இஸ்லாஹிய்யாவின் பட்டமளிப்பு விழா (படங்கள்)
(ஸஜாத் முஹம்மத்)
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா இஸ்லாஹிய்யா மாநாட்டு மண்டபத்தில் நேற்று 14-01-2013 காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீரும், இஸ்லாஹிய்யாவின் நிருவாசபைத் தலைவருமாகிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தலைமை தாங்கினார்கள்.
பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு அதிதிகளாக மாலைத்தீவு இஸ்லாமிய விவகார அமைச்சரும் முன்னால் ஷரீஆ, சட்டப்பீட பீடாதிபதியுமான அஷ்ஷெய்ஹ் முஹம்மத் ஸஹீம் ஸயீத் அலி, மாலைத்தீவு இஸ்லாமிய விவகாரத்திற்கான பிரதி அமைச்சரும், முன்னாள் மாலைத்தீவு தேசிய பல்கலைக்களழகத்தின் விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் முஹம்மத் தீதி, கேரளா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பிரதிப்பனிப்பாளர்அஷ்ஷெய்ஹ் இல்யாஸ் கன்னூத், பேரதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவ பீட பேராசிரியர் எம். ஏ. எம். ஸித்தீக், முஸ்லிம் விவகார அமைச்சின் பனிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம். ஸமீல் நளீமி, ஸ்ரீலங்கா ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயளாளர் அஷ்ஷெய்ஹ் எம்.எம்.ஏ. முபாரக் (மதனி), காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும் புத்தள மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், இஸ்லாஹிய்யாவின் பனிப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். மவ்ஜுத், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னால் அமீரும் ஆயிஷ சித்திக்கா கல்விநிறுவனத்தின் தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம். இப்ராஹீம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் 115 மாணவர்கள் பட்டம் வழங்கப்பட்டு கௌர்விக்கப்பட்டனர். முதல் நிலைச்சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இஸ்லாஹிய்யா இழந்த மூன்று ஆளுமைகளின் ஞாபகார்த்தமாக இவை வளங்கிவைக்கப்பட்டன. இஸ்லாஹிய்யாவின் முன்னால் விரிவுரையாளரும் ஜுஸ்உ அம்மயின் தமிழ் மொழி மூல அல்குர்ஆன் விரிவுரையை எழுதியவருமாகிய மர்ஹும் அஷ்ஷெய்ஹ் அஸ்வர் தீன் இஸ்லாஹி அவர்களின் ஞாபகார்த்தமாக இறக்காமத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்ஹ் எச்.எம். அப்துல் வஹாப் (இஸ்லாஹி)அவர்களுக்கும், மணிப்புலவர் ஷரீபுத்தீன் அவர்களின் பேரனும், கவிஞர் ஜின்னா ஷரீபுத்தீனின் மருமகனுமாகிய மர்ஹும் அஷ்ஷெய்ஹ் பஸால் முஹம்மத் (இஸ்லாஹி) அவர்களின் ஞாபகார்த்தமாக அனுராதபுரம் இகிரிகொல்லாவையைச் சேர்ந்த அஷ்ஷெய்ஹ் பீ.எம். ரிழ்ஸான் (இஸ்லாஹி) அவர்களுக்கும், இஸ்லாஹிய்யாவின் முன்னால் முகாமையாளர் மர்ஹும் ஐனுன் நயீம் மாஸ்டர் அவர்களின் ஞாபகார்த்தமாக புத்தளம் தில்லையடியைச் சேர்ந்தஅஷ்ஷெய்ஹ் வை.எம். அப்ராஸ் (இஸ்லாஹி) அவர்களுக்கும் பதக்கங்கள் வளங்கி கௌரவிக்கப்பட்டன.
Post a Comment