Header Ads



அரசாங்கத்தின் நல்லதிட்டங்கள் குறித்து எதிர்தரப்பினர் அச்சம் - அமைச்சர் அதாவுல்லாஹ்


(ரீ.கே. றஹ்மத்துல்லா) 

அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 'திவிநெகும' நிறைவான இல்லம்- வளமான நாடு எனும் இத்திட்டம் அனைவரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுமாயின் வறுமை இல்லாத ஒரு தேசத்தைக் கடடியெழப்ப முடியும் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் மும்மொழியப்பட்ட வறுமையற்றதோர் இலங்கை தேசம்' எனும் இலக்குடனான வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவான இல்லம்-வளமான நாடு எனும் செயற்பாடு தொடர்பாக பிரதேசமட்டத்தில் அலுவலர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று 15 பொத்தவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் அதாஉல்லா தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,,

அரசாங்கம் மக்களினதும் நாட்டினதும் நலன் கருதியே புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன. அவ்வாறு திட்டங்களை கொண்டுவரும் போது அரசாங்கம் நல்லவற்றை செய்துவிடுமோ என்ற அச்சம் எதிர்த்தரப்பினர் மத்தியில் அச்சம் அடையச் செய்துள்ளன. என்வே அரசாங்கத்தின் திட்டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், தெளிவுபடுத்துவதும் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பும் கடமையாகவும் காணப்படகின்றன.

எமது நாடு சகல வளங்டகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது எமது முன்னோரால் முறையாகப் பயன் படுத்தப்பட்டது. இக்காலத்தில் அவர்கள் மனித சக்திகளையே முழுக்க முழக்கப் பயன் படுத்தி இயற்கைக்கு ஒத்த வகையில் செயற்பட்டாhக்கள். அவர்களின் உணவு உற்பத்தி முறைகள், உரம் மற்றும் நாசினி பாவனை முறைகள், விலங்கு வளர்ப்பு போன்ற அனைத்து செயற்பாடுகளும் இயற்கையுடன் இசைந்து காணப்பட்டன.

இன்று மனிதனின் கல்வி மற்றும் தொழில்நுட்பங்களில் உச்சக்கட்டத்தில் சென்றிருந்தாலும் அவன் இயற்கையை குழப்பியே தமது செயற்பாடகளை அமைத்துவருகின்றான். இதனால் எதிhபாராத இயற்கை அனர்த்தங்கள், புதுவகையான நோய்கள்,பொருளாதார நெரக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றான்.

எனவே நமது நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு வெறுமனே கொடுப்பனவகளையும், மானியங்களையும் வழங்கி வைப்பதன் மூலம் இல்லாமல் செய்ய முடியாது. அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், போசாக்கு மற்றும் சுகாதார பழக்க வழக்கங்கள், தொழில் வாய்ப்பு, சந்தைப்படுத்தல், மூலதன வசதி, ஆலோசனைகள் போன்ற முக்கிய காரணிகளையும் இனம் கண்டு அவைகளை துறைசார்ந்த அதிகாரிகள் மூலம் வழங்கு வதற்கான ஒரு படிமுறையாகவே இதனை நோக்க வெண்டும் என்றார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம். வாஸித், பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக், மாவட்ட உதவி திட்டப்பணிப்பாளர் ஐ.எல். தௌபீக் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





3 comments:

  1. "வறுமை அற்றதோர் இலங்கை தேசம்"

    திவிநெகும -

    நிறைவான இல்லம் - வளமான நாடு ...யாவும் கற்பனை/பகல் கனவு.

    அமைச்சர்களுக்கு -

    சொகுசான இல்லம் - வளமான(ஊழல்)வாழ்க்கை ... முற்றும் நிஜம்.

    நீங்கதான் எப்போதும் அரசாங்கமாச்சே ......இத வீட்டில் இருந்து சொல்லியிருக்கலாமே!

    உண்மையை சொல்லுங்க சார் "திவிநெகும" மக்களின் நலன் கருதியா? அல்லது கூஜா துக்கிகளின் நலன் கருதியா?

    இந்த அரசாங்கங்களும் அரசியல் வாதிகளும் செய்த ஊழலே நாட்டின் பாதி கடனுக்கு மேல் தாண்டும் .

    நீங்க தான் சொக்கத் தங்கம் ஆச்சே!

    ReplyDelete
  2. sir
    ஒரு சந்தேகம் நான் இங்கே கீழ் பட்டியலிட்ட பிரச்சினையும் இந்த "நிறைவான இல்லம்-வளமான நாடு "திட்டத்தின் அடங்குகிறதா?

    01. பள்ளி உடைப்பு

    02. பதுளை பிரச்சினை

    03. அனுராதபுர மதரசா உடைப்பு

    04. ஹலால் சான்றிதள் பிரச்சினை

    05. இன்னும் தீர்க்கப்படாத நுரைச்சோலை வீட்டுத்திட்ட பிரச்சினை இன்னும் பல..

    இவை சம்பந்தமாக எமக்கு தெளிவு படுத்துவீர்கள் எனின் நாங்களும் "பொது பல சேனா"வுக்கு உதவியை இருப்போம். "நிறைவான இல்லம்-வளமான நாடு "திட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்கும்

    ReplyDelete
  3. யாழ் இணையமே!

    நாங்களும் இவர்களை அறிந்துதான் விமர்சிக்கிறோம்.

    அமைச்சருக்கு -

    நிறைவான இல்லம் - வீடுண்டு,வங்கிக் கட்டடம் உண்டு, ஆனால் அவர் அரச விடுதியில் படுப்பார் .

    சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு -

    நிறைவான இல்லம் - நுரைச்சோலை வீடுண்டு(SAUDI ARABIA),ஆனால் கொடுக்கமாட்டார், அவர்களோ குடிசையிலும், உடைந்த வீட்டிலும் படுப்பர்.

    பிரச்சினையை உருவாக்கியது யார்?
    நாடு அறிந்த ரகசியம்.

    தேர்தல் மேடைகளில் மட்டும் பீத்திக்கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.