Header Ads



'நான் பெளத்தன் என சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை' ஜனாதிபதி மஹிந்த


இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி நாம் எமது பயணத்தை முன்னெடுப்பது அவசியம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, சகோதரப் பிணைப்பில் நாம் ஒன்றிணைந்து சகல மதங்களுக்கும் கெளரவமளித்து நாட்டை அபிவிருத்தியில் முன்னேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குகை விஹாரையை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்த விஹாரையை நிர்மாணிப்பதற்கு பெளத்தர்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் தமது பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இத்தகைய ஒற்றுமை ஐக்கியம் மதங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் இருக்க வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் அதனோடுதான் எமது பயணம் முன்னெடுக்கப்பட வேண்டும். இனங்கள் மதங்களுக்கிடையிலும் இத்தகைய ஒற்றுமை அவசியம்.

ஐக்கியத்தை ஏற்படுத்தியே நமது பயணத்தை முன்னெடுக்க வேண்டும் நான் பெளத்தன் என சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. அதேபோன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் அவர்களின் மதத்தில் பற்றுடையவர்கள். இவற்றில் ஒரு ஒற்றுமையுண்டு. இந்த நாட்டில் வாழும் நாம் அனைவரும் சகோதர பாசத்தில் பிணைக்கப்பட்டவர்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. நீங்கள் நாட்டை கட்டி எழுப்புவீர்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம் எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணை புரியட்டும். எங்களால் ஆனா பங்கை நாங்கள் நிச்சயம் செய்வோம். இனியேனும் இலங்கை சுபீட்சம் நிறைந்த நாடாக மாறட்டும்..!

    ReplyDelete

Powered by Blogger.