிட்கும் இஸ்லாமிய பண்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்???
அழகான கேள்வி, மிக அழகான கேள்வியும் சந்தேகமும் கூட .இனி வரும் காலங்களிள் ரிசானா வின் விடயத்தை முன்னுதாரணமாகவைத்து-எந்த காலகட்டதிலையும் பெண்களை வீட்டுப்பனிப்பெண் களாக எந்த ஒரு வெளிநாட்டுக்கும் அனுப்புவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் .உதாரணமாக பாகிஸ்தான் ,இந்தியா ,பங்களாதேஷ் போன்ற நாடுகளைப்போல் ,குறிப்பாக பங்களாதேஷ் ஸ்ரீலங்கா வைவிட மிக வறுமையான நாடாக இருந்தாலும் கல்வி அறிவில் பலவீணமாக இருந்தாலும் அங்குள்ள ஆண்கள் ஸ்ரீலங்கா ஆண்களை விட எவ்வளவோ மேல் என்றுதான் சில விடயங்களில் சொல்லவேண்டும் ,அவர்கள் மிக சொற்ப மாதாந்த வருமா னதுக்கு அதுவும் எப்படிப்பட்ட தாழ்ந்தவேலைகளையும் gulf country களில் செய்பவர்களில் மிக பெரும்பான்மையினர் இவர்களாகத்தான் உள்ளனர் .காரணம் அவர்களுக்குள்ள பொறுப்புக்கள், அப்பொறுப்புக்களில் மிக முதன்மையானது .தனக்கு என வீடு ஒன்றை உருவாக்கி கொள்வது.அப்போதுதான் அவர்களால் திருமணம் செய்துகொள்ள முடியும் மணப்பெண் கேட்கும் மஹர் மற்றும் ஜுவல்ஸ் கலையும் கொடுக்க முடியும், நம் நாட்டு முஸ்லிம் சமுதாயங்களிள் உள்ள ஆண்கள் பெண்களிடம் இவைகளை கேட்டால் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள் என்ன செய்வார்கள் இதை போன்ற பல ரிசானா உருவாகுவதுக்கு கு வழி செய்பவர்களே நாம்தான். அரசாங்கம் இவைகளைப்பற்றி கவலை படப்போவதில்லை காரணம் பல இருந்தாலும் வெளிநாட்டு நாணய வருமானம் இதனால் கிடைப்பதும் ஒரு முக்கிய காரணம் .
ReplyDeleteஇஸ்லாமை பற்றி மார்பு தட்டி பேசும், தப்லீக் என்றும் தௌஹீத் என்றும் சுன்னத் ஜமாஅத் என்றும்.இஸ்லாமிய சரீஅத் சட்டம் பேசும் நம் நாட்டில் உள்ள உலமாக்கள் மற்றும் சமூக தலைவர்கள் (அரசியல் வாதிகள் அல்ல அவர்கள் இதற்கு அப்பாட்பட்டவர்கள்) எத்தனை நபர் சீதனம் ஆண்கள்தான் பெண்ணுக்கு கொடுக்கவேண்டும் என்ற கருத்தை உரத்து சொல்லி இருப்பார்கள் ஏன் அவர்கள் அவர்களின் சொந்தங்கள் எத்தனை நபர் பெண்ணுக்கு மஹர் கொடுத்து வீடு கட்டி திருமணம் செய்து இருப்பார்கள் அதுவும் வேண்டாம் சீதனம் வேண்டும் திருமண invetation களையேனும் புற க்கனித்தார்களா இதைப்போல் எவ்வளவோ கூறமுடியும்,அதிகமானோருக்கு இஸ்லாம் நாவில் மட்டும்தான் உள்ளது உள்ளத்தில் இருப்பதை அவர்கள் அறிவார்கள் அல்லாஹ் அறிவான்.ஒவ்வொரு ஆணும் அவரவர் வீட்டைக்கட்டிக்கொண்டு திருமணம் செய்தால் சமூகத்தில் உள்ள 90 % பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் .
ரிசானாவின் விடயம்தான் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்ற போதும் இன்னும் சில காலங்களில் மறந்து விடுவோம் நாளை வேறு ரிசானா அல்லது ,மாலினி அல்லது காயத்திரி போன்றவர்களுக்கு வேறு ஒரு சம்பவம் ஏற்படும் அப்போது அதைப்பற்றி குரல் கொடுப்போம்.இது வாழையடி வாழையடியாக தொடரத்தான் போகின்றது. நம் ஆண் வர்க்கமும் அவர்கள் பெற்றோரும் உலமாக்களும் சமூக தலைவர்களும் உள்ளத் தில் இஸ்லாம் நுழையும் வரை.
வயதை மாற்றி அனுப்பிய subஐ ஜெயிலில் அடைத்துள்ளார்கள் .வரவேட்கலாம் ஆனால் இது மட்டும் போதுமா?
இறுதியாக எனக்கும் ஒரு சந்தேகம் ரிசானாவின் தந்தை 45 வயதுள்ள ஆரோக்கியமான மனிதன் போல்தான் என்னத்தோன்ருகிறது.ரிசானா சவூதி வந்தது 2005 யில் அப்படியாயின் அவர் தந்தை வயது 38 இருந்து இருக்கும். ஏன் அவரால் தொழில் செய்ய முயலவில்லை , இன்னும் ரிசானாவின் தாய் தான் இப்போதும் விறகு சேகரித்து வாழ்க்கை நடாத்துவதாக media மூலம் அறிய கிடைத்தது அப்படியாயின் தந்தை நிலை என்ன?
சகோதரியா
ReplyDeleteஇந்த விடயத்தில் எல்லோருக்கும் மன வழி உண்டு நாம் முட்டு முழுதாக saubi ஐ குரெய் கூறுவது சரியில்லை
1.வைத்திய பரிசோத்தனில் கலிதில் கை அடையாளம் பதித்து இருந்ததாம் தடவினால் கை அடையாளம் இருக்குமா
2. சரீயா சட்டத்தில் வழக்காளி மன்னிகாவிட்டால் யாருக்கும் வற்புறுத்த உரிமை இல்லை
3.குழந்தை இன் தாய் பய்ச்சி அழிப்பது அல்ல ஸ்ரீலங்கா பீரோ பைச்சி கொடுத்து அனுப்ப வேண்டும் இதுக்கு அவெர்களை குரய்கூருவது தப்பு
4.சகோதரியே குழந்தயை தாய் தான் பராமரிக்க வேன்றும் என்ற வழமை ஸ்ரீலங்கா வில் இருந்தாலும் இது இஸ்லாமிய சட்டம் அல்ல சள்ளலஹு அள்ய்கிவச்சலம் கூட கலீமா நாயகி இடம் அவர் வீட்டில் வளந்ததுக்கு ஆதாரம் உண்டு
5.அவல் எழுதிய கடிதம் அப்பில் கோர்டில் ஏன் கையளிக்க வில்லை தீர்ப்பு தவறு என்று வைதுகொல்லுவோம் அப்படியாஇன் அப்பில் பண்ணும் போது ஸ்ரீலங்கா அரசு அல்லது சம்பந்தப்பட்ட வர்கள் ஏன் ஒரு லோயரெய் நாடவில்லை எந்த எதிர்ப்பும் கோர்டில் ஒப்படிகாமல் மீண்டும் அதே தீர்ப்பு கொடுக்கும் வரெய் ஏன் சவூதி கு போய் five ஹோட்டல் களில் தங்கி வந்தவர்கள் ஏன் உண்மையான தீர்வு முறையை ஆராய தவெரியது போனவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் இது யாருடைய குற்றம் சரீயா கோர்ட் இந்த உண்மைகளை எப்படி அறிவார்கள் கனவு காண்பார்களா இப்போது கேள்வி கேப்பது சில வேலை நம்மை ரித்ததில் ஆகிவிடும் சரீயா சட்டம் சவூதி மண்ணில் மாத்திரம் தான் உள்ளது இதை இல்லாமல் செய்ய சில சக்திகள் நம்மை பயன்படுத்த நினைகிறது கவனமாக செயற்பட தாழ்மையுடன் கேகிரன்
இதைத்தாதானம்மா நாங்களும் கேட்பது.........? இதே கேள்விகள் நிச்சயம் மறுமையில் , ON THE DAY ஒப் JUDGMENT நாளில் மன்னர் அப்துல்லாவிடமும் , அந்த தாயிடமும் , தீர்ப்பு கொடுத்த நீதிபதியிடமும் கேட்கப்படும்.. அந்த நாள் படு பயங்கரமாக இவர்களுக்கு இருக்கும் எனபது மட்டுமே இப்போது சொல்ல முடியும்......... அரபிக்காரனகள் இங்கிருந்து ஒரு HOUSE MAID ஐ எடுக்கும்போது ஒரு அடிமையை வாங்குகிறோம் என்று தான் காசு கொடுத்து எடுக்கிரானுகள்.......... இதை ஒரு அரபியே சொன்னான்.. யாரிடம் சொல்லி அழ ?............
ReplyDeleteகுழந்தை மரணித்துள்ளது.அதன் அருகே ரிசான.சில நொடிகளில் குழந்தையின் தாய்.குழந்தையை கொன்றது ரிசான என்கிறாள் அந்தத் தாய்.ரிசானாவோ அதை மறுக்கிறாள்.ஈற்றில் போலீஸ் வந்து மருத்துவரின் முடிவுக்கு போகிறது.கழுத்து நெறி படவில்லை என்றாலும் கழுத்தில் ரிஸானாவின் விரல் அடையாளம் உள்ளது என்கிறது மருத்துவர் ரிபோர்ட்.பின் நீதிமன்றம் செல்கிறார்கள்.
ReplyDeleteநீதிமன்றம் அந்தத் தாயை விசரிக்கின்றது.மருத்துவரின் ரிபோர்டைப் பார்க்கிறது.ரிசானாவையும் விசாரணை செய்கிறது.பின் ரிசானாதான் கொலையாளி என்று மரணதண்டனையை தீர்ப்பளிக்கின்றது.இங்கு ரிசானாவுக்கு சரியான மொளிபெயர்ப்பாலரையோ,வயதையோ,தேவையான சாட்சியங்கலையோ சரிவர கவனத்தில் நீதிமன்றம் எடுத்ததாக தெரிய வில்லை.மரண தண்டனையையும் நிறை வெற்றி விட்டது.
ரிசான வேண்டுமென்று கொலை செய்ய வில்லை என்றாலும் தவறாக ரிஸானாவின் கையால் அந்த மரணம் ஏர்பட வாய்ப்புன்று காரணம் ரிசானவுக்கு ஒரு குழந்தையை பராமரிக்கும் பக்குவம் இல்லை.இது கூட அவள் ஒரு பணிப்பெண் குழந்தை பராமரிப்பவள் அல்ல என்பதனால் மரண தண்டனைக்குரியவளாகக முடியாது.
அடுத்து அந்த தாய் ஓரளவு ஈமான் இருந்திருந்தால் கூட மன்னித்திருப்பால்.பல ஆண்டுகள் வரை பலிக்கு பலி எடுக்கும் எண்ணம இருந்திருக்காது.
உண்மையில் அங்கு என்ன நடந்தது ,குழந்தை எப்படி இறந்தது என்பது அல்லவுக்குத்தான் வெளிச்சம். அதேநேரம் சவுதியில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் இருக்கின்றது என்பது பொய்.சவுதியின் சட்டத்துறை சில விடயங்களில் இஸ்லாமிய சட்டத்தின் சாயல் இருப்பதாக வேண்டுமென்றால் சொல்லலாம்.
ஹஜ்ஜுக்கு வருகிற ஒரு பெண் மஹ்ரம் இல்லாமல் வந்தால், அவர்களை ஹஜ் செய்ய விடாமல் திருப்பி அனுப்பும் அவர்கள்,வீட்டு பணிப்பெண்ணாக வரும் பெண்களுக்கு மஹ்ரம் கேட்பதில்லை,இது எந்த ஷரியத் சட்டத்தி உள்ளது.
ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருக்கக் கூடது என்பது இஸ்லாமிய சட்டம்,ஆனால் சவுதியில் பாடசாலைகளுக்கும்,பல்கலைகலகங்களுக்கும்,மார்கட்டுகளுக்கும் செல்லும் பெண்கள் தமது சாரதிகளுடன் தனியாகவே செல்கிறார்கள்.
இப்படி இன்னும் பல சட்டங்கள் அவர்களுக்கு ஏற்றபோல வைத்துக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்து இங்கு ஷரிய சட்டம் இருக்கு என்று சொல்வது எமது முட்டாள் தனம்.
இப்போ இஸ்லாத்தில் கொலைக்கு கொலைதான் சட்டம் என்கிறது.தவறுதலாக செய்த கொலைக்கு மரண தண்டனையை மார்க்கம் விதிக்க வில்லை.வேண்டுமென்று செய்த கொலைக்குத்தான் மரண தண்டனையை இஸ்லாம் விதியாக்குகிறது.முதல் கொலை செய்யத்தான் ஒருவன் தயங்குவான் தடுமாருவான்.இரண்டாவது கொலையை சாதரணமாக செய்து விடுவான்.எனவே ஒரு கொலைகாரநிடமிருந்து சமுகத்தை காப்பற்ற வேண்டுமென்றால் அவனை கொலை செய்வதை விட வேறு வழி இல்லை.அவனுக்கு கொடுக்கும் தண்டனையை மற்றவர் பார்க்கும் படி கொடுக்க சொல்கிறது இஸ்லாம்.ஏன் , இதைப் பார்ப்பவனும் பார்த்ததை அடுத்தவரிடம் சொல்பவனும் இவ்வளவு பெரிய தண்டனையைப் பார்த்து அப்படியான குற்றங்களை செய்ய முன் வர மாட்டான். இதனால் தனி மனித வாழ்வு மட்டுமல்ல சமூக வாழ்வும் காப்பாற்றப் படுகிறது.
அடுத்து இது ஒரு பெரிய விடயமாக இருந்தாலும்.இதப் பார்க்க மிகப் பெரிய விடயங்கள் சர்வசாதாரணமாக எங்களாலும் இன்றைய மீடியாக்களினாலும் பார்க்கப் படுகின்றது.பாலஸ்தீனத்தில் பச்சிளம் பாலகன்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கின்றார்கள்.கேஷ்மீரில் எமது குமர் பெண்கள் கூட்டு கூட்டாக கற்பழிக்கப் படுகின்றார்கள்,பர்மாவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உலமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.இவை அனைத்தையும் விட ரிஸானாவின் விடயம் பெரிது படுத்தப் பட காரணம், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை கொச்சைப் படுத்த வேண்டும் என்கிற காரமே தவிர வேறு ஒன்றும் கிடையாது.இதில் எமது முஸ்லிம் சகோதரர்களும் பலிகடாவாக்கி கொண்டுமிருக்கின்றார்கள்.சவுதி தனது நாட்டு மக்களுக்காக தான் நிறை வெற்றிய ஒரு தண்டனையை இஸ்லாமிய ஷரியத் என்று சொல்ல முடியாது என்பதை முதலில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த இடத்தில் கீழே வரும் கருத்துப்பட ஒரு நபிமொழி இருப்பதை நினைஊட்ட விரும்புகிறேன்."இவ்வுலகில் வெளிப்படையான சாட்சிகளைக் கொண்டுதான் தீர்ப்பு வழங்கப் படும்.அப்போது பாவி தப்பி விடுவான்,அப்பாவி தண்டிக்கப் படலாம்.இதற்கான உண்மையான தீர்ப்பு நாளை மறுமையில் இறைவன் முன்னாடி கிடைக்கும்."
நாம் இங்கு நிரந்தரமாக வாழ வந்தவர்கள் இல்லை. அல்லாஹ்வை வணங்கவே இவ்வுலகில் நாம் வந்துள்ளோம். வந்த நோக்கத்தை சரிவர புரிந்து எங்களின் வாழ்வை அமைத்து,மறுமைக்கான எமது வாழ்வை தயார் படுத்துவோம்.ரிசான சென்ற இடத்துக்கு இன்னும் சில நாட்களில் நாமும் செல்ல இருக்கின்றோம்.ரிசான சுவனம் நுழைய பலர் பிரார்திக்கின்றார்கள்.எமது மரணத்திற்குப் பின் எமக்காக பிரார்த்திக்க யாராவது உண்டா???????? ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய முக்கிய கேள்வி இதுதான்!!!!!!!!!!!
28 நாளான ஆண் குழந்தையென்றிற்கு தாயின் பாலே யமனாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் வவுனியா மூன்றுமறிப்பு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாய குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் புரையேறியதால் 28 நாளேயான ஆண் குழந்தை பலியானது.
ReplyDeleteகுழந்தைக்கு தாய் பாலை கொடுத்து விட்டு குழந்தை நித்திரை என நினைத்து தாய் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த குழந்தை புரைக்கேறி மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.இந்த செய்தி பற்றி சிந்தியுங்கள்.