Header Ads



குவைத்தில் அல்குர்ஆன் மனப்பாட போட்டி


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

"எவருடைய உள்ளத்தில் திருக்குர்ஆனின் எந்தப் பகுதியும் மனனமாக இல்லையோ அவர் பாழடைந்த வீட்டைப் போன்றவராவார்" (அறிவிபபாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ஆதார நூல்: ஸுனன் திர்மிதீ) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளுரைக்கேற்ப குவைத் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் வசனங்களை பதிய வைக்கும் அரும்பணியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பல்வேறு வகைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. 

அந்த வகையில், இன்ஷா அல்லாஹ்.... எதிர்வரும் 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு  குவைத் வாழ் தமிழ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் திருக்குர்ஆன் மனப்பாட போட்டியை மூன்று பிரிவுகளாக கீழ்க்கண்ட முறையில் ஏற்பாடு செய்துள்ளது 

குவைத் வாழ் தமிழ் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறும், பரிசுகளை பெற்றுச் செல்லுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 18.01.2013 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரீ 1434, ரபீவுல் அவ்வல் பிறை 6) 

நேரம்: நண்பகல் 12:30 மணி முதல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து...

 இடம்:

K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 

ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,

ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்று வட்டச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், 

ஃகைத்தான், குவைத்.

பிரிவு 1: பெரியோர்•12 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
•திருக்குர்ஆனின் 78வது அத்தியாயமான 40 வசனங்கள் கொண்ட 'அன் நBபஃ' ஸூராவை மனப்பாடமாக சொல்ல வேண்டும். 

பிரிவு 2: இளையோர்

•5 முதல் 12 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
•திருக்குர்ஆனின் 86வது அத்தியாயமான 17 வசனங்கள் கொண்ட 'அத் தாரிQக்' ஸூராவை மனப்பாடமாக சொல்ல வேண்டும். 

பிரிவு 3: சிறியோர்•5 வயதுக்குக் கீழேயுள்யோர் கலந்து கொள்ளலாம்.
•திருக்குர்ஆனின் 2வது அத்தியாயம் 'அல் BபQகரா' ஸூராவில் 255வது வசனமான 'ஆயத்துல் குர்ஸி'யை மனப்பாடமாக சொல்ல வேண்டும்.

பொது நிபந்தனைகள்:

•குவைத் வாழ் தமிழ்  ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
•நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
•ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களில் மூன்று பேருக்கும், பெண்களில் மூன்று பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
•முழுமையாக மனப்பாடமாக ஒப்புவிக்கும் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

குறிப்பு: 

 •பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
 •குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.

அனைவரும் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் வருக! 

அன்பர்களையும் நண்பர்களையும் அழைத்து வருக!! 

அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக!!!

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82




No comments

Powered by Blogger.