Header Ads



'மற்ற நாடுகளின் உழைப்பிலும். செலவிலும் நாங்கள் வளர்ச்சியடைய விரும்பவில்லை'


அண்டை நாட்டைக் காயப்படுத்தும் செயலில் சீனா இறங்காது. ஆனால், எல்லை விவகாரங்களில் உறுதியுடன் செயல்படுவோம் என்று புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜி ஜிங்பிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஜி ஜிங்பிங், வெளியுறவுக் கொள்கை தொடர்பான தனது முதல் பேச்சில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:அண்டை நாடுகளைக் காயப்படுத்தும் செயலில் சீனா ஒருபோதும் இறங்காது. மற்ற நாடுகளின் உழைப்பிலும், செலவிலும் நாங்கள் வளர்ச்சி அடைய விரும்பவில்லை. ஆனால், நாட்டு எல்லை உரிமை தொடர்பான விவகாரங்களிலும், நாட்டு நலன் தொடர்பான விஷயங்களிலும் உறுதியுடன் செயல்படுவோம் என்றார் ஜிங்பிங்.

No comments

Powered by Blogger.