Header Ads



அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் குருநாகல் கெகுணுகொல்ல பாடசாலையுடன் நட்புறவு


(எஸ்.எல். மன்சூர்)

இவ்வாண்டு நடைபெறவுள்ள தயட்டகிருள (தேசத்திற்கு மகுடம்) செயற்றிட்டத்திற்கு அமைவாக அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகள் நட்புறவுப்பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும் தெரிவு  செய்யப்பட்டு அப்பாடசாலையின் நட்புறவுப் பாடசாலையாக குருநாகல் மாவட்டத்திலுள்ள கெகுணுகொல்ல தேசிய பாடசாலை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடசாலைகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும், கல்வி நடவடிக்கைகள், வகுப்பறைச் செயற்பாடுகள், ஆசிரியர் பயிற்சிகள், கற்றல் கற்பித்தல் உபகரணப் பயன்பாடுகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளை பார்வையிட்டு பரிமாற்றம் செய்யும் நோக்கில் இவ்வாறு சிறிய பாடசாலைகளை பெரிய பாடசாலையுடன் இணைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் இன்று (2013.01.18) ஆந்திகதி அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்திற்கு கெகுணுகொல்ல மகா வித்தியாலய அதிபர் ஏ.எச்.எம். சமீம் தலைமையில் எட்டுப்பேர் கொண்ட ஆசிரியர் குழாமுடன் வருகை தந்திருந்தனர்.

அவர்கைள நேசக்கரம் நீட்டி அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். அங்கு வருகைதந்த கெகுணுகொல்ல அதிபர் மற்றும் ஆசிரியர்களும் அறபா வித்தியாலய அதிபருக்கு நினைவு பரிசு வழங்குவதையும், அந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரியான எம்.ஏ.சி. கஸ்ஸாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(இந்நிகழ்வுகளில் அறபா வித்தியால அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மதுக்கு கெகுணுகொல்ல மகா வித்தியாலய அதிபர் ஏ.எச்.எம். சமீம் அவர்கள் நினைவு பரிசு வழங்குவதையும், அருகில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி மற்றும் ஆசிரியர்கள் நிற்பதையும், பிரதேச செயலாளர் நினைவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதையும் படங்களில் காணலாம்.





 

No comments

Powered by Blogger.