முஸ்லிம் சட்டத்தரணி கனவுக்கு பரீட்சை திணைக்களம் பங்கம் ஏற்படுத்துமா..??
(அத) இலங்கை சட்டக்கல்லூரியால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் 2012ம் ஆண்டு சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை அல்லது வேறு வழிமுறைகள் குறித்து சிந்திக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.
பரீட்சை குறித்தோ பெறுபேறுகள் குறித்தோ பிரச்சினை ஏற்படின் சட்டக்கல்லூரி அதிபர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதுவரை அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2013ம் ஆண்டு சட்டக்கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பொருட்டு 2012ம் ஆண்டு பரீட்சைகள் திணைக்களத்தால் போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது.
இந்த பரீட்சையானது சட்டக்கல்லூரியின் கோரிக்கைக்கு அமைய நடாத்தப்பட்டதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
Post a Comment