Header Ads



'தேயிலைத்தூள், கிழங்கு, வெண்டிக்காய், கோவா' க்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்


அரசாங்கத்தினால் நேற்று அமைச்சரவை குறித்து ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.

செய்தியாளர் சந்திப்பில் இன்று இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் கருத்துரைக்கையில், இந்த அமைச்சரவை நியமனத்தில் ஒரு விடயத்திற்காக பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றாடலுக்காக பல அமைச்சர்களுக்கும், பூந்தோட்டங்களை கவனிப்பதற்காக ஒரு அமைச்சரும், அதனை விட நகைச்சுவையான விடயம் சீனி தொடர்பான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டமையாகும்.

இந்தநிலையில் எதிர்காலத்தில் தேயிலைத்தூள், பால்மா, கிழங்கு, வெண்டிக்காய், கோவா என்ற அடிப்படையில் தனித்தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.உலகில் எங்கு பார்த்தாலும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கௌரவ பிரஜைகளாக கருதப்படுகிறார்கள்.
எனினும், இலங்கையில் அது இல்லாமல் போயுள்ளது..

No comments

Powered by Blogger.