வன்னி மாவட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
வன்னி மாவட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் வன்னி மாவட்டப் பாடசாலைகளின் கல்விச் சமூகத்துக்குமிடையே இடம்பெற்றதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வன்னி மாவட்ட பாடசாலைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் வன்னி மாவட்ட கல்வி வலய அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இம்மாவட்டங்களில் பாடசாலைகளில் காப்படும் ஆசிரியர் சமமின்மை தொண்டர் ஆசிரியர் பிரச்சினை, மனித மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறை, வளப் பங்கீடுகள் சரியான முறையில் பகிரப்படாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அமைச்சுக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மணலாறுப் பிரதேச பாடசாலகளினதும் மீள் குடியேற்றப்பட்ட பிரதேச பாடசாலைகளினதும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அறிக்கைகள் அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்படுமெனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்..
Post a Comment