Header Ads



மூதூரில் றிசானாவுக்காக பிரார்த்தனை


(மூதூர் முறாசில்)

மரண தண்டனைக்கு உள்ளான  றிஸானாவின் பிழைகளை மன்னித்து  மறுமையில் சுவனத்தை அருள வேண்டுமென   வேண்டி 11-01-2013 வெள்ளிக் கிழமை மூதூர் பிரதேசமெங்கும் 'துஆப் பிரார்த்தனை இடம் பெற்றது.

ஜும்ஆத் தொழுகையின் பின்பு ஜனாஸா தொழுகையில் ஈடுபட்ட மக்கள் சகோதரி றிஸானாவின் பிழைகளை மன்னித்து  சுவனத்தை வழங்குமாறு கள்பு உருகி கண்ணீர் சிந்தி   அல்லாஹ்வைப் பிரார்த்தித்தனர். மேலும்  றிஸானாவின்  இழப்பினால் பரிதவிக்கும் குடும்பத்தவர்களுக்கும்    மன ஆறுதலை  அல்லாஹுதஆலா   வழங்க வேண்டுமெனவும்   பிரார்த்தித்தனர்.
இதேவேளை, சில இடங்களில் பெண்கள் ஒன்றிணைந்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.




1 comment:

  1. எது எப்படியோ சவுதி அரேபியா இந்த பெண் விடயத்தில் மிகவும் மோசமான சட்ட குற்றத்தை செய்து விட்டார்கள்.அதாவது மரணித்த குழந்தையின் தாய்,இந்த கொலை குற்றம் சாட்டப்பட்ட Rizana nafeek குழந்தையின் களத்து நெறித்தே கொலை செய்தது என குற்றம் சுமத்தினார்கள்.இங்கு பல விஷயங்கள் கருத்தில் எடுக்கப்படவேண்டும்
    *எங்கே வைத்தியரின் அறிக்கை ( Doctor report)
    * நான்கு கண் சாட்சிகள் அல்லது ஒரு சாட்சிகள் சரி.
    * இந்த குழந்தையின் தாய் பிள்ளை பெற்று நான்கு (4)மாதம் மட்டுமே தான்,குறிப்பாக பெண்களுக்கு குழந்தை பெற்றதில்லிருந்து ஒரு வருட காலம் வரைக்கும் மனநிலை பாதிபகும் அல்லது வித்தியாசம் படும்.இவ்வாறான காலம்களில் பெண்களில் சாட்சிகல்லோ கருத்துகல்லோ ஏற்பது தவிர்க்கபடுவது விரும்பத்தக்கது.நான் மேற்சொன்னவைகள் கருத்தில் கொண்டு ஐரோப்பாவில்(Europe)அதிகமான நாடுகளில் தாய் சேய் விடுமுறைகள் (Mother Holiday)ஒன்றோ இரண்டோ வருடங்களுக்கு கொடுப்பார்கள்.
    * யாருக்கு தெரியும் இந்த குழந்தையின் தாய் ஒரு புத்தி சுவாதியம் வைந்தவேர் என்று.
    * Rizana Nafeek குக்கு ஒழுங்கான தமிழ் மொழிப்பாளர் வழங்கவில்லை.

    **** இவை எல்லாத்துக்கும் மேலை சிறந்து தான்,மன்னிப்பு கொடுப்பது,அதுதான் உயர்ந்த இஸ்லாமிய குணம்.

    ReplyDelete

Powered by Blogger.