அமைச்சர் அதாவுல்லாவுடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் (படங்கள்)
(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஜனாதிபதியினால் கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் மும்மொழியப்பட்ட வறுமையற்றதோர் இலங்கை தேசம் எனும் இலக்குடனான வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவான இல்லம் - வளமான நாடு எனும் செயற்பாடு தொடர்பாக பிரதேசமட்டத்தில் அலுவலர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்ன நிகழ்வு நேற்று அல் முனீறா உயர் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது.
இவ் விளக்கமளிக்கும் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் அதாஉல்லா, மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட உதவி திட்டப்பணிப்பாளர் ஐ.எல். தௌபீக், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 'திவிநெகும' நிறைவான இல்லம் - வளமான நாடு எனும் இத்திட்டம் தொடர்பாக உரை நிகழ்த்தினர்.
மேற்குறிப்பிட்ட அதிதிகள் அனைவரும் 'திவிநெகும' நிறைவான இல்லம் - வளமான நாடு எனும் இத்திட்டம் வறுமை இல்லாத ஒரு தேசத்தைக் கடடியெழப்ப முடியும். எனவும் அரசாங்கத்தின் திட்டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், தெளிவுபடுத்துவதும் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பும் கடமையாகவும் காணப்படகின்றன. எனும் தொனிப்பொருளை வைத்து உரையாற்றினர்.
இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், கணக்காளர் முஹம்மட் நஜிமுடின், பிரதேசசபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், எம்.றியாஸ் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
yes
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சகஜமப்பா .....
ReplyDeleteஇதுவொரு
நல்ல படிப்....பும் தா.........ன் !
நல்ல நடிப்....பும் தா.........ன் !
இவர்கள் தனகுத்தான் தான் நேர்மையாக இருந்தாலே எல்லோருக்கும் நிறைவான இல்லம்தான்.