இளமையானவர் என்ற எண்ணத்தை எப்போது நிறுத்துவீர்கள்..?
தாங்கள் இளமையானவர்கள் என்ற எண்ணத்தை. 40 வயதுக்குள் நிறுத்தி விட வேண்டும் என பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டன் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியத்துறை சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக, 2,000க்கும் அதிகமானவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகம். எனவே, அவர்கள் "வயதானவர்கள்' என்ற அந்தஸ்தை, 62 வயதில் அடைகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு, 58 வயது முடிந்த உடனேயே வயதானவர் என்ற பெயர் ஏற்பட்டு விடுகிறது. இதே போல, ஆண்களுக்கு இளமை பருவம் என்பது, 38 வயதோடு முடிவடைந்து விடுகிறது. அதற்கு பின், அவர்கள் நடுத்தர வயதினராகி விடுகின்றனர். பெண்களுக்கு, 42 வயதோடு இளமை பருவம் முடிகிறது. வாலிப பருவம் என்பது, 32 வயதோடு முடிகிறது. இவ்வாறு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment